Results 1 to 3 of 3

Thread: மொக்கை தத்துவங்கள் ...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3

    மொக்கை தத்துவங்கள் ...

    வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!



    பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்…அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!



    ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்! பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்…



    வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி” என்றவர்கள். வெற்றி கிடைத்ததும் “விடா முயற்சி” என்றார்கள்.இதுதான் உலகம்.



    நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்.அதை நீ ஒப்பு கொள்ளும் போது…



    ஆசை படுவதை மறந்து விடு!ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!



    தூசி பட்ட கண்களும், காதல் பட்ட இதயமும், எப்போதும் கலங்கி கொண்டே இருக்கும்…



    ஒருவரை கூட காதலிக்காத பெண் இருக்கலாம் ,ஒருவரை மட்டும் காதலித்த பெண் இருக்கமுடியாது ......



    சாலைய பார்த்தா சமத்து சேலைய பார்த்தா விபத்து.



    குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்கலாம் குப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.



    ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது.



    தண்ணீர் மேல கப்பல் போனா உல்லாசம்.கப்பல் மேல தண்ணீர் போனா கைலாசம்



    ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு



    காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!



    டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமாத் தியேட்டர்.உள்ளே போயிட்டு டிக்கெட் வாங்கினாஅது ஆபரேஷன் தியேட்டர்.



    தினமும் காலண்டரைக் கிழிக்கிறதுபெரிய விஷயமில்லை;



    ஒவ்வொரு நாளும் நாம் என்னத்தைக் கிழிச்சோம்கிறது தான் பெரிய விஷயம்....



    குக்கர் விசிலடிச்சு பஸ்சு போகாது.கண்டக்டர் விசிலடிச்சு சோறு வேகாது?



    என்ன தான் வாழை தார் போட்டாலும் அதை வைத்துக்கொண்டு ரோடு போட முடியுமா?



    காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைமுட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருந்து வர்ற காக்கா கருப்புதான்..



    Files-ன்னா உக்காந்து பாக்கணும்.. Piles-ன்னா பாத்து உக்காரணும்..



    பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …



    பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது. பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது.


    நன்றி:மொக்கை தத்துவங்கள் ...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  2. Likes arun karthik, sarcharan liked this post
  3. #2
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Oct 2013
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    9,387
    Downloads
    0
    Uploads
    0
    தத்துவங்கள் எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. அவற்றிற்கு மொக்கை என்று பெயர் தந்தது ஏனோ?

  4. #3
    இளம் புயல் பண்பட்டவர் sures's Avatar
    Join Date
    18 Feb 2010
    Location
    நோர்வே
    Posts
    130
    Post Thanks / Like
    iCash Credits
    47,909
    Downloads
    45
    Uploads
    0
    உங்களுடைய "மொக்க" தத்துவங்கள் எல்லாம் வாசிக்க சுவாரசியமாக உள்ளது.
    அருமையானவை.
    உங்கள்
    சுரேஷ்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •