Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: இட்டலி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    இட்டலி

    பாவையின் கன்னம்போல் மென்மையான இட்டலி
    ...பார்த்தாலே நாவூறும் சுவையான இட்டலி
    தேவா மிர்தமும் இட்டலிக்கு ஈடாமோ ?
    ...தேங்காய்ச் சட்டினியும் , பருப்பு சாம்பாரும்
    பூவான இட்டலிமேல் நல்லெண்ணெய் கலந்த
    ...பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா !
    மூவாசை வென்ற முனிவரும் யோகியரும்
    ...துறப்பரோ இட்டலிமேல் அவர்கொண்ட காதல் !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தோசைக்கு மாற்றோ இந்த இட்டலி..அனைத்தையும் துறந்தவர் தான் துறவிகள் இவ்வாறு ஆசையை துறக்காதிருப்பவர் துறவியலல்லர்.தொடரட்டும் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    எல்லாவற்றையும் துறப்பதுதான் துறவிக்கு அழகு .இதில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது ஆனால் சில துறவிகளின் நெஞ்சில் சில ஆசைகள் ஒட்டிக்கொண்டு இருக்கும் . இது அவர்களுக்கே தெரியாது.

    இளங்கோ அடிகள் முற்றும் துறந்த முனிவர்தான். ஆனால் தமிழ் மொழியின்மீது கொண்ட பற்றை அவரால் துறக்க இயலவில்லை. அதன் விளைவாக எழுந்ததுதான் " நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் "
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    பசியைத் தூண்டி விட்டீர்களே ஜெகதீசன்..

  5. #5
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    ஆகா! இட்டலிக்குத்தான் பல வகையான தொட்டுகைகள், துவையல்கள், பொடிகள், தொக்குகள், சாம்பார்கள், சட்னிவகைகள், ரசங்கள், குழம்புகள் இப்படி என்னிலடங்கா பட்டியல்.... சிலபேர் பீரையும் மோரையும் கூட தொட்டுக்கிறார். அதை சாப்பிடும் போதுகூட இட்டலியால தொட்டுஞ்சாபிடலாம் தொட்டுக்கைய இட்டலிமேல போட்டுஞ்சாப்பிடலாம். ஆனா இட்டலியய்யே எப்ப எப்படி தொட்டுகையா சாப்பிடலாம் தெரியுமோ......

    முதநா ராத்திரி நிறைகட்டுன சாதத்த தொடம தண்ணிஊத்தி உறவிட்டு மறுநா காத்தால பல்ல மட்டும் விளக்கிட்டு ஒரு வட்டுல தண்ணிசாதத்த விட்டு, கெட்டி தயிரும், இரண்டா வெட்டிய வெங்காயமும், கொஞ்சம் கிள்ளிய மல்லி, கறிவேப்பிலை இட்டு பக்கத்தில வச்சிகிட்டு ஒரு தட்ல ஒரு இட்டலி அது மேல நேத்தி வைச்ச புளிகொழம்பு இல்லன்னா தாளிச்சட்னி விட்டு தொட்டுகிட்டு பழையத ஒரு வெட்டு வெட்டலாம்........ம்..ம்..... தின்னுகெட்ட குடும்பம்! திட்டுவேற!

    ஜெகதீசன் அய்யா! இப்படி சாப்பிட்டா முனிவருக்கென்ன அந்த முக்கண்ணனுக்கே பிட்டுமேல பற்றுபோய் இட்டலிமேல ஆசை வந்திடும்.
    என்றென்றும் நட்புடன்!

  6. #6
    இளையவர் Sabeekshana's Avatar
    Join Date
    25 Jul 2014
    Location
    Mumbai
    Age
    31
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    2,462
    Downloads
    0
    Uploads
    0
    ஐயா நான் தற்போதே சென்று தாயாரிடம் இட்லி வேண்ட போகிறேன்.

    நாவின் சுவை நரம்புகளை தூண்டியமைக்கு நன்றி!!
    ......................................................................................................................
    "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

    அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

    .......................................................................................................................

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு
    சே. சபீக்ஷனா

  7. Likes அனுராகவன் liked this post
  8. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அருமையானதொரு பாடல் பெற்ற இட்டலி பாக்கியசாலி. அந்த அருமையான இட்டலி கிடைக்கப்பெற்றவர் அதிபாக்கியசாலி. பாராட்டுகள் ஐயா.

  9. Likes அனுராகவன் liked this post
  10. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    பாராட்டுக்கள் நண்பா...அருமையாக இருக்கு
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  11. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நாஞ்சில் த.க.ஜெய் , டெல்லாஸ், கு. பிள்ளை, சபீக்ஷனா , கீதம் மற்றும் அச்சலா ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  12. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    Smile

    ஒரு வெள்ளைக் காரரிடம் பேசிக் கொண்டிருந்தேன், உங்க சாப்பாடுகள் அருமையா இருக்கும்னு எனக்கு கூறினார், தொடர்ந்து பேசுகையில் தான் எப்பவோ ஒரு தடவை துபாயில் சாப்பிட்ட உணவு வேண்டுமென அடம் பிடித்தார். அவர், வர்ணித்த விதத்திலேயே புரிந்தது அவர் சாப்பிட்டது இட்லியென்று....

    ஒரு தடவை சாப்பிட்டவரையே, தன் வசம் இழுத்த வல்லமை இட்லிக்குத்தான் உண்டு போல...!!

    அருமையாக சந்த நயத்துடன் அமைந்த இட்லிப் பாடலுக்கு என் வாழ்த்துகளும்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  13. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    ஹா ஹா...

    இட்டலிக்கு கிடைத்த பாராட்டு ,
    இட்டலி சுட்டவருக்கு தெரியுமா..??

    அப்படியே ஒரு சந்தேகம்..
    அது இட்லியா
    இல்லை இட்டலியா..??
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  14. Likes ஓவியன் liked this post
  15. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    நுமதருமைத்தமிழால் பாடல் பெற என்ன தவம் செய்ததோ அந்த இட்டலி. இட்டலி சமைத்தவரையும் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  16. Likes ஓவியன் liked this post
Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •