Results 1 to 3 of 3

Thread: ஆசிர்வாதம்!!!

                  
   
   
 1. #1
  இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  நாடோடி
  Posts
  627
  Post Thanks / Like
  iCash Credits
  34,787
  Downloads
  85
  Uploads
  0

  ஆசிர்வாதம்!!!

  "அம்மா... நாளைக்கு திங்க கிழம ஃபைனல் செமஸ்டர் எக்ஸாம். ஒரு வாரத்துக்கு, நடுவ லீவே இல்லாம. எப்படியாவது பேயா படிக்கணும்"

  "பரிட்சை முடிஞ்சதும்... நீ வீட்டுக்கு வந்துட்டு போனா நல்லாருக்கும். ஆனா உன்னை தான் உடனே வேலைக்கு சேரச் சொல்ராங்களே"?"

  "ம்..இங்கிருந்து நேரா நான் வேலைக்கு ஜாய்ன் பண்ணனும். அப்பாவ வர்ற மூனாம் தேதி இங்கே வரச்சொல்லு!"

  "தாத்தா தான் நீ எப்ப வருவே நீ எப்ப வருவேன்னு நாளைக்கி ரெண்டு தரம் கேக்குரவோ. உனக்கு படிக்கும் போதே வேலை கைடச்சதே சொன்னப்பவே அவொளுக்கு சந்தொசம் தாங்கலே. பட்டம் வாங்குரதே பாக்க கண்டிப்ப வருவோ"

  "கான்வோகேஸனுக்கு இன்னும் நாள் ஆகும்மா...அது இப்ப வராது...ஆனா இங்கே வரும் போது கோயமுத்தூர் பக்கம் தான் மருதமலை. தாத்தாவோட ஆஸ்தான முருகன் கோயில். அங்கே ஒரு நாள். அப்பரம் ஊட்டிக்கு ஒரு நாள். கான்வோகேசனுக்கு வந்தது போலவும் இருக்கும்... அப்படியே ஊர் சுத்துன மாதிரியும் இருக்கும்.."

  "சரி சரி....நீ போயி பரிச்சைக்கு படிக்கிற வழிய பாரு"

  "ஓகேம்மா.. அப்பா தாத்தாவ கேட்டத சொல்லு. நான் வைக்கிறேன்".

  அம்மாவோட அப்பா தான் இந்த தாத்தா. அம்மாவோட கூட பொறந்த 3 மாமா அப்பரம் ஒரு பெரியம்மா எல்லாருக்கும் சேத்து பதினோரு பேரப் புள்ளைங்க தாத்தாவுக்கு. ஆனா என் மேல மட்டும் தாத்தாவுக்கு பாசம் கூடன்னு எனக்கு தோனும். ஒருவேள நான் சின்ன வயசுலேருந்து நல்லா படிச்சுகுட்டு வர்றதும், இப்ப எங்க குடும்பத்துல நான் மட்டும் தான் இஞ்னியரிங் வரைக்கும் படிச்சுருக்குறதும் கூட ஒரு காரணமா இருக்கணும்.தஞ்சாவூர் மாவடத்துல இருக்குல ஒரு கிராமம் தான் என் ஊர். இங்கே கோயமுத்தூர்ல பி ஈ படிக்கிறேன்.

  வாங்குற முதல் சம்பளத்துல தாத்தாவுக்கு நல்ல வேட்டி, துண்டு, நடக்குற கைப்பிடி கம்பு எல்லாம் வாங்கணும். அவொகிட்ட இது எல்லாத்தையும் கொடுத்து கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும். பாழப்போன விவசாயத்தை வச்சுகிட்டு இந்த அஞ்சு பிள்ளைகளையும் எப்படியோ கஷ்டப்பட்டு கடையேத்தி விட்ட களைப்பு அவொளோட நெத்தி சுருக்கத்துலே தெரியும். அவொகிட்ட போயீ.."இங்க பாருங்க தாத்தா... சேத்த மிதிக்காம... மழய எதிர்பாக்காம...வருசத்துக்கு ரெண்டு போயி இப்ப ஒரு முறை பண்ற வெள்ளாமை பண்ணாம... மாசாமாசம் சம்பளம் வாங்குறேன்"ன்னு சொல்லணும். "இந்த கஸ்டமெல்லாம் என்னோட போகட்டும்.. நீங்களாவது படிச்சு நல்ல இருங்கப்பா.."ன்னு நான் அவொள பாக்கும் போதெல்லாம் சொன்னது எனக்கு எப்பவும் ஞாபகம் வரும்.

  ரெண்டு மாதம் எங்கள் காலெஜ் ஸ்ட்ரைக் ஆனதுல...எக்சாம் எல்லாம் லேட்டாக நடக்குது. நான் எக்ஸாம் முடிச்சுட்டு அப்பாவோட திருவணந்தபுரம் நேரா போயி வேலையிலே சேர்ந்தேன். அப்பா ரெண்டு நாளு தங்கி இருந்துட்டு வீட்டுக்கு பொயிட்டவொ. ஒரு மாசம் எப்படிடா முடியும்.. சம்பளம் எப்ப தவுவாங்கென்னு காத்துகிட்டு இருந்தேன்..சொல்லி வச்ச மாதிரி இந்த மாசம் வியாழக்கிழம முடியுது. வெள்ளிக் கிழம சம்பளம் எப்பயும் கிடச்சுடும். அன்னைக்கு ராத்திரி ஊருக்கு கிழம்பி போயிகிட்டே இருக்கணும் னு முடிவு பண்ணிட்டேன். வெள்ளிக் கிழம என் கூட வேலை பாக்குற எல்லாருக்கும் சம்பளம் போட்டாச்சுன்னு மெயில் வந்துருச்சு.. எனக்கு மட்டும் வரலே... உடனே... நான் போயி ஹச் ஆர் கிட்டே கேட்டா.. நான் ஆறாம் தேதி வேலைக்கு சேந்ததுனாலே இந்த மாசம் சம்பளம் கொடுக்க முடியாது. அடுத்த மாசம் தான் சேத்துக் கொடுப்போம்ன்னு சொல்லிடாங்கெ.... ஃபோன் போட்டு இந்த வாரம் வீட்டுக்கு வர முடியாதுன்னு விவரத்தை சொன்னேன்...

  இன்னும் ஒரு மாசம் எப்படியோ பல்ல கடிச்சுகிட்டு ஓட்டிட்டேன். ஏறக்குறைய டபுள் சம்பளம் வந்திருந்துச்சு. அன்னைக்கு சாய்ங்காலமே ஜவுளிக் கடைக்கிப் போயி... அம்மாக்கு சீலை, அப்பாக்கு வேட்டி, சட்டை தத்தாவுக்கு நல்ல அரக்கு கலர் பட்டையா பார்டர் போட்ட கதர் வேட்டி, துண்டு வாங்கினேன். ஆனால் எவ்வளவோ தேடியும் தாத்தாவுக்கு கைப்பிடிக் கம்பு மட்டும் வாங்க முடியல. வீட்டிக்கு போன பிறகு அவொள அழச்சுகிட்டு பட்டுக்கோட்டைக்குப் போயி வாங்கிக் கொடுக்கணும்ன்னு நினச்சுகிட்டேன். பஸ்லே போட்டு அடிச்சு ஒரு வழியா ஊருக்கு வந்தேன். முதல்ல எங்க தாத்தா வீடு தான் வரும். அதுனாலே அங்கே போகலான்னுட்டு நேரா அவொ வீட்டுக்கு போனேன்.

  "தம்பி.. சொல்லி வச்ச மாதிரி வந்துடுச்சு... தாத்தாவுக்கு இழுத்துகிட்டு இருக்கு.. உன்னை தான் எதிர் பாக்குறவளொ என்னவோ.. நீயும் போயி அவொ வாயீலே பாலுத்து.." பக்கத்து வீட்டு சித்தப்பா சொன்னார்.

  வீட்டின் வாசலில் பென்ஞ்சியில் கடைசியாய் குளித்து விட்டு நான் வாங்கிய வேட்டி, துண்டுடன் கழுத்தில் மாலையுடன் தாத்தா.......!
  Last edited by lenram80; 27-06-2014 at 06:02 PM.
  உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
  "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
  எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
  -லெனின்-
  என் முக நூல் பதிவுகள்

 2. #2
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  48
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  96,476
  Downloads
  21
  Uploads
  1
  ஒத்திப்போடப்படும் சில தருணங்கள் இப்படியான வேதனைகளில் முடிவது வாழ்நாள் முழுக்க மனத்தை அழுத்தும் பாரம்.

  கதை போகும் போக்கிலேயே முடிவு இப்படியாகத்தான் இருக்கும் என்று புரிந்துவிடுகிறது.

  இருப்பினும் தாத்தாவுக்கும் பேரனுக்குமான பந்தம் பேரனின் வரிகளூடே அழகாக சொல்லப்பட்டிருப்பது மனம் ஈர்க்கிறது. பாராட்டுகள்.

 3. #3
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  34,725
  Downloads
  146
  Uploads
  3
  நாளை பார்க்கலாம் எனும் சொல் ஏற்படுத்தும் இழப்பு நீங்க வடு ..கதை அருமை..
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •