Results 1 to 7 of 7

Thread: நான் கவிக்காக கர்ப்பமானேன்!!

                  
   
   
 1. #1
  இளையவர் Sabeekshana's Avatar
  Join Date
  25 Jul 2014
  Location
  Mumbai
  Age
  28
  Posts
  74
  Post Thanks / Like
  iCash Credits
  2,072
  Downloads
  0
  Uploads
  0

  நான் கவிக்காக கர்ப்பமானேன்!!  உவமை தனை கலந்து
  உருவகம் தனை களைந்து
  உருத்திரிபுற நீ பிறக்க
  உருக்கமாய் பரமனை வேண்டினேன்!!

  இப்பிரசவமே ஒரு பரவசமாய்
  பிறழ்வுகள் ஏதும் அற்ற
  பிணிகளுக்கு நிர்ப்பீடனமான
  பிஞ்சாக உனை ஈன்பேன்!!

  என் உணர்வுகள் உருவம் பெற
  உத்தமனாய் நீ உதிப்பாய்!!
  என் கற்பனைகள் கலை வடிவம் பெற
  காவியமாய் நீ பிறப்பாய்!!

  பத்தியங்கள் ஏதுமில்லை
  பத்து மாதம் காக்கவில்லை- ஆனால்
  தத்துவங்கள் பலவற்றை நீ
  தத்ரூபமாய் படம் பிடித்தாய்!!

  எந்தன் சிதைவினிலே
  சிலையாக உனை வடித்தேன்!!
  கண்ணாளன் துணை இன்றி
  கர்ப்பமானேன் நான் உனக்காக!!
  Last edited by Sabeekshana; 10-08-2014 at 05:39 PM.
  ......................................................................................................................
  "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

  அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

  .......................................................................................................................

  வாழ்க வளமுடன்
  இப்படிக்கு
  சே. சபீக்ஷனா

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  73
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  78,306
  Downloads
  16
  Uploads
  0
  கவிமன்னன் கம்பனைப்போல் பெருங்கர்ப்பம் யார்தரித்தார் ?
  புவியினும் பெருஞ்சுமையை அவன்போலே யார்சுமந்தார் ?
  பத்தாயிரம் கவிக்குழந்தை பெற்றெடுத்த கம்பனுக்கு
  எத்தாயும் இணையாமோ கூறிடுவீர் எம்தோழி !


  இளங்கோ ஈன்றெடுத்த சிலம்புக் குழந்தையினை
  உளமாரப் பாராட்டி உச்சிமோந்தான் பாரதி
  கொள்ளை அழகுடனே பிறந்த குழந்தையினைக்
  கொஞ்சாத தமிழரும் உண்டோ இப்புவியில் ?


  அய்யன் வள்ளுவனின் கர்ப்பத்தில் பிறந்ததுதான்
  ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங் குழந்தை
  குழந்தை ஒவ்வொன்றும் கூறிடுமே ஒருநீதி
  குவலயம் முழுதுக்கும் சொந்தமே அக்குழந்தை !  வித்தியாசமான கற்பனை ! பாராட்டுக்கள் சபீக்ஷனா !!
  Last edited by M.Jagadeesan; 10-08-2014 at 03:22 PM.
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

 3. Likes அனுராகவன் liked this post
 4. #3
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  36,875
  Downloads
  146
  Uploads
  3
  மாறுபட்ட நடையில் ஓர் தமிழ் கவிதை ...வாழ்த்துக்கள் சபீக்ஷனா..தொடரட்டும் ..


  குறிப்பு: இதில் ஈன்றது ஆடு குட்டி இரண்டு என்பது போல் ,ஈண்பேன் என்பது ஈன்பேன் என வரவேண்டும்..
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

 5. #4
  இளையவர் Sabeekshana's Avatar
  Join Date
  25 Jul 2014
  Location
  Mumbai
  Age
  28
  Posts
  74
  Post Thanks / Like
  iCash Credits
  2,072
  Downloads
  0
  Uploads
  0
  நன்றி ஜெகதீசன் ஐயா மற்றும் ஜெய் அவர்களே!!

  தங்கள் கவிதையை ரசித்தேன் ஜெகதீசன் ஐயா!!

  ஜெய் எழுத்து பிழையை சுட்டியமைக்கு நன்றிகள்!!
  ......................................................................................................................
  "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

  அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

  .......................................................................................................................

  வாழ்க வளமுடன்
  இப்படிக்கு
  சே. சபீக்ஷனா

 6. Likes அனுராகவன் liked this post
 7. #5
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  27 Mar 2011
  Location
  madurai
  Age
  56
  Posts
  539
  Post Thanks / Like
  iCash Credits
  46,016
  Downloads
  2
  Uploads
  0
  நிர்ப்பீடனம் என்றால் என்ன?

  கவிதை பிறப்பதற்கும் தாய் தந்தை வேண்டுமே?
  தாய் நமது மணம் ..தந்தை நமது மொழித்திறன் மற்றும் எண்ணவளம் ..
  வித்தியாசமான நடை..பாராட்டுகள் Sabeekshana

 8. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
  Join Date
  24 Jan 2008
  Location
  சிங்கப்பூர்
  Posts
  5,009
  Post Thanks / Like
  iCash Credits
  31,113
  Downloads
  25
  Uploads
  3
  கவிதை மிக அழகாக உள்ளது தோழி...
  என்றும் அன்புடன்
  அச்சலா

  ..................................................................................
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  ..................................................................................

 9. #7
  இளையவர் Sabeekshana's Avatar
  Join Date
  25 Jul 2014
  Location
  Mumbai
  Age
  28
  Posts
  74
  Post Thanks / Like
  iCash Credits
  2,072
  Downloads
  0
  Uploads
  0
  ஜான், நிர்ப்பீடனம் என்பது "உடலின் நோயெதிர்ப்பு சக்தியை" குறிக்கும். ஆங்கிலத்தில் இதனை "immunity" என்பார்கள். இங்கு நான் கருதுவது "இயற்கையான நிர்பீடனம்" (Inherent immunity) என்பதனையே.


  பாராட்டுக்கு நன்றிகள் ஜான் மற்றும் அச்சலா.
  ......................................................................................................................
  "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

  அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

  .......................................................................................................................

  வாழ்க வளமுடன்
  இப்படிக்கு
  சே. சபீக்ஷனா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •