வலைப் பக்கங்களில் தேடிய போது சில குறுங்கவிதைகள் மிகவும் ரசிக்க வைத்தன...

*************
சாரல் அடிக்கிறது
ஜன்னலைச் சாத்தும்போது மரக்கிளையில்
நனைந்தபடி குருவி

*************
உழுதுவந்த களைப்பில்
படுக்கும் மாடுகள்
காயம் தேடும் காக்கை

*************
கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள்

*************
தாழ்வு இல்லை
உயர்வே குறிக்கோள்
விலைவாசி

*************
அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன்

*************
இருந்தால் மேடு
இல்லாவிட்டால் பள்ளம்
வயிறு

***************
ஐந்தில் வளைப்பதற்கோ
பிஞ்சு முதுகில்
புத்தக மூட்டைகள்

***************
ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்
ஐம்பது வாக்குகள்

*************
பதவி இழந்த அமைச்சர்
அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன்

*************
புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால் இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய்

*************
ஒலிபெருக்கி
சோதனை முடிந்ததும்
பேச்சாளர் சோதனை

*************
சண்டைக்கோழி
வென்றாலும் தோற்றாலும்
பிரியாணி

***********
கிளித்தோப்பில்
கட்சிக்கூட்டம்.
பேசுவதை நிறுத்தி விட்டன கிளிகள்