Results 1 to 7 of 7

Thread: மந்திரவாதி

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0

    மந்திரவாதி

    மறைந்தான் மந்திரவாதி மாயமாய்
    தெரிந்தான் மீண்டும் தந்திரமாய் – அவன்
    தேர்ந்த செயல்திறனை தெரிந்து கொள்ள
    தைரியமாக எழுந்து கேட்டான் ஒருவன்

    பறைவாய் இம்மன்றத்தில் தெளிவாய்
    மறைந்த முறை மறைக்காது பகர்வாய்
    சிந்தித்தான் மந்திரவாதி சிறிது நேரம்
    செப்புவேன் ஆயின் சிக்கல் உண்டு

    செத்து விடுவாய் நீ கேட்டால் ! சம்மதமா ?
    சலசலப்பு மன்றமதில் : சளைத்தானா நம் ஆள்?
    சிரித்தான் அச்சமின்றி : சரி சொல்
    சீக்கிரமாய் ! என் மனைவியிடம் மட்டும் !

    அமர்ந்தோரின் ஆர்பரிப்பு அமர்க்களம்!
    ஆயிரம் குரல் அங்கே ! அதிர்ந்தது அரங்கம்!
    என் சதிக்கு சொல் ! என் பதிக்கும் சொல் !
    அடடா ! என்ன ஒரு அவசரம் ! எல்லோருக்கும்!



    /Inspired by a joke read in Web/



    ... தொடர்ச்சி -மந்திரவாதி - பாகம் இரண்டு


    அவை நடுவே அந்த அவை நடுவே
    அழுகைக் குரல் சிறுமியின் குரல்
    அங்கிள் ! என் அம்மாவுக்கும் சொல்
    அரங்கம் அடங்கியது! ஆச்சரியம் அங்கே!



    அது ஏன்! அங்கலாயித்தான் மந்திரவாதி
    "அம்மா செத்துவிடுவாள் அதுவா வேண்டும் ?"

    அழுகை நிறுத்தி சொன்னது அக்குழந்தை
    அம்மா தான் செத்து மறைந்தாளே!
    அவள் உன் போல் மீண்டும் தெரியனும்
    அங்கிள் ! ப்ளீஸ் என் அம்மாவுக்கும் சொல் !
    Last edited by முரளி; 13-08-2015 at 06:45 AM.

  2. #2
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    நகைச்சுவைக்காக எழுதப்பட்டது என்று நான் புரிந்து கொள்கிறேன். ஆயினும் சக ஒருத்தி மீதான வன்முறையை நகைச்சுவைக்காக கூட ஆதரிக்க கூடாது எனும் உறுதியோடு இக்கவிதையை கடந்து சொல்கிறேன்.

  3. Likes முரளி liked this post
  4. #3
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது. சரியெனவும் படுகிறது.

    எனவே ஒரு சிறிய மாற்றத்தை எனது துணுக்கில் செய்தேன் ... .

    ஏதோ எனக்கு தெரிந்த இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். வாழ்க்கை என்பதே இனிப்பும் காரமும் கசப்பும் நிறைந்தது தான். கெட்டதும் நல்லதும் சேர்ந்ததே அது. எனது அரக்க குணம், உங்கள் இரக்க குணம் போல . அதை வேடிக்கையாக பார்க்கவே இந்த துணுக்குகள். வருத்தப் பட வைக்க அல்ல.


    சுகி சிவம் அவர்கள் 60 பூர்த்தியை ( சஷ்டியப்த பூர்த்தியை ) கிட்டதட்ட இப்படி நகைச்சுவையாக சொன்னார்கள். ( சரியாக நினைவில்லை )
    "எதிரியும் எதிரியும் மீண்டும் திருமணம் செய்யும் அறுபதாம் கல்யாணம் நம் கலாச்சாரத்தில் தான் பார்க்க முடியும் " . இது போல் ஆயிரம் ஜோக்குகள். படியுங்கள் . மனம் விட்டு சிரியுங்கள். சித்தாந்தகளை கொஞ்சம் தூர வையுங்கள் ! ஓகே வா !
    Last edited by முரளி; 09-09-2015 at 08:27 AM.

  5. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இறுக்கமான உலகில் மனசை லேசாக்கும் நோக்கில்அமைக்கப்பட்ட நகைச்சுவைக் கவிதை..

    சிரிப்புக் கூட வன்முறையை தூண்டக் கூடாது என்ற சிந்தனை விமர்சனம்..

    இரண்டும் நல்மன வெளிப்பாடும் சமூக அக்கறையுமே..

    மகிழ்ச்சி உங்களுடன் இருப்பதில்..


    முரளியின் அடுத்த கவியை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

  6. #5
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    நன்றி அமரன். நான் கவிதைக்கு புதிது என்பதால் கொஞ்சம் கரடு முரடு. இது போக போக சரியாகி விடும். அல்லது குறைந்த பட்சம் உங்களுக்கு பழகி விடும் . இதோ உங்களுக்காக எடுத்து விடுகிறேன் இன்னொரு கிறுக்கல் . ஸ்டாக்கில் நிறையவே இருக்கு !
    Last edited by முரளி; 19-05-2015 at 03:03 AM.

  7. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    எதுக்கு பயப்படுறோமோ அதை வச்சு நக்கல் பண்றதுதான் உலக வழக்கம்.

    ரவுடி, போலீஸ், அரசியல்வாதி, அரசன், எமன், மனைவி - ஜோக்குகளின் மையம் பார்த்தால் வாழ்வின் பயம் = அங்கதம் சூட்சுமம் விளங்கும்.


    முரளிக்கு பாராட்டுக்கள்.

  8. #7
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    நன்றி ரவிசேகர்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •