Results 1 to 4 of 4

Thread: சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6

    சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்

    நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அது சில நேரம் எதிர்மறையாகி விடுகிறது.

    நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்த வரை, ஒவ்வொரு பழமும் ரத்தச் சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது. முன்னெச்சரிக்கையாக சில பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். ஏனென் றால், ரத்தச் சர்க்கரை அளவை மோசமாக உயர்த்தக்கூடிய பழங்களும் உள்ளன.
    சர்க்கரை அளவின்படி பழங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு பழத்தின் ஜி.ஐ, (GI - Glycemic Index) குறியீட்டு எண்ணை அறிந்துகொண்ட பின், உண்ண வேண்டும். ஜி.ஐ. என்பது கிளைசிமிக் குறியீடு. நீரிழிவு நோய் உள்ளவர்கள் 55 அல்லது அதற்கும் குறைந்த அளவுள்ள ஜி.ஐ. குறியீட்டைக் கொண்ட பழங்களை உண்ணலாம். ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றில் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவாக இருப்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இந்தப் பழங்களைச் சாப்பிடலாம்.

    மாம்பழம்
    மிகுந்த சர்க்கரை இருப்பதால் பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழத்தைத் தவிர்க்க வேண்டும். உட்கொண்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

    சப்போட்டா
    இந்தப் பழத்தின் ஜி.ஐ. குறியீட்டு எண் 55க்கு மேலே உள்ளதால், இதைத் தவிர்க்க வேண்டும். இப்பழத்தில் சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் அதிகம்.

    திராட்சை
    நார்ச்சத்து, வைட்டமின் எனப் பல ஊட்டச்சத்துகள் நிறைந்த திராட்சையில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது. 100 கிராம் திராட்சையில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

    வாழைப்பழம்

    அரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இதன் ஜி.ஐ. 46 முதல் 70 வரை. பழுத்த வாழைப்பழங்களைச் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

    தர்பூசணி
    குறைந்த நார்ச்சத்து, குறைந்த கலோரி உடைய தர்பூசணி பழத்தில் ஜி.ஐ குறியீடு 72. வைட்டமின் ஏ, சியும் அதிகமாக உள்ளன. அரை கப் தர்பூசணியில் 5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

    அன்னாசி
    அதிகக் கிளைசிமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கோப்பை அன்னாசிப் பழத்தில் 20 கிராமுக்கு மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

    சீத்தாப்பழம்
    வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, நார்ச்சத்து நிரம்பிய இப்பழத்தில் சர்க்கரை அதிகம். 100 கிராம் சீத்தாப்பழத்தில் 23 கிராமைவிட அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது.

    முந்திரிப்பழம்
    நீரிழிவு நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். 103 ஜி.ஐ. மதிப்பு கொண்ட இப்பழத்தின் கால் பங்கிலேயே 24 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

    - டி.எஸ்.உமாராணி, மதுரை.


    நன்றி:www.tamil.thehindu.com
    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  2. #2
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    அது சரி, பேசாமே, சக்கரை நோய் இருந்தா, எந்த பழமும் சாப்பிடாமே இருங்கன்னு சொல்லாமே விட்டாங்களே ! என்ன பழம் சாப்பிடலாம் ? எவ்வளவு சாப்பிடலாம் என்பதை சொன்னால் நல்லா இருக்கும். சாப்பிடாதேன்னு சொன்னா அது எப்படி? இந்த பழம் சாப்பிடக் கூடாதுன்னாலே, சாப்பிட ஆசை வருமே ? ஹிந்து சும்மா டென்ஷன் பண்ணறாங்க !

    அமீன் ஐயா, நீங்களாவது கொஞ்சம் பாசிடிவா சொல்லுங்களேன் !


    இது சரியா? " நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய்ப்படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு. அதனாலே, கொய்யா , பேரிக்கா, நாகப்பழம் , ஆப்பிள் நல்லது. " இது போல நீங்க சொல்லுங்களேன் !
    Last edited by முரளி; 13-06-2014 at 05:18 AM.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஆப்பிளைச் சாப்பிட்டால் தப்பில்லை அத்தோடு
    ...அவ்வையுண்ட கருநாவல் கொஞ்சம் சேர்த்திடலாம்
    சாப்பிடத் திகட்டாத கொய்யாவும் நலம்பயக்கும்
    ...சாகா வரம்நல்கும் கருநெல்லி உண்டிடலாம்
    ஏப்பம் விடுமளவு வயிறுமுட்ட உண்ணாதீர்
    ...எத்துயர் வந்தாலும் கலங்காத மனம்கொண்டால்
    கூப்பிடு தூரத்தில் யமதர்மன் இருந்தாலும்
    ...குறையேதும் இன்றியே நீரிழிவை வென்றிடலாம்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. Likes முரளி liked this post
  5. #4
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    மிக்க நன்றி ஜெகதீசன். முட்ட முட்ட மாம்பழம், முக்கி முக்கி சாப்பிட்டேன். அதனால், இரண்டு மாதங்களுக்கு பிறகு, இப்போது சக்கரையின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகிவிட்டது. இது நீரிழிவு என்று சொல்வதற்கு இல்லை. ஆனாலும், வீட்டில் இப்போது கொஞ்சம் கண்டிப்பு. இந்த போஸ்ட் வேறு படித்து விட்டு, மாம்பழத்தை கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்று எனது ஏக பத்தினியின் , மூர்க்கமான பிடிவாதம். அந்த கோபத்தை கொஞ்சம் இங்கே கொட்டி விட்டேன். ஏதோ உங்கள் கவிதை கொஞ்சம் ஆறுதல். வாழ்க வளமுடன் !நான் கொஞ்சம் அளவாக இருந்திருக்கலாம். ஆனாலும், மாம்பழம் போச்சே! என்ன பண்ணுவேன் ! என்ன பண்ணுவேன் !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •