ஓம்
ஞானாவின் சிறுவர் செந்தமிழ்ப் பாடல்
(ஆக்கம்: அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன்)

எந்தன் செல்ல நாய்க்குட்டி
(புலம்பெயர் மண்ணில்)

வாலைச் சுழற்றி வளையும் நாய்க்கு
வண்தமிழ்ப் பா பாடுவோம்
மாலை நேரம் மகிழ்ந்து கூடி
மழலை நாங்கள் ஆடுவோம்

எங்கள் வீட்டை என்றும் காக்கும்
எமது அன்பு நாய்க்குட்டி
தொங்கிப் பாய்ந்து தோலை நக்கி
தடவச் செய்யும் நாய்க்குட்டி

வெளியில் போக வாஞ்சை கொண்டு
வாலை வாலை ஆட்டுமாம்
வழிகள் எல்லாம் வடிவாய்ப் பார்த்து
வீடு வந்து சேருமாம்

தீயர் காணின் தொங்கிக் குரைத்து
துரத்தி ஓட வைக்குமே
நாயைப் பார்த்து நாமும் என்றும்
நன்றி செலுத்தி வாழ்வமே!