Results 1 to 2 of 2

Thread: நதிநேசன்-தென்பண்டி தூறல்- சிரி சிரி சிரி

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    25 Nov 2014
    Location
    SINGAPORE
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    2,850
    Downloads
    0
    Uploads
    0

    Red face நதிநேசன்-தென்பண்டி தூறல்- சிரி சிரி சிரி

    சிரி..சிரி...சிரி

    ஆன்மா அருகில் அமரும் சிரிப்பு
    ஆடி அடங்கும் வாழ்வின் சிறப்பு
    புன்னகை பூக்கும் புல்லின் விரிப்பு
    புலரும் பொழுதின் பனியும் வியப்பு

    மழலை சிரிப்பு இறையை காட்டும்
    நிழலின் சிரிப்பு வெயிலை வாட்டும்
    குழலின் சிரிப்பே குயிலின் பாட்டும்
    கழலின் சிரிப்பே கணவன் நாட்டம்

    விழலின் சிரிப்பு வற்றா ஊற்று
    தழலின் சிரிப்பு தணியா காற்று
    உழலும் வரையே உடம்பின் கூற்று
    சுழலும் பூமியின் சிரிப்பை போற்று

    தென்றல் சிரிப்பில் மலரும் தோட்டம்
    மன்றம் சிரித்தால் மனதில் ஆட்டம்
    குன்றம் சிரிக்கும் குமரன் கோட்டம்
    என்றும் சிரித்தால் மறையும் காட்டம்

    நதிநேசன்

  2. Likes ravisekar, ஜானகி liked this post
  3. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    சிந்தனை சிரித்தால் கவிதை பூக்கும்.

    நதிநேசனுக்குப் பாராட்டுக்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •