Results 1 to 8 of 8

Thread: ஜெ. வழக்கில் மீண்டும் அரசு வக்கீலாக களமிறங்குகிறார் ஆச்சாரியா!

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0

    ஜெ. வழக்கில் மீண்டும் அரசு வக்கீலாக களமிறங்குகிறார் ஆச்சாரியா!

    ஜெ. வழக்கில் மீண்டும் அரசு வக்கீலாக களமிறங்குகிறார் ஆச்சாரியா! - கர்நாடக அரசு உத்தரவு

    ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக சிறப்பு அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அரசு வக்கீலாக பணியாற்றியவர் ஆச்சாரியா. ஜெயலலிதா தரப்புக்கு வழக்கில் பின்னடைவு ஏற்பட இவரது வாதங்கள் ஒரு முக்கிய காரணம். ஆனால் அப்போதைய பாஜக அரசிடமிருந்தும், வேறு சிலரிடமிருந்தும் வந்த நெருக்குதல்களால் அரசு வக்கீல் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து தனது சுய சரிதை புத்தகத்திலும் தெரிவித்திருந்தார்.

    அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். ஆனால் ஹைகோர்ட்டில் ஜெ. மேல்முறையீடு செய்தபோது பவானிசிங்கை அரசு வக்கீலாக கர்நாடக அரசு நியமிக்கவில்லை. தமிழக அரசே நியமித்துக் கொண்டது. எனவே, இந்த நியமனத்தை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துவிட்டது. மேலும் கர்நாடக அரசு தனது வாதத்தை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 28ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

    கர்நாடக அரசு வக்கீலாக ஆச்சாரியாவை நியமிக்க மாநில அரசு திட்டமிட்டது. கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, இதுகுறித்து இன்று காலை ஆச்சாரியாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அப்போது அரசு வக்கீலாக ஆச்சாரியா வாதிட சம்மதமா என்று ஜெயச்சந்திரா கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஆச்சாரியாவும் சம்மதித்துள்ளார்.
    ஆச்சாரியாவுக்கு ஜெயலலிதா வழக்கு குறித்த முழு விவரமும் தெரியும் என்பதால், அவரே பொருத்தமானவர் என்று கர்நாடக அரசு கருதுகிறது. ஹைகோர்ட்டில், அப்பீல் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டாலும் கூட, ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீட்டுக்காக செல்ல வேண்டியிருந்தால், அப்போதும் ஆச்சாரியாவை கர்நாடக அரசு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், ஆச்சாரியாவை அரசு வழகறிஞராக நியமித்து கர்நாடக அரசு இன்று மாலை ஆணை பிறப்பித்தது. ஆச்சாரியா, வழக்கிற்குள் வந்துள்ளதால், மிகவும் ஆக்ரோஷமாக வாதங்களை எடுத்து வைப்பார் என்பதால், வழக்கில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆச்சாரியாவின் உதவி வழக்கறிஞராக சந்தேஷ் சவுட்டாவை நியமித்துள்ளது கர்நாடக அரசு. இவரும், ஏற்கனவே ஆச்சாரியாவின் உதவி வழக்கறிஞராக இருந்தவராகும்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இப்பத்தான் இதைப்பற்றி நினைச்சிட்டு இருக்கேன். நீங்க பதிஞ்சிட்டீங்க .
    கர்நாடக அரசை முதலாவது அரசை பிரதிகாதியாகச் சேர்க்காத மனுவே சட்டத்துக்கு புறம்பானது எங்கிறார் ஆச்சார்யா. கர்நாடகாதான் முதல் பிரதிவாதி என்று உச்சா நீதி மன்றம் முன்பே தீர்ப்பளித்ததாக எடுத்துக் காட்டி இருக்கார்.

    பவானிசிங்கின் நியமனம் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டது தவறு என்கிறது இந்த வழக்கை விசாரித்த் நீதிபதிகளுக்கு ஏன் தெரியாமல் போனது?

    என்னய்யா நீதித்துறை என்று சலிக்க வைக்கிறாங்கப்பா

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஆப்பு வச்சிட்டாரய்யா அன்பழகன்,

    மேல் முறையீட்டு வழக்கில் ஜெ. தரப்பு எவ்வளவு 1991-1996 வரை செய்த செலவுகளுக்கான ஆதாரம் எதையுமே சமர்பிக்கவில்லை. வழக்கு நடத்திய விதம் சரியில்லை, மதிப்பீடு சரியில்லை, அரசியல் உள் நோக்கம் இது மட்டும்தான் அவர்களது வாதம்.

    குமாரசுவாமி தனிப்பட்ட நிதி ஆய்வு வல்லுனர்களைக் கொண்டு சொத்துப்பட்டியலை ஆய்வு செய்து தன்னிச்சையாக தீர்ப்பு சொல்லுவேன் எனச் சொல்லி விட்டார். இதன் பொருள் தண்டனை உறுதி என்பதே
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. Likes jaffy liked this post
  5. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஆப்பு வச்சிட்டாரய்யா அன்பழகன்,

    மேல் முறையீட்டு வழக்கில் ஜெ. தரப்பு எவ்வளவு 1991-1996 வரை செய்த செலவுகளுக்கான ஆதாரம் எதையுமே சமர்பிக்கவில்லை. வழக்கு நடத்திய விதம் சரியில்லை, மதிப்பீடு சரியில்லை, அரசியல் உள் நோக்கம் இது மட்டும்தான் அவர்களது வாதம்.

    குமாரசுவாமி தனிப்பட்ட நிதி ஆய்வு வல்லுனர்களைக் கொண்டு சொத்துப்பட்டியலை ஆய்வு செய்து தன்னிச்சையாக தீர்ப்பு சொல்லுவேன் எனச் சொல்லி விட்டார். இதன் பொருள் தண்டனை உறுதி என்பதே
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    குற்றவாளிக்கு , அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் இல்லை என்பதைத் தெருவிலே கிரிக்கெட் விளையாடும் சிறுவன் கூட சொல்லுவான் . இந்த நடைமுறை தமிழக அரசுக்கும் , கர்நாடக அரசுக்கும் தெரியாமல் போனது விந்தையிலும் விந்தையே ! பவானி சிங்கை முன்பே தடுத்திருந்தால் , பொருள்செலவு , காலவிரயம் ஏற்பட்டிருக்காது .
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #6
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    ஜெ தரப்பு எந்த அளவிற்கு வாதமிட்டது என்பதற்கு ஒரு உதாரணம்

    //தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த சாட்சியங்களோடும் ஆதாரங்களோடும் 82% முதல் 92% நிரூபித்து இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் இதுவரை சாட்சிய ஆதாரங்களைக் காட்டவும் இல்லை. 30% முதல் 35% வரைதான் வாதிட்டு இருக்கிறீர்கள்.

    நீதிபதி குமாரசாமி//

    //35 மார்க் எடுத்தாலே பாஸ்தான்.

    ஜெ. வக்கீல் குமார்//

    //பள்ளிக்கூடத்தில் 35 மார்க் எடுத்தால் பாஸாக இருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தில் எதிர்தரப்பைவிட அதிக மார்க் வாங்கினால்தான் பாஸ் செய்ய முடியும். அப்படி பார்த்தால் உங்களைவிட அவர்கள் 65 மார்க் அதிகமாக வாங்கி இருக்கிறார்கள். அதனால் அவர்கள்தான் பாஸ்.

    நீதிபதி குமாரசாமி//

  8. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இவர்களது உயர் நீதி மன்ற வாதத்தைக் காட்டியே உச்ச நீதிமன்றம் அவர்கள் மேல்முறையீடு செய்தால் தள்ளுபடி செய்துவிடலாம்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அப்போ அம்மாவுக்கு கன்ஃபோம்..

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •