இந்திய விஞ்ஞான மரபு
1. கும்பமுனி தந்த கும்ப மின்சாதனம்

(வெண்பா)

மேல்விவரம்:
'India's Glorious Scientific Tradition' by Suresh Soni
http://books.google.co.in/books?id=m...page&q&f=false

மட்பானை ஒன்றில் மயில்துத்தத் தூள்வைத்தே
மட்டமாய் மேலொரு தாமிரப் பட்டை
அதன்மேல் நனைந்த மரத்தூள் பரப்பியே
பாதரசப் பூச்சுள்ள நாகத் தகடிட்டால்
சாதனம்மின் சக்தி தரும். ... 1

[மயில்துத்தம் = copper sulphate; நாகம் = துத்தநாகம் = zinc]

மேனாட்டார் மின்சக்தி மின்கலம் காணுமுன்னே
ஞானி அகத்தியர் ஞாலம் அறியத்தம்
சம்ஹிதையில் மின்கல சாதனம் தந்தது
நம்பெருமை என்றுணர்வோம் நாம். ... 2

இந்தியவிஞ் ஞானியர் இவ்வுண்மை ஆய்ந்தக்கால்
அந்தமுனி சொன்ன ’மயில்கழுத்தைத்’ தேடிப்பின்
ஆயுர்வே தத்தால் மயில்துத்தம் என்றறிந்தே
ஆய்வில் சயம்பெற் றனர். ... 3

[’மயில்கழுத்து’: மூலச் செய்யுளில் உள்ளா ’ஶிகிக்ரீவ’ என்னும் பதம்]

ஒன்றுடன் புள்ளியில் முப்பத்து எட்டென ... [1.38 volt]
நன்கமைந்த வோல்டேஜ் நலனால் - கலனவை
நூறானால் மின்சக்தி யூற்றெனச் சொன்னதை
மாறாமல் கண்டறிந்த னர். ... 4

அறுவகை மின்சக்தி ஆய்ந்தனர்நம் முன்னோர்
புறணியோ பட்டோ உரசத் தடித்சக்தி
கண்ணாடி ரத்னமு ராய்வில்சௌ தாமனி
விண்முகில் மோதவரும் மின்னலது வித்யுத்தாம்
மட்கலன் நூறில் சதகும்ப சக்தியாம்
மட்கலன் ஒன்றில் வருமே ஹிருதனி
காந்தம் அசனி தரும். ... 5

[புறணி = தோல்]

கும்பத் துதித்த குறுமுனி செய்திபோல்
நம்மூல நூல்களில் நானா விதமுண்டு
முன்னோர் மொழியை முழுமூச்சாய்க் கற்றாய்ந்தால்
நன்மைபல உண்டே நமக்கு. ... 6

--ரமணி, 11/07/2014, கலி.27/03/5115

*****