Results 1 to 9 of 9

Thread: வானம் கவிதை பெய்யும்!!

                  
   
   
  1. #1
    இளையவர் Sabeekshana's Avatar
    Join Date
    25 Jul 2014
    Location
    Mumbai
    Age
    31
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    2,462
    Downloads
    0
    Uploads
    0

    வானம் கவிதை பெய்யும்!!



    என் சிந்தனைகள்
    வெற்றிடமாகின்
    சிலசமயம்
    நான் வானிடம்
    தஞ்சம் கொள்வேன்!!


    வான் என்றும்
    வாரி வழங்கும்
    தன் வண்ணக்கவிக்களை
    குறை ஒன்றின்றி
    குதூகலிப்புடன்!!


    வான் உதிரும்
    வார்த்தைகள்
    தேனை வார்க்கும்
    உடலில் வல்லமை
    தனை சேர்க்கும்!!


    மேகங்கள் என்
    எண்ணங்களை மெருகூட்ட
    மின்னல் ஆங்காங்கே- கற்பனை
    மின்சாரமாய் பரிணமிக்க
    பிறந்தது ஒரு கவி- பின்னூட்டலுடனே!!
    ......................................................................................................................
    "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

    அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

    .......................................................................................................................

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு
    சே. சபீக்ஷனா

  2. Likes அமரன் liked this post
  3. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அழகு!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  4. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    வானம் கவிதை பெய்யும் என்ற தலைப்புக்கு ஒரு சல்யூட்

  5. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அழகு கவிதை..தொடரட்டும்..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  6. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    அருமை.

  7. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வானமங்கை கவிஞர்க்கு வற்றாத கங்கைபோல்
    ...வளமான கற்பனையை வாரியே வழங்கிடுவாள் !
    கூனல்பிறைச் சந்திரனைத் திலகமாய்க் கொண்டிடுவாள் !
    ...குற்றேவல் செய்திடவே குழுமிநிற்கும் மின்மினிகள்!
    தேனமுத மழைபெய்து தேசங்கள் செழித்திடவே
    ...தெய்வமென விளங்குகின்ற ஆகாய கங்கையிவள் !
    ஊனமிகு மனிதர்க்கு எட்டாத உண்மைகளை
    ...உரைத்திடுவாள் ! அவளழகை உணர்ந்தவர் யாரிங்கே ?




    கவிதை மிகவும் அழகு! பாராட்டுக்கள் சபீக்ஷனா !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    என் சிந்தனைகள்
    வெற்றிடமாகின்
    சிலசமயம்
    நான் வானிடம்
    தஞ்சம் கொள்வேன்!!


    சூப்பர்.... வானம் போல பெரிதானது வேறேதும் இல்லை. எவ்வளவு பெரிதென்றால் அது எவ்வளவு பெரிதென்றே தெரியாமல் இருப்பது போல்..
    வானம் தராத கவிதைகளா?

    மழை கவிதையில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது

    அன்புடன்
    ஆதவா
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வான் அன்னையைப் போன்றது,
    அணைத்து ஆறுதல் சொல்லும்..!!!

    வாழ்த்துகள் அழகான கவிதைக்கு..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    வானம் எனக்கொரு போதிமரம்
    நாளும் எனக்கொரு சேதிதரும்...

    எதை நாம் காதலிக்கிறோமே அங்கிருந்தே நமக்கு கவிதைகளுக்கான கருக்கள் கிடைக்கின்றன

    பரந்த வானத்தை இரசிக்கும் பரந்த மனம்.

    வானில் என்னென்னவோ வந்து சென்றாலும்

    வானம் நிர்மலமாகவே இருக்கிறது..

    கவிதை அழகு!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •