என்னவளே எனக்கென பிறந்தவளே...

என்னையும் மனிதனாய் மாற்றியவளே....

என்னுள் எப்படி புகுந்தாய்யடி...

என்னவளே என்னுயிராய் ஆனவளே....

எதையும் எதிர் பார்க்காமல் உன்னையே தந்தவளே....

உன்னை எப்படியடி வைத்து காப்பேன் ....

என்றும் எப்போதும் உன்னுடனே இருக்க வேண்டும் அன்பே...

உன்னை என் கண் இமை காப்பது போல் காக்கிறேன் நீயோ உன் நெஞ்சிலே வைத்து என்னை காக்கின்றாயடி...

வாழ்க்கை எதில் இருக்கிறது என்பது தெரியாமலே இருந்து விட்டேனடி...

நீ என் அருகில் வந்த அன்று தான் புரிந்து கொண்டேன் வாழ்க்கை இத்தனை அழகு என்பதை...

என்னவளே நீ உன்னுயிராய் நினைத்து என்னை காக்கின்றாய்.....

உன் தேவை என்ன என்று கேட்டு தெரிந்து செய்யும் என்னை விட என் தேவை என்ன என்று கேட்காமலே செய்யும் நீயும் என்....

தாய் தானடி....