Results 1 to 8 of 8

Thread: ஹைக்கூ

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Oct 2010
    Location
    tamilnadu
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    14,663
    Downloads
    0
    Uploads
    0

    ஹைக்கூ

    குழந்தைகளற்ற தம்பதியனரின்
    துயர்மிகு செலவு
    நாப்கின்

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by inban View Post
    குழந்தைகளற்ற தம்பதியனரின்
    துயர்மிகு செலவு
    நாப்கின்
    குறுகிய வட்டத்துக்குள் அமைந்துவிட்ட சிந்தனை. இங்கு நாப்கின் என்று பெண்களுக்கானவற்றைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒன்றோ இரண்டோ குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் இந்நாட்களில் நாப்கினுக்கான செலவு மிச்சப்படுவது ஒன்றிரண்டு வருடங்கள் மட்டுமே. ஆனால் குழந்தைப்பேற்றுக்கான செலவை கவனத்தில் கொள்ளவேண்டாமா? குழந்தையை வளர்ப்பதற்கான செலவு என்னாவது? மேலும் இக்காலத்தில் குழந்தைகளுக்கான நாப்கினை (Nappies or Diapers) தங்கள் குழந்தைகளைக்கு அனைவரும் உபயோகிக்கிறார்கள். அதன் செலவு அவ்வளவு எளிதில் கட்டுப்படியாகக் கூடியதன்று. மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு நான்கு வயது வரை அல்லது கழிவறைப் பயிற்சி பெறும்வரை அந்தந்த வயதுக்கேற்ற நாப்கினை அணிவிப்பது குழந்தை வளர்ப்பின் ஒரு இன்றியமையாத கட்டமாகவே இருக்கிறது.

    இந்தக் கவிதையில் செலவு என்பதை முன்னிலைப்படுத்தாமல் ஒவ்வொரு மாதமும் நாப்கின் வாங்கும் செயலை முன்னிலைப்படுத்தியிருந்தால் குழந்தைகளற்ற தம்பதியரின் துயரம் வெளிப்பட்டிருக்கும். எண்ணுவதை எழுத்தில் வடிக்க இன்னும் கொஞ்சம் முயற்சி தேவை. தொடர்ந்து முயலுங்கள். வெற்றி கிட்டும்.

  3. Likes jayanth liked this post
  4. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    பிள்ளைப் பயனில்லை என்றால் எதற்கு இந்தத் தாம்பத்தியம் என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது....கடைசி வார்த்தை வீடு,கட்டில்,சமையல் என்று எதுவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்

  5. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Oct 2010
    Location
    tamilnadu
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    14,663
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ஜான்

  6. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Oct 2010
    Location
    tamilnadu
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    14,663
    Downloads
    0
    Uploads
    0
    கீதம் அவர்களே
    சிந்தனை சரியான வட்டத்திலேயே சுழல்வதாக நினைக்கிறேன்.
    நான் செலவை முன்னிலைப்படுத்தவில்லை. குழந்தைச் செல்வத்தின் முன்னால் கேவலம் செலவு ஒரு பொருட்டல்ல.
    மக்கட் செல்வம் என்பது ஒரு வகையில் யாவற்றையும் விட தலையாயது.
    ஒவ்வொரு மாதமும் எதிர்பார்ப்பு பொய்த்துப்போவதை நாப்கின் நெற்றிப் பொட்டில் அறைந்து உணர்த்துகிறது.
    படுபவனுக்குத் தெரியும் அதன் ரனம்.
    நன்றி.

  7. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by inban View Post
    கீதம் அவர்களே
    சிந்தனை சரியான வட்டத்திலேயே சுழல்வதாக நினைக்கிறேன்.
    நான் செலவை முன்னிலைப்படுத்தவில்லை. குழந்தைச் செல்வத்தின் முன்னால் கேவலம் செலவு ஒரு பொருட்டல்ல.
    மக்கட் செல்வம் என்பது ஒரு வகையில் யாவற்றையும் விட தலையாயது.
    ஒவ்வொரு மாதமும் எதிர்பார்ப்பு பொய்த்துப்போவதை நாப்கின் நெற்றிப் பொட்டில் அறைந்து உணர்த்துகிறது.
    படுபவனுக்குத் தெரியும் அதன் ரனம்.
    நன்றி.
    என் கருத்தில் ஏதும் பிழையிருப்பதாக நான் நினைக்கவில்லை. என் பின்னூட்டத்தின் கடைசி இரு வரிகளைப் படித்தாலே உங்களுக்கு அது விளங்கியிருக்கும்.
    உங்களை மனவேதனைப்படுத்துவது என் நோக்கமன்று.

    கவிஞனின் எண்ணத்தை சரியாக வெளிப்படுத்தாதது மட்டுமின்றி வாசகனின் சிந்தனையை வேறுபக்கம் திசைதிருப்புவதாகவும் அமைந்துள்ளதுதான் இக்கவிதையின் பலவீனம்.
    தான் அனுபவித்த உணர்வை அது வலியோ பரவசமோ, நெகிழ்வோ, மகிழ்வோ, கற்பனையோ, அனுபவமோ எதுவானாலும் அதே உணர்வை வாசகர்க்குக் கொண்டுசேர்க்கும் விதத்தில்தான் ஒரு கவிதையின் வெற்றி அடங்கியிருப்பதாக நான் எண்ணுகிறேன். அதை விடுத்து வாசகர்கள் தாங்களே அனுபவித்து உணர்ந்தால் ஒழிய என் கவிதைக்குள்ளிருக்கும் உணர்வு புரியாது என்று கூறுவது விந்தையாக உள்ளது.

    மேலும் தங்கள் கவிதையின் கருப்பொருளை நான் குறை சொல்லவில்லை. குறை சொல்லவும் இயலாது. அதை எழுத்தில் வடிக்கும்போது பிசிறிய இடத்தை மட்டுமே சுட்டினேன்.
    இது போன்ற விமர்சனங்கள் உங்கள் கவித்திறனுக்கு மெருகேற்றும் என்று நம்பினால் ஏற்றுக்கொள்ளுங்கள். என் புரிதலில்தான் கோளாறு என்று எண்ணுவீர்களாயின் என்னால் புரிந்துகொள்ள இயலாத கவிதைகளுக்குப் பின்னூட்டமிடுவதை இனி தவிர்க்க முனைகிறேன். நன்றி.

  8. Likes jayanth liked this post
  9. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Oct 2010
    Location
    tamilnadu
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    14,663
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி கீதம் அவர்களே
    நீங்கள் விமர்சிப்பதற்க்கு முழு உரிமை உண்டு
    கவிதையின் வடிவம் குறித்து நீங்கள் சுட்டிக்காட்டியதை நிச்சயம் பரிசீலிப்பேன்.

    நின்றி.

    சிந்தனையின் விளைபயன்தானே கருப்பொருள்?
    சிந்தனை குறுகிய வட்டத்தில் அமைந்து விட்டால் கருப்பொருள் மட்டும் எப்படி சரியான தளத்தில் அமையும்!?

  10. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by inban View Post
    நன்றி கீதம் அவர்களே
    நீங்கள் விமர்சிப்பதற்க்கு முழு உரிமை உண்டு
    கவிதையின் வடிவம் குறித்து நீங்கள் சுட்டிக்காட்டியதை நிச்சயம் பரிசீலிப்பேன்.

    நின்றி.

    சிந்தனையின் விளைபயன்தானே கருப்பொருள்?
    சிந்தனை குறுகிய வட்டத்தில் அமைந்து விட்டால் கருப்பொருள் மட்டும் எப்படி சரியான தளத்தில் அமையும்!?
    உங்கள் கேள்விக்கான பதிலைத் தருமுன் உதாரண வரிகளிரண்டைத் தருகிறேன்.

    நாமும் அன்னை தெரசாவைப் போல ஆதரவற்றோரை வெறுத்து ஒதுக்காமல் அன்புடன் ஆதரிக்கவேண்டும்.

    மேற்கண்ட வரியில் ஒரு காற்புள்ளியின் விடுப்பு கருத்தையே மாற்றிவிடும் அபாயம் இருக்கிறது.
    குழப்பத்துக்கு இடங்கொடாமல் தெளிவாக எழுத விரும்பினால் கீழே உள்ளவாறு எழுதலாம்.

    ஆதவற்றோரை வெறுத்து ஒதுக்காமல், அன்னை தெரசாவைப் போல நாமும் அன்புடன் ஆதரிக்கவேண்டும்.

    முதல்வரியை வாசிக்கும்போது அன்னை தெரசா ஆதரவற்றோரை வெறுப்பவர் என்பது போலவும் அவரைப் போல நாம் செய்யக்கூடாது என்பது போலவுமான தொணி இருக்கிறது. அதுவே இரண்டாவது வாக்கியத்தில் வார்த்தைகள் சரியாக கோர்க்கப்பட்ட நிலையில் சொல்லவேண்டியதை சரியாக சொல்லிப்போகிறது. முதல்வரியை எழுதியிருப்பவனின் எண்ணம் நமக்குத் தெரியாவிடில் புரிதலுக்குரிய வாய்ப்பு குறைந்துவிடுகிறது.

    உங்கள் கவிதையில் செலவை முன்னிலைப் படுத்துவது போன்ற தொணி தென்பட்டதாலேயே என் கருத்தை முன்வைக்க வேண்டியிருந்தது. சிந்தனை சரியாக இருந்தாலும் செயல்வடிவத்தில் குறைநேரும்போது சிந்தனைக்களம் சரியில்லையோ என்ற சிறு சந்தேகம் எழுவது இயல்புதானே...

    தங்கள் புரிதலுக்கு நன்றி.

  11. Likes jayanth liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •