Results 1 to 7 of 7

Thread: பாரதி.....யார்..?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    பாரதி.....யார்..?

    ஒரு வேலைத்தளத்தில் நான் Consultant ஆக பணிபுரிந்து கொண்டிருக்கின்றேன், அதே வேளை Contractor பக்கத்திலிருந்து நமக்குத் தேவையான விடயங்களைக் கவனிக்கவென ஒரு புதிய பையனை நியமித்திருந்தார்கள். ஒரு நாள் அவர் தமிழில் யாருடனேயே ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு நான் கேட்டேன்

    நான்: தம்பி நீ தமிழா...??

    அவர்: ஆமாங்க....!

    நான்: சொந்த இடம் எதுப்பா...??

    அவர்: தூத்துக்குடியில் எட்டயபுரமுங்க.

    நான்: அட நம்ம பாரதியார் பிறந்த இடம்...!!

    அவர்: உங்க பாரதியாரா...??, ஆமா அவரை எப்படி உங்களுக்குத் தெரியும்...???

    அதிர்ந்து போன நான், அவர் வேற ஒரு பாரதியாரைச் சொல்லுகிறார் என நினைத்து....

    நான்: நீங்க எந்த பாரதியாரைச் சொல்லுறீங்க, நான் மாகாகவி பாரதியாரைக் கேட்டன்...

    அவர்: அவரைத்தான் நானும் சொல்லுகிறேன், அவரை எப்படிங்க உங்களுக்குத் தெரியும்...??

    நல்ல காலம் பாரதியார் உயிருடன் இல்லையே என நினைத்துக் கொண்டு.....

    நான்: அவர் எழுதிய ஆக்கங்களால் எல்லா தமிழரிடமும் வாழ்பவராச்சே அப்பா....

    அவர்: ஓ அப்படியா, அவர் படித்த பள்ளியில் தான் நானும் படிச்சேன், அவரோட பிறந்த நாள்னா ஜாலியா லீவு விட்டுருவாங்க...!!

    நான்:

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    அவரு பாரதியாரா? அப்படின்னு கேட்டிருந்தாதானே நீங்க அழணும்.

    உங்களுக்குத் தெரியாதுன்னு அவர் நினைக்க
    அவருக்குத் தெரியாதுன்னு நீங்க நினைக்க

    நீங்க்கதான் சரியாகப் புரிஞ்சிக்கலைன்னு நினைக்கிறேன். நம்ம பாரதியார்னு நீங்க சொன்னதும் பாரதியாருக்கும் உங்களுக்கும் தனிப்பட்ட உறவு இருக்கும்னு நினைச்சுட்டார் போல...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. Likes sarcharan liked this post
  4. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அண்ணா, நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் பிரச்சினை கிடையாது....


    ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில், இது போல நினைத்தால் நம்மிடையே நடக்கும் தவறை அங்கீகரித்தது போலாகிடுமே....!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    நீ எதற்காக கண்ணீர் வடித்தாய் ஓவியனே?
    ஓ.. அந்த பள்ளியில் படிக்கின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றா?

  6. #5
    இளம் புயல் பண்பட்டவர் பாவூர் பாண்டி's Avatar
    Join Date
    17 Sep 2010
    Location
    Chennai
    Age
    36
    Posts
    145
    Post Thanks / Like
    iCash Credits
    18,187
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post

    அவர்: ஓ அப்படியா, அவர் படித்த பள்ளியில் தான் நானும் படிச்சேன், அவரோட பிறந்த நாள்னா ஜாலியா லீவு விட்டுருவாங்க...!!

    நான்:
    இச்சிறுவனுக்கு பாரதி பிறந்த நாளுக்கு விடுப்பு விடுவதை தவிர்த்து அவரைப்பற்றியும் தமிழைப்பற்றியும் ஏதும் கற்றுக்கொடுக்கவில்லை அந்த பள்ளி.
    பாரதி பயின்ற பள்ளிக்கே இந்த நிலமைஎன்றால் மற்ற பள்ளிகளுக்கு.

  7. #6
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    நல்ல வேளை!
    பாரதியா....யார் அவர் என்று கேட்க்கவில்லை
    அவர் படித்த பள்ளியில்தான் படித்ததேன் என்று சொல்லமுடிந்ததே அவரால்!

    அழும் ஓவியர் அவருக்கு உணர்வை ஊட்டியிருக்கலாம்!
    என்றென்றும் நட்புடன்!

  8. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 May 2010
    Posts
    119
    Post Thanks / Like
    iCash Credits
    12,073
    Downloads
    0
    Uploads
    0
    படிக்கும் போது சிரிப்புதான் வந்தது.
    பாரதியை அவருக்கு தெரியாமல் போயிற்றா...
    அல்லது அவர் உங்களின் உறவுக்காரர் என்று நினைத்துவிட்டாரா...?
    அன்பரே...
    பாரதியை பற்றி தெரியாமல் போன அவரது துரதிஷ்டம்

  9. Likes ஓவியன் liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •