இந்தச் சமூகம் திருந்தாது. தனி மனிதன்தான் திருந்த வேண்டும். நான் படித்ததில் இருந்து தனிமனிதன் என்பவன் குடிப்பவன் மட்டும் அல்ல. குடிக்க வைப்பவனும்தான். ‘அரசு மதுக்கடைகளை மூடிவிட்டது, இனி நாம் கள்ளச்சாராயம் காய்ச்சிவிட வேண்டியதுதான்’ என்று கடையைப் போடுபவனும் தனிமனிதனே. ‘நம்முடைய பார்தான் அங்கீகரிக்கப்பட்டதாச்சே, இனி 24 மணி நேரமும் கடையைத் திறந்துவைத்து வருமானம் பார்க்கலாம்’ என்று நினைப்பவனும் தனிமனிதனே. பக்கத்து மாநிலங்களில் இருந்து மதுவை வாங்கி வந்து இங்கே அதிக விலைக்கு விற்பவனும் தனிமனிதனே. ‘மது எங்கே கிடைக்கிறது?’ என்று தேடி அலைந்து, அதைக் குடித்துவிட்டு பாவ விமோசனம் பெற்றுவிட்டதாய் உணர்பவனும் தனிமனிதனே..
குடிப்பவனைக் கேட்டால், விற்பதால்தானே குடிக்கிறேன் என்பான். விற்பவனைக் கேட்டால், குடிப்பவன் இருப்பதால்தானே விற்கிறேன் என்பான். புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். குடிப்பவனும், குடியை ஊட்டுபவனும் சேர்ந்து திருந்தினால் ஒழிய குடி முழுவதுமாய் ஒழிந்து விடாது.


நன்றி:http://manam.online/News/Social-Issu...icate-Liquor-6