Results 1 to 7 of 7

Thread: அவளுக்கென்று ஒரு மனம்

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    30 Oct 2012
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    15,641
    Downloads
    5
    Uploads
    0

    அவளுக்கென்று ஒரு மனம்

    எட்வர்ட் ஸார் , க்ளாஸ் பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்து கிட்டாராம்.....ஸ்கூல ஒரே கூட்டமா இருக்கு......என்று கத்திக் கொண்டே, மணிகண்டன் சைக்கிளை உருட்டி கொண்டே ஆற்று பாலத்தை கடந்து ஸ்கூக் நோக்கி சென்றான்.
    எட்வர்ட் ஸார் என் கணிப்பில் மிக கண்ணியமானவர். தமிழ், அறிவியல் இரண்டும் எடுப்பார். அவரை அடிக்கடி லைப்ரேரியீயில் சந்தித்து இருக்கிறேன்...
    வாங்க மீனா....இந்த ஊரிலேயே நூலகம் வர பெண் நீங்க மட்டும் தான்..என்பார்.
    கையில் இருக்கும் புஸ்தகதுத்ை பார்த்து விட்டு, ஓ..இதுவெல்லாம் கூட படிக்கிற பழக்கம் உண்டா...என்று வியந்து போனது உண்டு. பார்க்க மிக மிக நல்ல மனிதர்.
    பக்கத்து வீட்டு சேவந்தி அக்காவை பார்த்துக்க சொல்லி விட்டு, சேலையை இழுத்து சொருகி கொண்டு, உள்ளே குரல் கொடுத்து கிளம்பினேன்.
    "அப்பா.....இஸ்கூல் முடிக்க போயிட்டு வறேன்..."
    பதிலுக்கு அப்பாவின் இருமல் மட்டுமே பதிலாக இருந்தது.
    இஸ்கூல் வாசலில் ஒரே கூட்டம். எல்லாம் கிராமத்து மனிதர்கள். செங்கனார் கிழவன் கத்தி கொண்டு இருந்ததும், அதற்கு தலைமை ஆசிரியர் ஏதோ சமாதானம் சொல்லி கொண்டு இருந்ததும் தெரிந்தது.
    "வர சொல்லு அந்த ...மகன...வாய கட்டி, வயித்திதக் கட்டி, பள்ளிக் கூடம் அனுப்பிச்சா, இங்கே மொல்லமாரி தனம் பண்றாணா.."
    தலைமை ஆசிரியர் மிக பணிவாக, சமாதானம் சொல்லி கொண்டு இருந்தார்.
    "அதெல்லாம் ஒண்ணும் தப்பா இருக்காது...அவரை பற்றி எனக்கு நல்ல தெரியும்...அவர் அந்த மாதிரி ஆளு இல்ல"
    "நீ ஒண்ணும் பதில் சொல்லாத..அவன வெளியே வீடு..நாங்க பார்த்துக்கிறோம்..."
    "நீங்க உள்ளே நுழைய முடியாது....இதுக்கு மேல உள்ளே நுழைன்சீங்கன்ணா, போலீஸ் கிட்ட சொல்ல வேண்டி வரும்."
    "போலீஸ் பேர சொல்லி எங்களை பயமுருத்த முடியாது. எங்கள உள்ளே வீடு.....நாங்க அவன பார்த்துக்கிறோம்"
    நான் சந்தடி இல்லாமல், வேலியோர தழலை ஒதுக்கி விட்டு, இஸ்கூலின் பின் பக்கமாக நுழைந்தேன்.
    காலி மைதானத்தில், காலை பதினொரு மணி வெயில் சுட்டெறித்தது
    நான் படிக்கும் பொழுது எட்டாவது வரையே இருந்தது. இப்போது உயர்த்தி, பன்னிரெண்டாவது வரை இருக்கிறது. இப்போது இருந்தால், நானும் ப்லஸ் டூ வரை படித்து இருப்பேன்.
    உள்ளே சரஸ்வதி சிலையும், காந்தி சிலையும் அப்படியே இருந்தது.
    ஏழாவது வகுப்பும், எட்டாவது வகுப்பும் அமைதியாக இருந்தது. கோவிந்தன் சாரும், கலா மேடமும் க்லாஸ் வாசலில் நின்று கொண்டு இதை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள்.
    "மீனா....எப்படி உள்ளே வந்த....வாசலில் நிலவரம் எப்படி இருக்கு"
    "நான்..பின் பக்கம்மா வந்தேன்.....ஜனங்க ரொம்ப கோபமா இருக்காங்க...எட்வர்ட் ஸார் எங்க....யாரு அவரு மேல இப்படி பழி போட்டது.."
    "வேற யாரு...உன் அத்தை பொண்ணு வடிவுதான். அவளுக்கு மட்டும் ஸ்பெஶல் க்லாஸ் எதுக்கும் பொழுதே எனக்கு சந்தேகம் தான். நீ போய் மேல பாரு "
    மாடியில் ஆசிரியர்களுக்கு என்று இருக்கும் அறையில், தனியாக எட்வர்ட் பைபிள் படித்து கொண்டு இருந்தார்.
    என்னை பார்த்ததும், எந்த சலனமும் இல்லாமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தார்.
    ஸார்......வெளியே உங்க மேல ஜனங்க ரொம்ப கோபத்தித்ில இருக்காங்க. வாங்க பின் பக்கமா போகலாம்
    நான் ஹார்ம் லெஸ். எதுக்கு ஓடணும்
    அதெல்ல்லாம் இந்த ஊரு ஜனங்களுக்கு புய்ரியாது ஸார்..கோபத்தீல என்ன வேணா செய்வாங்க
    என்ன வேணாம்னா...கொலை செய்து விடுவாங்களா
    "அப்படி இல்ல ஸார்.....இந்த ஊரில உங்களுக்குன்னு நல்ல பேர் இருக்குது....அத்த எப்படியாவது காப்பாத்தி ஆகணும். "
    அதெல்லாம் எனக்கு கவலை கிடையாது...நான் எப்பொழுதும் போலத்தான் இருப்பேன்.. கர்த்தர் சிலுவையில் அறையும் பொழுது கூட, அவர்களை மன்னிக்கத்தானே சொன்னாரு
    இந்த கிராமத்து ஜனங்களுக்கு அந்த பொறுமை எல்லாம் புய்ரியாது ஸார்........வடிவு என் ஸார், உங்க மேல இப்படி ஒரு அபாண்டத்தை சொன்ன.....
    அதுதான்மா எனக்கும் புரியில....நல்ல படிக்க கூடிய பொண்ணு....கணக்கில சில சந்தேகம் இருக்கு...க்லாஸ் முடிஞ்சி வரட்டுமா....அப்படின்னு கேட்ட....நான் சனிக்கிழமை காலை வர சொன்னேன். ஏன்னா, மற்ற நாட்களிலே, சாயந்திரம் சர்சுக்கு போக வேண்டிய வேலை இருக்கு.....சனிக் கிழமை காலையில் ஸ்கூலுக்கு வந்தா... அப்ப யாருமே இல்ல.... அவ சந்தேகம் அத்தனையையும் தீர்த்திட்டு, வீட்டுக்கு போயிட்டேன். இன்னிக்கு காலையிலே முதல் பீரியட் முடிஞ்சா உடனே, வாசலில் ஒரே சத்தம். எட்டி பார்க்கிறேன், வடிவு அழுது கிட்டு இருக்கா...அவங்க அப்பா, அம்மா ...அதுதான் உங்க மாமா, அத்தை பெரிய கழியோட இருக்காங்க.
    என்னாலயே இத ஏத்துக்க முடியல...ஆனா, இந்த மாதிரி ஏன் அவ பண்ணினானு புரியல....
    எனக்கும் தெரியல....
    இத்ற்க்குள், தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் படை, மாடி வந்தது.
    "நிலமை ரொம்ப மோசமா இருக்கு..நீங்க பின் பக்கமா போறத்ுதான் பெட்டர்."
    "நோ வே..என்னால கோழை மாதிரி ஓட முடியாது. "
    "இல்ல ஸார்....ஜனங்க ரொம்ப கோபத்தில் இருக்காங்க.....நான் போலீஸுக்கு சொல்லி இருக்கேன். அவங்க வர, இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அதுக்கு முன் நமக்கு ஒரு ப்ரொதக்ஷன் தேவை. ஸப்போஸ் ஜனங்க அவங்களா வந்துட்டா, மிக பெரிய வயலந்ஸ் ஆகிடும்...புரிஞ்சுக்கங்க"
    நோ வே.....திரும்பியும் சொல்றேன்.....என்ன நடந்தாலும், நான் அத ஃபேஸ் பண்றேன்....என்ன ஜனங்க கிட்ட கொண்டு போங்க...அந்த பொண்ணு முகத்தை பார்த்து கேள்வி கேட்கிறேன்....
    அதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்லை....
    ஹெச் எம் அய்யா....ஒரு நிமிஷம் இந்த ஏழை பொண்ணு சொல்றத கேட்பீங்களா...என்றேன்
    என்ன
    எட்வர்ட் ஸார் மானம் போக கூடாது...ஏன்னா, அதுல இந்த இஸ்கூல் மானமும் இருக்கு.....ஸார் கோழை மாதிரி ஓடி போகவும் விரும்பலை....இதுக்கு ஒரே வழி இருக்கு....
    சீக்கிரம் சொல்லு
    "வடிவு சொன்ன சனிக்கிழமை நான் ஸார் கூட இருந்தேண்ணு சொல்லிக்கிறேன்.....ஜனங்களால ஒண்ணும் பண்ண முடியாது..."
    ஒரு கணம் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
    அதன் விளைவு தெரிஞ்சிதான் பேசரியா
    தெரியும்....உலகம் காரி துப்பும்..என்ன விடுங்க ஸார்...இந்த ஏழை சிறுக்கிய பத்தி கவலைப் பட யாரும் இல்லை....அஞ்சு வயசில அம்மாவ முழுங்கி, அப்பா குடியில, இருக்கிற நிலமெல்லாம் போய், இப்ப்பா தனி மரமா இருக்கேன். எங்க அப்பா கண் மூடின உடனே, இருக்கிற ஓலை பாயை எடுத்துட்டு,அசல்ஊருக்குத்தான் போக போறேன்......எனக்கு எது ஸார், மானம் மரியாதை எல்லாம்......ஆனா, இந்த நல்ல மனுஷனுக்கு கெட்ட பெயர் வந்திட கூடாது....
    எட்வர்ட் கத்தீனார்.
    நான் இதை அநுமதிக்க முடியாது....
    நான் மௌனமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, "என்னை மன்னிச்சிருங்க ஸார்" என்றேன்.....
    ஹெச் எம் நெகிழ்ந்தவ.ய், "மீனா...இந்த ஸ்கூல் மானத்த நீதான் காப்பாத்தாணும்..." என்றார்...
    நான் மெல்ல நடந்து, இஸ்கூல் வாசலில் நின்றேன்....
    பெரிய கேட் ஒன்று மூடி இருக்க, ஒரு ஆள் மட்டும் செல்லும் கதவு வழியாக, வெளியே வந்தேன்.....
    ஒத்து மொத்த கிராமமும் அணி திரண்டிறுன்தது.
    "எங்கள அந்த சிறுக்கி மகன்....உள்ளே பொட்டை மாதிரி ஒளிஞ்சிக்கிட்டானோ...வர சொல்லு, அவணய இங்கே பொலி போடணும்"
    செங்கனார் கிழவன் அந்த வயதிலும் கையில் அறுவாளொடு, நின்று கத்தினான்.
    "ஒரு நிமிஷம்..நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க...இப்பத்தான், நான் எட்வர்ட் ஸார் பார்த்து பேசிட்டு வறேன்....நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலாண்ணு சொன்னாரு"
    உனக்கு ஒண்ணும் தெரியாது....இங்கிதம் தெரியாதவ....நீ நவுறு....அவனைய இந்த அருவால்ல ஒண்ணு போட்டாதான் மத்த ஆறிப்பேடுக்கிற வாத்தியாருக்கு பயம் வரும்.....
    "வடிவு.....இவ்வளவு பெரிய பிராத கொடுத்துட்டு, இப்படியே தலை குனிஞ்சு நிக்கரையெ...இது என்ன நியாயம்...."
    வடிவு குனிந்த தலை நிமிராமல், விம்மி கொண்டு இருந்தாள்.
    "நியாயம் தர்மத்த நாங்க பார்த்துக்கிறோம்..நீ நவுறு"
    நான் கொஞ்சமும் தயங்க வில்லை.
    "ஹெச் எம் அய்யா போலீஸுக்கு ப்போன் பண்ணி இருக்காரு...உங்க அத்தானை பேரியையும் உள்ளே போட்துருவாங்க"
    அதுக்கெல்லாம் பயந்த ஆள் நாங்க இல்லை...நீ நவுறு....
    நான் ஒரு கணம் தயங்கினேன்....
    "சரி...சொல்ல கூடதுன்னு பார்த்தேன்....என் மானம் போனாலும் பரவா இல்லை...இப்ப உண்மையுெ சொல்றேன்....இந்த வடிவு சொன்ன சனிக்கிழமை, அந்த மாதிரி தப்பு நடந்துக்க வாய்ப்பே இல்ல"
    எப்படி சொல்றெ
    ஏன்னா, அன்னிக்கு ஸார் என் கூட இருந்தாரு.....
    கூட்டம் ஒரு கணம் ஸ்தம்பித்தது.
    நீ என்ன பிள்ளை சொல்றெ.....
    ஆமாம்...நான் சொன்னது சொன்னதுதான்......அந்த ஸார் மேல எதாவது ஒரு அடி விழுந்தாலும், அது என் பொணாத்து மேல விழுந்த அடி யாகத்தான் இருக்கணும்.
    செங்கனார் கிழவன் முன்னாடி வந்தான்.
    "நீ சொன்னது உண்மையாகவே இருக்கதும்..இனிமே உன்னைய யாரு கட்டுவான்....உங்க ஆத்தி என்ன வம்சம்.....அவ வயித்தில ஜனிச்சு....இப்படியே பண்ணிட்டியே பாவி மவளே.."
    நான் கல் மாதிரி மனத்தை திடம் ஆக்கி கொண்டு நின்று கொண்டு இருந்தேன்..
    கூட்டத்தில் ஒருவன்....."அதுதான் மீனா சொல்லிதிச்சில்ல...எல்லாம் கிளம்புங்கா..." என்றான்.
    இன்னொருவன்...."அது எப்படி? படிப்பு சொல்லி கொடுக்கிற வாத்தியாரே இப்படி இருந்தா, ஊருல மத்த பசங்க எப்படி இருப்பாங்க"
    "அதனாலே?"
    "தப்பு செய்தவங்களே முன் வந்து குற்றதித ஒத்த்துக்கிட்டதினாலே, அவங்க ரெண்டு பெருக்கும் கல்யானம் செய்து வைக்கிறதுதான் முறை"
    ஆமாம்...அதுதான் கரெக்ட்...
    ஊரில் தலைக்கு தலை பேசி கொண்டார்ல்கள். உள்ளே நுழைந்து, எட்வர்ட் சாரை கூட்டி வந்தார்கள்.
    செங்கனார் கிழவன் கம்மிய குரலில் சொன்னான்.
    தவறு செய்வது இயற்கைதான்..செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் தேடுங்க..
    அடுத்த் ஐந்தாவது நிமிடத்த்ில், எட்வர்ட் ஸார் என் கழுத்த்ில் தாலி கட்டினார். .
    நான் ஒரு முறை வடிவைப் பார்த்தேன். அவள் யாருக்கும் தெரியாமல் கண்ணடித்தாள்.

  2. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    ஏய். என்ன இது. இதெல்லாம் ஒத்துக்க முடியாது. சுத்த வில்லத்தனமா இருக்கு.

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இந்த பொண்ணுங்க்களே இப்படித்தான் என்று புலம்பவைக்காதீங்கோ.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. Likes sarcharan liked this post
  5. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    கதையில் சஸ்பென்ஸ் நன்றாக அமைந்துள்ளது. மலிந்துள்ள (தட்டெழுத்துப்) பிழைகளைத் திருத்திப் பாராக்களுக்கு இடையில் ஒரு காலி வரி அமைத்துப் படிக்க வசதியாகச் செய்வது அவசியம்.

    ரமணி

  6. #5
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    30 Oct 2012
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    15,641
    Downloads
    5
    Uploads
    0

    நன்றி

    Quote Originally Posted by ரமணி View Post
    கதையில் சஸ்பென்ஸ் நன்றாக அமைந்துள்ளது. மலிந்துள்ள (தட்டெழுத்துப்) பிழைகளைத் திருத்திப் பாராக்களுக்கு இடையில் ஒரு காலி வரி அமைத்துப் படிக்க வசதியாகச் செய்வது அவசியம்.

    ரமணி
    உற்சாகமாக இருக்கிறது. அடுத்த் முறை இந்த தவறை சரி செய்கிறேன். மிக்க நன்றி.

  7. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    என்னால் கதையுடன் ஒத்துப்போக முடியவில்லை. வடிவு சொன்னது தவறு என்றால் அவளை ஏன் தண்டிக்கவில்லை.

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    பாருங்க இந்த கொடுமையை.....

    ஆண அலங்கோலமாக்கி விடுவதே இந்த மாதிரி பெண்கள் தான்...


    குத்துங்க எசமான் குத்துங்க..

    இந்த பொண்ணுங்களே இப்படித்தான்......

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •