பதில் எங்கே
இருக்குழந்தைகள் மூன்று வயது.முழுவதும் மண்ணில் ஊன்றிய திண்ணை.அதன் ஒட்டில் கையினில் கிடைத்தன வைத்து விளையாடி கொண்டிருக்கிறன. தன் கையில் உள்ளதே சிறந்தது என தன் சம்பாஷனையில் அக்குழந்தை இக் குழந்தையிடம் காட்டியது.அதனை புரிந்து கொண்ட அக்குழந்தை இதை வேறு யாரிடமாவது கேட்டு பார்க்கலாம் என்று கர்ஜித்தது.அதன் முதுகுப்புறம் அமர்திருந்த பாட்டனிடம் மழலை மொழியினில் இப் பிரச்சினையை முன் வைத்தது.
இரண்டு கண்கள் ஒன்றோடு ஒன்று விளையாடிகொள்கின்றன கொன்றிருக்கிறது.இதில் நாம் என் தலையிடுவானேன் என பாட்டன் பார்த்து புன்முறுவல் பூர்த்து கொண்டிருந்தான். சுட்டி குழந்தை விட்டபாடில்லை ,மீண்டும் தீர்ப்பு வழங்க கோரியது.அதன் மொழியினில் பேசி அவர்களுக்கு முடிவு கூற அவனால் இயலவில்லை.
தன் தாய் மொழியினில் தீர்ப்பு கூற வாய் திறந்து நாக்கு சுழன்ற பொழுது ”அடியே ,ஊமை தாத்தனிடம் என்ன விளளையாடுறீங்க”என்றவாறே உள்ளிருந்து வந்தவள் தீர்ப்பு கோரிய குழந்தையை வாரி அனைத்தால்.அந்த செவிட்டு கிழத்திடம் என்ன வேண்டி
இருக்கு என்றவாரே அடுத்து வந்தவள் அமர்திருந்த பிள்ளையை தூக்கி கொண்டு வந்த திசையிலேயே நடையை கட்டினால்.
பொக்கை வாய் சிரிப்பு,கள்ளத்தனம் என எதும் அறியா ஆத்மா அப்படியே தான் அமர்திருந்தது.உங்கள் குறைகளை அவரிடம் சொல்லலாம்.கற்கால தெய்வம் போல் பார்த்து கேட்டு கொண்டே இருப்பார்.திட்டவோ அல்லது பதில் கூறவோமாட்டார்.பிறரிடம் உங்களை பற்றி பேசி நகையாட மாட்டார்.