தடைகள் பல மலைகளாய்...

மார்க்கத்தின் பேர் சொல்லி
உனை படிதாண்டா பதுமையாக்க
உடல்கூறு தனை சொல்லி
உன் உள்ளமதின் பலம் நீக்க
குடும்பத்தின் நிலை சொல்லி
உனை வீட்டோடு முடமாக்க
கயவர்களின் கதை சொல்லி
உன் விழியிரண்டை குளமாக்க


அத்துனையும் தகர்த்தெரிந்து
உன் பாதம் முன் வைத்து
புத்துலகு சமைத்திடவே
பொன்மங்கை நீ வாராய்..
.

புது உலகை நீ காண
கருவறையை கடந்த போது,
கல்லுள்ளம் கொண்டவனோ
உனை மண்ணுக்குள் புதைத்திட்டான்


ஈரேழு அகவை தின்று
பருவ மங்கை நீயாக...
உன்னுரிமை,உடையுரித்து
பருகிடவே எத்தனித்தான்..
உரம் கொண்டு, உன்னுரிமை கோர..
ஊர்கூடி,குரல் கூட்டி
இழிபிறவி எனப் பழித்தான்



வல்லோனின் அருள் பெற்று
வாஞ்சை நபி புவி நின்று,
கயவர்களை இனம் கண்டு,
இஸ்லாத்தின் நெறி சுழற்றி
சாட்டையடி தந்துவிட...


கல்வி,முதல் கணவன் வரை
விவாகம் முதல் ரத்து வரை
சொத்து முதல் நித்தமென
அத்துனையும் கை கொண்டாய்


எத்துரையும் கால் பதிக்க
ஏகனவன் தாழ்திறக்க
இஸ்லாத்தில் உயிர்கொண்டு
இறை தூதின் நெறி நின்று,
ஈருளகின் பொருள் கொண்டு
நற்சமூகம் தான் படைக்க
இனியவளே நீ வாராய்.
.


கண்ணியமாம் ஹிஜாப் அணிந்து
கயவர்களின் கனவெரித்து
இஸ்லாத்தின் வழி கண்டு
ஈமானின் ஒளி கொண்டு...
புதியதோர் சமுதாயம்
கட்டி எழுப்ப நீ வாராய்...




உனக்குரிமை எனக்கோரி,
உன்னாடை களைந்துவிட
கள்வர்களின் கூட்டமொன்று
வெறிகொண்டு அலையுது பார்...



உடல் மறைத்து நீ சென்றால்
அடிமைத்தளை எனச் சொல்லி
தன்னடிமைத்தனம் மறைத்து
தானிழந்த சுகம் மறந்து
கூச்சலிடும் மாந்தர் முகம்
கருஞ்சாயம் பூசிவிட
கன்னியவள் நீ வாராய்...


உனதாடைதனை யுரித்து
ஊரெல்லாம் கடைவிரித்து
விழியாலே உனை மேய
ஓலமிடும் ஓனாயின்
பசுத்தோலை அறிந்திடுவாய்...



கல்வியிலே தலைசிறந்து
அறிவினிலே நிலையுயர்ந்து
ஒழுக்கமதில் ஒப்பற்று
உன் சமூக மா'க்களுக்கு
உதாரணமாய் தலைப்படுவாய்...
தீன் கூரும் பெண்மணியே...
அன்புடன்
ரஜின்