வாங்க வாங்க...
சுள்ளிய பொறுக்கிக்
கொள்ளிய வச்சு ,
கூட்டாஞ்சோறு ஆக்கிடலாம்...

வாங்க வாங்க...
கயித்தத்தான் எடுத்து,
வயித்துல கட்டி,
பஸ் ஒண்ணு செஞ்சிடலாம்...

வாங்க வாங்க...
டயரத்தான் எடுத்து,
கையில உருட்டி,
பக்கத்தூர் போயிட்டு வரலாம்...

வாங்க வாங்க...
மண்ணைத்தான் எடுத்து,
வாயில போட்டு,
கிருஷ்ணன் ஆகிடலாம்...

வாங்க வாங்க...
களிமண் எடுத்து
கைபொம்மை செஞ்சு,
கோவில் கட்டிடலாம்...

வாங்க வாங்க...
நூலட்டை எடுத்து,
பட்டன் வச்சு,
கியர் வண்டி செஞ்சிடலாம்...

வாங்க வாங்க...
சாக்க எடுத்து,
சோக்கா புகுந்து,
வீடுன்னு பீத்திக்கலாம்...

சுலைமான் அண்ணா,
பரிதாக்கா கௌசிக்கா,
ரமேஷ் சுரேஷ்,
ஆன்டிரோய்டுல இருந்து
ஆப்பிள்ல இருந்து
கொஞ்ச நேரம் இங்க வந்துட்டு போங்க...
(பவானிசாகர் ஞாபகங்கள்)