மஞ்சள்நீர் தெளிக்கப்பட்ட
கடையின் முன்வாசல்..
நீரை உறுஞ்சும் காக்கை
அழைத்துக் கொண்டது
தன் உறவுளை..
தென்னங்கீற்றில்
பரவிக் கிடக்கும்
சிகப்புமஞ்சள் சூரியனின்
கீற்றுகள்..
அலைபேசியின் அழைப்பில்
அகச்சிணுங்கல்கள்..
இவைகளுக்கிடையே
அழிக்கப்பட்ட குயில்களின்
கேட்காத ஓசைகள்..
இன்றும்
உண்டியாக நெகிழிப்பைகளை
உண்ணும் இந்த மாடுகள்...
Bookmarks