Results 1 to 2 of 2

Thread: புரிந்து கொள்வாயா..?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3

    புரிந்து கொள்வாயா..?



    அன்பே….
    நிலாக் கால இரவொன்றில்
    நீயும் நானும்…
    உன் விழிகள் காட்டும்
    அன்பில் நான்
    வியந்து போகிறேன்….
    -
    உன் செவ்விதழின்
    அசைவில் நான்
    வேதம் படிக்கிறேன்…
    உன் அருகாமையின்
    விளைவாய் நான்
    அறிஞனாகிறேன்…
    -
    உன் அணைப்பின்
    சுகத்தில் நான்
    கவிஞனாகிறேன்…
    உன் தீண்டலின்
    தயவால் நான்
    தங்கம் ஆகிறேன்….
    -
    நீ என்னை நெருங்குகிற பொழுதுகளில்
    நொறுங்கிப் போகிறது
    என் வார்த்தைகள்…..
    அறுந்து போன
    முத்து மாலையின்
    முத்துக்களைப் போல,
    தேடுகிறேன், வார்த்தைகளை….
    -
    தொலைத்துவிட்ட தவிப்பில் நான்…
    உன் புன்னகையால் என்னைத்
    தொலைத்துக் கொண்டிருக்கும் நீ…..
    வார்த்தைகள் வந்தும்
    வரிசைப்படுத்தத் தெரியாதவனாய்
    நான்….
    -
    ஊமையின் கையில்
    அகப்பட்டுக்கொண்ட பாடலாய்
    என் வார்த்தைகள்…..
    பேச வார்த்தைகளிருந்தும்
    பேச முடியாதவனாய்
    நான்……
    -
    மனித வார்த்தைகளை விட
    உணர்வுகளுக்கு
    சக்தி அதிகமாம்……
    கருவிலிருக்கும் போது
    யாரோ ஒரு
    குரு சொல்லக் கேட்டது……
    -
    சரி……….
    என் உணர்வுகளால்
    உன்னை அழைக்கிறேன்….
    “அம்மா” என்று…..
    புரிந்து கொள்வாயா, நீ…….?!
    -===================
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    கவிதை அருமை ..மேம்படட்டும் இன்னும் ...வாழ்த்துகள் அச்சலா...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •