Results 1 to 2 of 2

Thread: இந்திர லோகம் இம்மையில் காண்பமே!

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    29 Jan 2014
    Location
    Living in 77 Forest Brook Drive, Markham, Ontario, Canada. L6B 0G2
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    693
    Downloads
    0
    Uploads
    0

    இந்திர லோகம் இம்மையில் காண்பமே!

    ஓம்
    இந்திர லோகம் இம்மையில் காண்பமே!
    (ஆக்கம் அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன்)

    மானிடப் பிறப்பு மகேசனைத் துதிக்கவே
    வானரம் போலநாம் வாழுதல் சரியோ?
    கானம் தொடுத்து கடவுளை அனுதினம்
    தேனாய்ப் பாடிடத் தேவன் அருள்வனே!

    ஆண்டு முழுவதும் அர்ச்சனை காவடி
    மாண்டு புரண்டு முறிவதும் ஏனையா?
    வேண்டுதல் செய்திட வேண்டாமே யாத்திரை
    ஆண்டவன் இருப்பிடம் அழகிய இதயமே!

    சிந்தனை நல்லதாய்ச் செய்திடு காரியம்
    வந்தனை யுடனே வாழ்ந்திடு வாழ்வினை
    முந்தை வினையும் முழுதும் ஒழிந்து
    இந்திர லோகம் இம்மையிற் காண்பயே!

    என்றும் இறைவனை ஏத்திடு மனதில்
    வன்முறை வஞ்சம் வாழ்வில் மறந்திடு
    அன்பும் அறமும் என்றும் காத்திட
    இன்பம் கண்டு இகவாழ் வினிக்குமே!

    கண்களை மூடு! கடிமனம் நிறுத்து!
    எண்ணமே இறையாய் எங்கோ அமர்ந்து
    உண்மையாய் உருகிடு! உந்தன் முன்னே
    வண்ணன் அழகுரு வடியாய்த் தோற்றுமே!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    ஒரே கவிதை மழையா..
    அதற்கு கவிதை பகுதியில் பதியலாமே!
    நன்றி மீண்டும்...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •