Results 1 to 6 of 6

Thread: நெஞ்சம் பொறுக்குதில்லையே !!!

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    25 Oct 2013
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    875
    Downloads
    5
    Uploads
    0

    நெஞ்சம் பொறுக்குதில்லையே !!!




    தீராத நோயாக
    மாறாத சாபமாய்
    பணமெனும் விஷம்
    மனித ஜாதிக்குள் !!

    வாக்குகள் கால் குப்பி
    மதுவிற்கு விற்பனையாகிறது
    தேசமோ கட்சிகளிடம்
    அடகு போகிறது !!

    கட்சிகளோ உரிமைகளையும்
    நசுக்கி நம்மை
    அடிமையாக்கி ஆளுகிறது !!


    உயிர் நீத்து பெற்ற
    சுதந்திரம் எங்கே ?

    நல்ல தலைவனை
    பொம்மையாக அரியணையில்
    அமர்த்தி பொம்மலாட்டம்
    ஆடும் அரக்கர்கள் காலிலே !!


    விழுப் புண்ணை அணிகலனாக
    அணிந்த வீரம் எங்கே ?

    தூங்குகிறது நிம்மதியாக
    மெத்தையிலும் மதுவிலும்
    வீறுகொண்டு எழுகிறது
    தெருவிலே மங்கையிடமும்
    சாதிச் சண்டையிலும் !!


    எல்லையிலே அத்து மீறல்
    கோட்டையிலே நாட்டை
    விற்க பேச்சு வார்த்தை
    ஆனால்
    காதலுக்காக போராடும்
    குருட்டு சமூகம் !!


    மதத்தை மைதானமாக்கி
    சாதியை இரையாக்கி
    தேசத்தை வேட்டையாடும்
    அரசியல் ஓநாய்கள் !!


    தேசியக் கொடியை
    தலைக் கீழாக தொங்கவிடும்
    தேசபிதாக்கள் !!

    இவர்களின் மத்தியிலே நான்
    என்ன செய்வது ?

    ஊழலை தட்டி கேட்க
    நாதியில்லை
    விஸ்வரூபம் படத்திற்கு
    விஸ்வரூபமெடுக்கும் !!

    தாய் மொழி காக்க
    வக்கில்லை
    தலைவா படத்திற்கு
    தீக்குளிக்கும் !!

    இந்த மூடர் கூட்டமே
    நாடெங்கிலும் !!


    வேர்வை சிந்தியும்
    வயிறு நிறையாமல் சாகும்
    உழைப்பபாளியின் மரணத்தில்
    மகிழ்ச்சியுறும் முதலாளிகள் !!


    சாமியையெல்லாம் கண்ணைக்கட்டி
    காட்டுக்கு அனுப்பிவிட்டு
    காவியணிந்து களியாட்டமாடும்
    போலிச் சாமியார்ககளுக்கு

    சிறையும் அந்தபுரமாம்
    நீராட கங்கை நீராம் !!

    இன்னும் எத்தனை எத்தனையோ
    அவலங்கள்
    கண் முன்னே கணக்கிட்டு
    எழுத முடியவில்லை
    தீர்ந்தது என் பேனாவின் மை !!

    இவையெல்லாம்
    காணும் போது என்
    நெஞ்சம் பொறுக்கு தில்லையே !!


    வீர வாளாய் பிறந்தும்
    உறையிலே உறங்குவதா ?

    மறக்குடி மங்கையெனக்கு
    வேண்டாம்
    அந்த அவப் பெயர் !!

    நான்
    எழுதுகோலை வாளாக்கி
    எழுத்துக்களால் பட்டைதீட்டி
    போராடப் போகிறேன் !!

    நீங்கள் எப்படி ??

    இனியொரு மாகத்மாவோ
    நேதாஜியோ பகத் சிங்கோ
    பிறக்க மாட்டார் மண்ணில்
    எல்லோரும் உன்னில் !!

    விருப்பம் உங்களுடையது
    ஆனால்
    தேசத்தின் தலையெழுத்து
    உன் கையில்
    மறந்துவிட வேண்டாம்!!

    ---- சுதா ----

  2. #2
    புதியவர்
    Join Date
    01 Mar 2014
    Location
    Chennai
    Age
    30
    Posts
    17
    Post Thanks / Like
    iCash Credits
    679
    Downloads
    5
    Uploads
    0

    பாராட்டு

    பாராட்ட வார்த்தை இல்லை......

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    மிக அருமை..பகிற்வுக்கு நன்றி..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Oct 2013
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    9,387
    Downloads
    0
    Uploads
    0
    வீர வசனங்கள் சபாஷ் சுதா வருந்துகிறேன் இப்பதிவை
    நேரமின்றி போயிற்றே இப்பதிவை இத்தனை நாள் படிக்க
    பாரதனில் பாரதத்தின் பெருமை பேச உம் பேனாவிற்கு
    கூரதிகம் எழுங்கள் மேலும் மேலும் வாழ்த்துக்கள்

  5. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Oct 2013
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    9,387
    Downloads
    0
    Uploads
    0
    ரெட்டை பதிவை நீக்க
    Last edited by Mano60; 12-12-2014 at 04:24 AM. Reason: ரெட்டை பதிவை நீக்க

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    முகத்தில் அறையும் வரிகள்..
    வலிக்கும் ஆனால் உண்மை.

    சும்மா கணடதுக்கும் பொங்குவதும் ஆரவாரிப்பதும், முக்கியமான விசயங்களில் பம்மிப்போவதும் - இதெல்லாம் சாதா-ரணமப்பா!

    சுதாவுக்கு பாராட்டுக்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •