கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
இது பழைய மொழி.
கூடி வாழ்ந்தால் கோடி இன்னல்.
இது புது மொழி.
இந்த கூட்டு குடும்பம் காணாமல்
போனதால் உள்ள இலாபம் என்னவென்றால் ஆணாதிக்கம்
குறைந்து பெண்ணுரிமை
மேலோங்கி இருக்கிறது .
இந்த கூட்டு குடும்பம் காணாமல்
போனதால் உள்ள நஷ்டம்
என்னவென்றால்
விவாகரத்து அதிகரித்ததும்
முதிர்கண்ணிகள் பெருகியதும்.
முற்றத்தில் பாய்விரித்து
முழு குடும்பம் அதிலமர்ந்து
நிலவொளியை இரசித்தபடி
அம்மாவிடம் கைநீட்டி
ஆசையாக சோறுவாங்கி
தம்பிக்கு ஒரு வாய் ஊட்டி
அக்காவிடம் ஒரு வாய் வாங்கி
அண்ணன் எனை கொஞ்ச
அத்தை எனை கெஞ்ச
மாமன் எனை முறைக்க
தாத்தா அதை தடுக்க
பாட்டி எனை தாலாட்ட
பாதி சோறு வாயிலிருக்க
அம்மா மடிமீது அசதியில்
கண்ணயர்ந்த காலம் இனி
வரப்போவது எக்காலம்?

நன்றி:குமரன்