Results 1 to 8 of 8

Thread: உறவுகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    உறவுகள்

    நீ


    சிகரங்களைத் தொட்டபோது மகிழாத உறவுகள்
    பள்ளத்தில் விழுந்தபோது பரிகாசம் செய்தன
    ஆனாலும்
    உறவுகளை என்றும் உதறித் தள்ளாதே !



    வாளேந்தும் பகைவனைக் காட்டிலும்
    தாள்பணியும் உறவுக்காரன் ஆபத்தானவன் .
    ஆனாலும்
    உறவுகளை என்றும் உதறித் தள்ளாதே !


    நீ


    கைதூக்கி விட்ட உறவுகளே உன்னுடைய
    காலை வாருவதற்குக் காத்துக் கிடக்கின்றன !
    ஆனாலும்
    உறவுகளை என்றும் உதறித் தள்ளாதே !

    உறவுகளால் என்றும் உபத்திரவம்தான்
    என்செய்வது !
    சில சமயங்களில் நம்முடைய
    கைவிரல்களே கண்ணைக் குத்துகின்றன
    அதற்காக
    விரல்களை வெட்டுவது விவேகம் ஆகுமா ?


    உறவுகளைத் திருத்துவோம்
    உறவுகளை அரவணைப்போம்
    உறவுகளோடு வாழ்வோம் !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    இளையவர் Sabeekshana's Avatar
    Join Date
    25 Jul 2014
    Location
    Mumbai
    Age
    32
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    2,462
    Downloads
    0
    Uploads
    0
    அழகிய வரிகள் ஐயா !!

    உறவுகள் பற்றி தாம் அனுபவத்தால் கண்ட உண்மைகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!!
    ......................................................................................................................
    "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

    அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

    .......................................................................................................................

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு
    சே. சபீக்ஷனா

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தங்களின் பின்னுரைக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அன்பின் அனுபவ வரிகள்.
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஜெய் அவர்களின் பின்னுரைக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    குற்றம் பார்க்கில் சுற்றமில்லை - எனும் முதுகிழவி சொல்லுக்கிணங்க
    ஏற்றமிகு சொல்லெடுத்து தமிழ் கவிதை தந்த ஜயா!
    உறவைத்திருத்தி உய்யும் வழி! அற்புதம்!
    என்றென்றும் நட்புடன்!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கு.பிள்ளை அவர்களின் பாராட்டுக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    உன்னோடு வாழ்தல் அரிது என்று இடும்பை கூர் என் வயிற்றுக்குச் சொன்னதுபோல்
    உறவுக்கும் சொன்னீர்களா.. எதுவுமே 100 % மோசமல்ல. 100 % அக்மார்க்குமல்ல.

    சமாளித்து உடன் அழைத்து பயணிக்க வேண்டிய அஜெண்டா - உறவுகளுக்கு மட்டுமல்ல. சக பணியாளர்களுக்கு.. ஏன் அனைத்து சக மனிதருக்கும் ஏன் சக உயிரிகளுக்கும்.. ஏன் அனைத்துக்குமே பொருந்தும்.

    Inter-Dependence - இதுவே இன்றைய இருப்பின் அடிநாதம்.

    எம் ஜெகதீசனுக்குப் பாராட்டுக்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •