மன்றம் வந்த தென்றல்
===========


தமிழ் மன்றம் வந்த
தென் பாண்டி தென்றல் நான்..

கவிதை வாசம் மிக்க மலர்களில்
வீச வருகிறேன்...

தமிழ் விளையும் பூமியில்
சற்று சதிராட வருகிறேன்

கவித் திறமும், தமிழ் தரமும்
கற்றுயுர வருகிறேன்..

இலையசைத்து, தமிழ் மணக்க
இசையமைக்க வருகிறேன்...

சங்கத் தமிழ் நா பழகும்
சிங்கப்பூரில் வசிக்கிறேன்...

தமிழ் உணவை பகிர்ந்து கொள்ள
பந்தி முந்தி வருகிறேன்...

அன்பு தேடி அறிவு நாடி
தமிழ் அகரம் ஓடி வருகிறேன்..

மன்றம் வந்த தென்றல் இவன்
மரபில் வணங்கி தொடர்கிறேன்...

நதிநேசன்

http://ganeshnarayanan70.blogspot.sg/