Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 34

Thread: தமிழில் பங்கு வர்த்தகம்

                  
   
   
 1. #13
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  49,042
  Downloads
  126
  Uploads
  17
  பங்குச் சந்தை அறிமுகம்


  Stock Exchange என்பது பங்குச் சந்தை. பங்குகளை வாங்க விற்க ஒரு இடம். அதாவது எந்த நிறவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படிருக்கிறதோ அந்த சந்தைகளில்.

  யாருக்கு வேண்டும் பங்குச் சந்தை?

  நீங்கள் ஒரு நிறுவனத்தின் முதலாளி. நீங்கள் தான் அதன் நிறுவனர் உரிமையாளர். ஆனால் உங்கள் சொந்த முதலீட்டில் அந்த நிறவனத்தை இன்னும் வளர்ச்சியடைய செய்ய முடியவில்லை. உங்களுக்கு இன்னும் பணம் தேவைப்படுகிறது. அப்போது ஒருவர் உங்கள் நிறவனத்தில் பணம் போட முன்வருகிறார். அவரை Partner என்கிறோம்.

  மேலும் பணம் தேவைப்படும்போது உங்கள் இருவரின் சொத்துகளும் சேர்ந்தும் உங்கள் தேவைக்கு குறைவாக இருக்கும் போது, வங்கிக் சென்று கடன் வாங்குவீர்கள்.

  அல்லது பொது மக்களிடம் சென்று பணம் வாங்குவீர்கள். என்னது பொது மக்களா, அவர்கள் ஏன் எனக்கு பணம் தரவேண்டும் என்று கேட்கலாம்.

  இந்த முறையை Intial Public Offering (IPO) என்கிறோம். நீங்கள் முறையான அனுமதிகளை பெற்ற பின்பே IPO செய்யலாம். அதாவது பாருங்கள் மக்களே, நான் ஒரு நிறுவனம் துவங்கியுள்ளேன். சில ஆண்டகளாக நன்றாக நடத்தி வருகிறேன். ஆனாலும் ஒரு கோடி நிறுவனமாகவே என் நிறுவனம் உள்ளது. இதை நூறு கோடியாக ஆக்கும் திறன் எங்களிடம் உண்டு. ஆனால் அதற்கு பெருத்த முதலீடு தேவைப்படுகிறது. நீங்கள் எல்லாம் சேர்ந்த இதல் முதலீடு செய்தால் நீங்கள் இந்த நிறுவனத்தில் பங்குதாரர் ஆகலாம். வரும் லாபத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று சொல்வதே IPO.

  ஒவ்வொரு பங்கின் விலை சுமார் 1, 10, அல்லது 100 என்று துவங்கலாம். சுமார் ஒரு லட்சம் பேர் உங்கள் பங்கை 10 ரூபாய்க்கு வாங்கியிருந்தால் அடுத்த ஆண்டில் உங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தால் 20 சதவீதம் லாபம் அடைந்திருந்தால் ஒவ்வொருவரின் பங்கும் 12 ரூபாயாக உயர்ந்து அவர்கள் இரண்டு ரூபாய் சம்பாதிக்க வழி வகுக்கிறீர்கள். ஒரு வேளை உங்கள் நிறுவனம் நட்டமடைந்தாலும் அந்த நட்டமும் பங்குதாரர்களுடன் பங்கு பிரிக்கப்பட்டுவிடுகிறது.

  இதனை Primary Market அல்லது முதன்மை சந்தை என்கிறார்கள்.

  ஆனால் இவ்வாறாக முதன்மை சந்தையிலிருந்து பங்குகளை வாங்கியவர்களுக்கு ஏதாவது காரணத்தினால் பங்கை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது இரண்டாம் சந்தைக்கு வருகிறது. இதனை Secondary Market என்கிறார்கள். இங்கு யார் வேண்டுமானாலும் பங்குகளை வாங்கலாம் விற்கலாம்.

  மேலும் பேசுவோம்…..
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 2. #14
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  49,042
  Downloads
  126
  Uploads
  17
  Online Stock Trading–இணைய பங்கு வர்த்தகம்


  15 வருடங்களுக்கு முன்பு பங்குச் சந்தை என்றால் வெறும் பணக்காரர்கள் மட்டும் புழங்கும் இடமாக இருந்தது. திரைப்படங்கள் Shares என்று சொல்வார்கள் செல்வந்தர்கள். பல வங்கிகளிலும் பொது இடங்களிலும் விண்ணப்பங்கள் குவிந்து கிடக்கும். அதில் தரகர்களின் பெயர் முகவரி எல்லாம் முத்திரை குத்தியிருக்கும். 20 பக்களுக்கு மேல் சிறிய எழுத்துக் களில் இருப்பதால் பலரும் படிக்க மாட்டார்கள்.

  பிறகு கணினிமயமாக்கலின் மூலமாக இப்போது குறைந்த பணம் உள்ளவர்களும் பங்கு சந்தைகள் வியாபாரம் செய்ய ஏதுவானது.

  தரகர்கள் தேவையில்லை. தொலைபேசியில் பேசத்தேவையில்லை. அவர்களுக்கு Cheque, DD என்றுத் தரத்தேவையில்லை. பிறகு வந்து சேரும் பங்குப் பத்திரங்களை பாதுகாக்க தேவையில்லை. அனைத்தும் இணைய வழி மூலம் இப்போது நடைபெறுகிறது.

  முறையில் வரைமுறைகளிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பழைய முறையின் தாமதம், தவறுகள் களையப்பட்டிருகிறது தற்போது.

  T+2 Settlement – நீங்கள் திங்கட்கிழமை வாங்கும் பங்குகள் உங்கள் கணக்கில் புதன் கிழமை அதாவது இரண்டு நாட்களில் சேர்க்கப்படும். நடுவில் சனி ஞாயிறு வந்தாலோ அல்லது சந்தை விடுமுறை இருந்தாலோ அவை கணக்கில் இல்லை.

  இந்த Demat Account மூலம் நீங்கள் என்னென் வாங்கலாம்:

  • IPO
  • Mutual Fund
  • Equity
  • Exchange Traded Funds (ETF)


  இன்னும் சில நிறுவனங்கள் மேற்படி சொன்னவைக்கும் மேலாக சில முதலீட்டு திட்டங்களில் பணம் போடு வாய்ப்பு செய்து தருகின்றன. அவற்றை பற்றி பின்பு பேசலாம்.

  மேலும் பேசுவோம்….
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 3. #15
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
  Join Date
  24 Jan 2008
  Location
  சிங்கப்பூர்
  Posts
  5,009
  Post Thanks / Like
  iCash Credits
  31,453
  Downloads
  25
  Uploads
  3
  நல்ல பதிவு.....
  என்றும் அன்புடன்
  அச்சலா

  ..................................................................................
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  ..................................................................................

 4. #16
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  49,042
  Downloads
  126
  Uploads
  17
  Quote Originally Posted by அச்சலா View Post
  நல்ல பதிவு.....
  நன்றி அச்சலா அவர்களே.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 5. #17
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  49,042
  Downloads
  126
  Uploads
  17
  Mutual Fund–அறிமுகம்

  Mutual Fund அல்லது பரஸ்பர நிதி என்பது நாம் நேரிடையாக எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யாமல் வேறு வகையில் முதலீடு செய்வது.

  Asset Management Company (AMC) எனும் நிறவனங்கள் இவ்வாறான Mutual Fund Schemes அதாவது பரஸ்பத நிதி திட்டங்களை அவ்வபோது அறிவிக்கிறார்கள்.

  இவ்வாறான திட்டங்கள் Fund Manager என்பவர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

  இம்மாதிரியான திட்டங்களலில் நீங்கள் மொத்தமாகவோ அல்லது மாதாமாதம் ரூ 500 லிருந்தோ சேமிப்பை துவக்கலாம். இவ்வாறாக மாதாமாதம் செய்யும் முறையை Systematic Investment Plan (SIP) என்கிறார்கள்.

  இதில் Entry Load and Exit Load எனும் இருவகை கட்டணங்கள் உள்ளது. Entry Load பெரும்பாலும் அகற்றப்பட்டுள்ளது. அதவாது நீங்கள் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 1% நுழைவுக் கட்டணமாக கட்ட வேண்டும். அதுபோலவே இந்த திட்டத்தை விட்டு வெளியேறி நீங்கள் போட்ட பணத்தை எடுக்க முயலும் போதும் கட்ட வேண்டும்.

  இது எவ்வாறு செயல்படுகிறது என்றால் உங்களைப் போல பலரும் இந்த திட்டத்தில் பணம் போடுவார்கள். அந்த மொத்த பணத்தையும் அந்த Fund Manager அவருக்கு சரியென்று படும் நிறவனத்தின் பங்குகள் மீது முதலீடு செய்வார். அவற்றால் வரும் லாபம் உங்களுக்கு கிடைக்கும்.

  அவர் இஷ்டத்திற்கு எதிலும் பணம் போட முடியாது. அவர் எந்தெந்த நிறவனத்தில் பணம் போடுகிறார் என்பது அந்த திட்டத்தின் Fact Sheet மூலம் அறியலாம்.

  முற்றிலும் Equityயிலோ அல்லது அரசாங்க பத்திரங்களிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட துறையிலோ (Sector) அவர் அந்த பணத்தை முதலீடு செய்வார்.

  http://www.moneycontrol.com/mutualfundindia/

  மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பில் நீங்கள் சிறப்பாக செயல்படும் பரஸ்பர நிதி திட்டங்களை காணலாம்.

  மேலும் பேசுவோம்….
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 6. #18
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  37,315
  Downloads
  146
  Uploads
  3
  முன்பே நாமும் துவங்கலாம் என நினைக்கையில் இதனை பற்றிய தெளிவு இல்லை,தற்போது ஒரு தெளிவு பிற்க்கிறது...தொடரட்டும் லியோமோகன்..
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

 7. #19
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  49,042
  Downloads
  126
  Uploads
  17
  Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
  முன்பே நாமும் துவங்கலாம் என நினைக்கையில் இதனை பற்றிய தெளிவு இல்லை,தற்போது ஒரு தெளிவு பிற்க்கிறது...தொடரட்டும் லியோமோகன்..
  நன்றி ஜெய்.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 8. #20
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  49,042
  Downloads
  126
  Uploads
  17
  Exchange Traded Fund (ETF)–அறிமுகம்  http://www.moneycontrol.com/mf/etf/

  ETF என்பது ஒரு குறியீட்டின் மீது பணம் போடுவதற்கு சமம். அதாவது பம்பாய் பங்குச் சந்தையின் குறியீடு SENSEX இன்று 25,000 எனும் நிலை அடைந்திருக்கிறது என்று கொள்வோம். நீங்கள் SENSEXஐ அடிப்படையாக கொண்ட ETF மீது பணம் முதலீடு செய்கிறீர்கள். சில மாதங்களுக்கு பிறகு இந்த புள்ளி 30,000 தொட்டது என்றால் நீங்கள் முதலீடு செய்த பணமும் அதே சதவீததில் வளர்ச்சியடையும்.

  பங்குச் சந்தையின் குறியீட்டிலோ அல்லது தங்கத்திலோ அல்லது வங்கிகளின் வளர்ச்சியை காட்டும் வங்கி குறியீட்டிலோ இவ்வாறான முதலீடுகள் செய்யலாம்.

  இப்போதைக்கு இதில் நீங்கள் பணம் போட வேண்டாம். இந்த துறையை நன்கு அறிந்த பிறகு இதைப் பற்றி பேசுவோம்.

  இப்போதைக்கு இதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் வர்த்தகர்கள் மட்டும்.

  மேலும் பேசுவோம்…..
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 9. #21
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  49,042
  Downloads
  126
  Uploads
  17
  ICICI Direct தரும் இலவச பாடங்கள்

  1. Equities - http://content.icicidirect.com/newsi...er/Module1.htm
  2. Mutual Fund - http://content.icicidirect.com/newsi...fund/intro.htm
  3. Technical Analysis - http://content.icicidirect.com/newsi...-analysis.html

  மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களில் நீங்கள் அடிப்படை கல்வி பெறலாம். ஆங்கிலத்தில் எளிமையாக பங்கு வர்த்தகம் தொடர்பான விடயங்களை விளக்கியுள்ளார்கள்.

  மேலும் Youtubeல் ICICI Direct Channel தேடி இன்னும் பல காணொளி பாடங்களில் நேரம் செலவிடலாம்.

  உங்கள் சுற்றத்தில் உள்ள B.Com, M.Com, BA/MA Economics, CA, CS, ICWA, MBA Finance, PG Diploma in Financial Markets பட்டதாரிகளிடம் பங்கு வர்த்தகம் பற்றியும் உலக பொருளாதாரம் பற்றியும் இந்திய பொருளாதாரம் பற்றியும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசி உங்கள் ஞானத்தை வளர்த்துக் கொண்டால் இந்த துறையில் நீங்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.

  மூன்றாவது மந்திரம்

  சிறுக சிறுக முதலீடு செய்யுங்கள்
  தொடர்ந்து செய்யுங்கள்
  தொலை நோக்கு பார்வையுடன் முதலீடு செய்யுங்கள்.
  இந்த வியாபாரத்தில் நட்டம் அடைந்தவர்களை நீங்கள் அதிகம் சந்திக்க நேரிடுகிறது. இதனால் பலரும் விலகியே இருக்கிறோம்.

  ஏன் நட்டம் அடைந்தார்கள் என்பதை ஆராய்ந்து உணர வேண்டும்.

  மரம் நட்டால் தண்ணீர் ஊற்ற வேண்டும். பலரும் பங்கு வர்த்தகத்தில் பணம் போட்டுவிட்டு ஹாயாக அமர்ந்துவிடுகிறார்கள்.

  பெரும்பாலோனோர் செய்யும் தவறுகள்.

  பேராசை – அதிகம் வாங்கும், நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது அதுவும் குறுகிய காலத்தில்
  பயம் – நாம் வாங்கியுள்ள பங்கின் விலை வீழ்ச்சி காணத்துவங்கியதும் பயத்தில் சட்டென்று நட்டத்திலே விற்க துவங்குதல்.
  அறியாமை – இது என்னெவென்றே அறியாமல் பிறர் சொன்னார்கள் என்று பணம் போட்டவர்கள்.
  பிறர் சொன்னதை கேட்டு தான் சிந்திக்காமல் ஆராயாமல் பணம் போடுதல்.
  இதை சூதாட்டமாக நினைத்து பணம் போடுபவர்கள்
  தன்னுடைய அன்றாட செலவுகளுக்கு பணம் ஒதுக்காமல் முழுவதையும் பங்கில் போடுதல்
  சில மணி நேர உழைப்பு தொடர்ந்து கண்காணித்தல் சிறுக சிறுக முன்னேறுதல் என்பது எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கும்.

  மேலும் பேசுவோம்…..
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 10. #22
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  49,042
  Downloads
  126
  Uploads
  17
  தமிழில் பங்குச் சந்தை தொடுப்பு


  பாலாஜி என்பவர் தமிழ் மீடியா தளத்திற்காக Technical Analysis பற்றி எளிமையாகவும் அழகாகவும் விளக்கியுள்ளார். இதனை நினைவில் வைத்துக் கொண்டு அடிப்படை பாடங்களை அறிந்தப் பின் இந்த தளத்திற்கு சென்று மேலும் பயன் பெறலாம்.

  http://www.4tamilmedia.com/knowledge...ajilvom-panku1

  குறிப்பு – இப்போதே படித்தால் மிகவும் கடினமோ என்று எண்ணத் தோன்றும். அதனால் சற்றே தேர்ச்சி பெற்றப் பின் இந்த தளத்திற்கு செல்லும்.

  பிற தளங்கள்

  http://www.onworkindia.com/2013/08/blog-post.html

  http://sharemakt.blogspot.com/p/blog-page_16.html

  பல வலைப்பூக்களும் இணைய தளங்களும் ஆர்வமாக தமிழில் பங்குச் சந்தைப் பற்றி எழுதவேண்டும் என்று துவக்கப்பட்டு பிறகு நின்றுப் போய்விட்டன. அந்த கதி இந்த வலைப்பூவிற்கும் ஏற்படலாம். துவக்கியவர்களுக்கு நேரமின்மையோ அல்லது அதிக பங்களிப்புக்கள் கருத்துக்கள் வராத காரணங்களாலோ அல்லது இன்னும் பங்குச் சந்தை தமிழகத்தில் பிரபலமாகததோ காரணங்களாக இருக்கலாம்.

  தமிழில் பங்குச் சந்தை பற்றி வெளியாகும் ஒரு சிறப்பு இதழ் நாணயம் விகடன் தான். ஏனோ மற்றவர்கள் இந்த பகுதிக்கு அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.

  http://www.vikatan.com  மேலும் பேசுவோம்…..
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 11. #23
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  49,042
  Downloads
  126
  Uploads
  17
  எங்கு முதலீடு செய்யலாம்


  முன்பு பேசியதிலிருந்து தொடர்ந்து பேசுவோம்.

  நிலம், வீடு, தங்கம், வெள்ளி, வங்கி சேமிப்பு என்று பார்த்தோம்.

  நிலம் வாங்குவதின் நிலை பற்றி பேசினோம்.

  அதுபோல

  வீடு

  வாங்கும் வீட்டில் நாமே குடியிருந்தால் வாடகை மிச்சமாகும்

  வங்கி கடன் மூலம் வீடு வாங்கியிருந்தால் தவணை மற்றும் மிச்சமாகும் வாடகை இரண்டையும் கூட்டி கழித்து பார்க்க வேண்டும்

  நாம் ஒரு வீட்டில் இருந்துக் கொண்டு இன்னொரு வீட்டை முதலீடாக நினைத்து வாங்கினால் அதன் வாடகை விகிதம் என்ன செலவுகள் என்ன என்று கணக்கு பார்க்க வேண்டும். எடுத்துக் காட்டாக 20 லட்சம் ரூபாயில் வீடு வாங்கி மாதம் 10,000 ரூபாய் விகிதம் 1,20,000 வருமானம் வந்ததென்றால் இதில் ஆகும் செலவுகள்

  வீடு பராமரிப்பு செலவு
  சொத்து வரி
  வருமான வரி
  இந்த 20 லட்சம் Fixed Depositல் போட்டிருந்தால் சுமார் 1,80,000 கிடைத்திருக்கும். வருமான வரி தவிர்த்து வேறு வரி இல்லை.

  இந்த வீடு பன்மாடி குடியிருப்பாக இருந்தால் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதன் விற்ப்பனை விலை ஏறும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. தனி வீடுாக இருந்தால் வாடகையும் கிடைக்கும் விற்கும் போது குறைந்த பட்சம் இரண்டு மடங்காக திரும்பி வரும். ஆனாலும் நாம் வாங்கிய இடத்தையும் பொருத்திக்கிறது. மனைக்குதான் மதிப்பு. நாம் கட்டிய வீட்டின் மதிப்பு அதிகம் இல்லை.

  மேலும் ஊரை விட்டுத்தள்ளி வாங்கியிருந்தால் அடிக்கடி சென்று பராமரிப்புகள் செய்ய வேண்டும்.

  மேலும் நினைத்த மட்டில் வீட்டை விற்க முடியாது. அவசரமாக பணம் வேண்டும் என்றால் விற்க முடியாது. வங்கியில் அடமானம் வைப்பதும் சுலபத்தில் நடப்பதில்லை. எதிர்பார்த்த பணமும் கிடைப்பதில்லை.

  எனக்கு வருமானம் வேண்டாம். எதிர்கால சந்ததிக்காக ஒரு வீடு மனையுடன் வாங்கி வைக்கிறேன் என்று நினைத்தால் அதற்கு வீட்டை கட்டி பணம் முடிக்கத்தேவையில்லை. வெறும் மனை வாங்கியே விட்டிருக்கலாம்.

  இவ்வாறாக பணம் முடிக்கப்பட்டுவிடுகிறதா அல்லது பணம் மேலும் பணம் பண்ணுகிறதா என்று பார்க்கவேண்டும். அதனூடே வரும் தொல்லைகளையும் பார்க்க வேண்டும்.

  தங்கம்

  நகையாக வாங்குவதில் வீட்டில் உள்ள பெண்டிருக்கு சுகம், பெருமை, மகிழ்ச்சி.

  ஆனால் முதலீட்டாக வாங்குகிறேன் என்று சொல்லி நம்மை ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.

  நகைகளாக வாங்கும் போது செய்கூலி சேதாரம் என்று 100க்கு 20 போய்விடுகிறது. மேலும் விற்கும்போது இன்னும் கொஞ்சம் போய்விடுகிறது.

  1 கிராம், 5 கிராம், 10 கிராம் கட்டிகளா 24-கேரட் வாங்கி வைக்கலாம். ஆனால் பாதுகாப்பிற்கு கவலைப் பட வேண்டும். திடீரென்று விற்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும்.

  இ-கோல்ட் அல்லது Gold ETFல் பணம் போடலாம். சுலபமானது. வேண்டும் போது விற்கலாம். பாதுகாப்பிற்கு பஞ்சமில்லை.

  அதிலும் யோசிக்க வேண்டியது தங்க விலை ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. அதில் போட்ட பணம் நமக்கு எத்தனை விகிதத்தில் லாபம் ஈட்டித் தருகிறது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

  வெள்ளி

  வெள்ளி பாத்திரங்கள், பூஜை பாத்திரங்கள் என்று வாங்குகிறோம். அது எந்த அளவில் பயன்படுகிறது என்பதை உணரவேண்டும். அது ஒரு முதலீட்டு சாதனமாக இன்னும் பிரபலமடையவில்லை.

  Gold ETF போல இன்னும் Silver ETF வரவில்லை.

  Returns என்ன என்பதை யோசிக்க வேண்டும்.

  வங்கி சேமிப்பு பற்றி அடுத்த பதிவில் பேசலாம்.

  மேலும் பேசுவோம்….
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 12. #24
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  49,042
  Downloads
  126
  Uploads
  17
  வங்கி சேமிப்பு சாதனங்கள்


  State Bank of Indiaவின் வட்டி விகிதங்கள்

  image


  http://www.sbi.co.in

  ஒரு வருடத்திற்கு மேலாக வைத்திருந்தால் 9% கிடைக்கிறது. சில கூட்டறுவு வங்கிகள் 12 சதவீதம் கூட தருகிறார்கள். எல்லா வங்கிகளிலும் பணம் போட முடியாது. தனியார் வங்கிகள் அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் அதிக வட்டி தருகிறார்கள் என்று பணம் போட்டு ஏமாந்தவர்கள் தொலைகாட்சியில் வந்து புலம்புவதை பார்த்திருக்றோம். ஆனாலும் நாம் விடாமல் ஏமார்ந்து வருகிறோம்.

  சராசரியாக நம் முதலீடு வகைகளில் எது சிறந்த வருமானத்தை தருகிறது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். அவ்வாறாக மனை வீடு வியாபாரம் தவிர்த்து மற்ற சாதனங்களை ஆராய்ந்து இந்த அட்டவணை வெளியிட்டிருக்கிறார்கள்.

  image


  Courtesy: http://moneyexcel.com/4406/sensex-vs...m-1981-to-2013

  தங்கம் 9.08
  வெள்ளி 8.84
  வங்கி சேமிப்பு 9.25
  பம்பாய் பங்கு சந்தை 15.27
  இதிலிருந்து பங்கு வர்த்தகம் அதிக வருமானம் ஈட்டித்தந்திருப்பதை அறியலாம்.

  மேலும் பேசுவோம்…
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •