Results 1 to 4 of 4

Thread: உழவே தலை

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Oct 2010
    Location
    tamilnadu
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    14,663
    Downloads
    0
    Uploads
    0

    உழவே தலை

    அனேக பெண்களின்
    தாலிகளையும்
    அடகுக்கு அனுப்பிவிட்டு
    அற்புதமாய் சிரிக்கின்றன
    பயிர்கள்

    வாடையின்
    மெல்லிய எழுச்சியிலே
    வளைந்தாடும்
    அவற்றின் வனப்பு கண்டே
    அத்துனை உழவனுக்கும்
    மறந்துபோய்விட்டது
    பசி

    கரும் பச்சையின்
    கள்ள வசீகரத்திலே
    எல்லாமும்தான்
    மறந்துபோய் விட்டது

    எட்டா இடுபொருளும்
    விற்கா விளைபொருளும்
    எல்லாமும்தான்
    மறந்துபோய்விட்டது

    வளர்கின்றன பயிர்கள்
    உடல்கருக
    உதிரம் உரைய
    வியர்வை வழிய
    வளர்கின்றன பயிர்கள்

    கடைசியில்
    களம் சேர்ந்தது
    தாணியம்

    விதைக்கும் வட்டிக்கும்
    விளைச்சலில் கொஞ்சமும்
    அறுப்புக்குக் கூலியாய்
    அதுபோல கொஞ்சமும்
    உரம் பூச்சி மருந்துக்கு
    உள்ளதில் கொஞ்சமும்
    கொஞ்சமாய் கொஞ்சமாய்
    போனது கொஞ்சமும்

    எஞ்சிய தாணியந்தான்
    எம் பசி போக்குமோ
    எங்கூட்டுக்காரியின்
    தாலியை திருப்புமோ
    வரும்பருவ நடவுக்கு
    விதையுந்தான் வாய்க்குமோ

    ஒவ்வொரு உழவனின்
    வீட்டுக்குள்ளிருந்தும்
    ஊமையானதோர் குமுறல்
    வீதியோடு
    சங்கமிக்கிறது

    மழைவந்து மூட்டிய
    ஆசையை
    கடன்வந்து
    கருவறுக்க

    மிச்ச மீதியிருக்கும்
    பூச்சிக் கொல்லிக்கும்
    வேலையிருக்குது
    விளைச்சலை ஜீரனித்து
    நகரம் சிரிக்குது.]

  2. Likes arun karthik liked this post
  3. #2
    இளம் புயல் பண்பட்டவர் ஸ்ரீசரண்'s Avatar
    Join Date
    08 Nov 2010
    Location
    கொங்குத் தமிழ் கொஞ்சும் கோவை
    Posts
    127
    Post Thanks / Like
    iCash Credits
    24,369
    Downloads
    2
    Uploads
    0
    உழவனின் உள்ளக்கிடக்கையை
    உள்ளபடி உரைத்திட்ட
    உண்மைக்கவிதை.....................
    வாழ்த்துக்கள்.

  4. #3
    இளம் புயல் பண்பட்டவர் பாவூர் பாண்டி's Avatar
    Join Date
    17 Sep 2010
    Location
    Chennai
    Age
    36
    Posts
    145
    Post Thanks / Like
    iCash Credits
    18,187
    Downloads
    11
    Uploads
    0
    உழவனின்
    உள்ளக் கிடக்கையை
    உன்னதமாய்
    உணர்த்திய வரிகள் ....

  5. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Oct 2010
    Location
    tamilnadu
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    14,663
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி நண்பர்களே

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •