அப்பாடா...
ஒருவழியாக இந்த பேருந்தின் சன்னலோர இருக்கை கிடைத்து விட்டது..
இந்த இயற்கைதான் எவ்வளவு அழகானது என்பது அந்த 16-inch தொலைகாட்சி(சன்னல்) வழியாக தெரிந்தது..

தங்க முலாம் பூசிய விசும்பு...
இளங்காலைப் பொழுது.
இளந்தென்றல் காற்று..
பேருந்துக்கு வெளியே பசுமை சேர்த்த வயல்வெளிகள்..
பேருந்துக்கு உள்ளே பசுமை சேர்த்த சுந்தர யுவதிகள்...
கதிரவனின் வரவை எண்ணி கானம் பாடும் பறவைகள்..
கொக்கரித்த கோழிகள்..
அம்மாவை அழைத்த கன்றுகள்...
IT வேலை செய்யாத தரமான விதைகள்...
அந்த விதைகளை கருவாக்கி,பிள்ளைகளை பெற்று பசுமை செய்த மலடில்லாத விளைநிலங்கள்..
அவற்றை அறுவடை செய்து கொண்டிருந்த 70 வயது கிழவனின் வலுவான தோள்கள்..
அந்த கிழவனை ரசித்தும், ரசிகாதது போல் கேலி பேசிக் கொண்டிருந்த அக்கிழவியின் பிரேமை...
அவர்களின் சொர்க்கம் போன்ற சிறிய குடிசை...
அதற்கு தொலைவில் ஏதோ பந்தயத்தில் ஓடும் வீராங்கனை போலோடிய ஆறு..

அந்த ஆற்றுக்கு அப்பால்....
அதேதான்...
அதேதான்...

இந்த 12-ம் வகுப்பு தேர்வில் நான் முதலிடம் பெறுவதற்கு,
இந்த வாழ்வு முறையை கனவுகளாக்கி,
வெறும் மதிப்பெண்களை வாழ்வாக மாற்றிக் கொண்டிருந்த
என் தனியார் பள்ளிக்கூடம்....