ஒரு வேலைத்தளத்தில் நான் Consultant ஆக பணிபுரிந்து கொண்டிருக்கின்றேன், அதே வேளை Contractor பக்கத்திலிருந்து நமக்குத் தேவையான விடயங்களைக் கவனிக்கவென ஒரு புதிய பையனை நியமித்திருந்தார்கள். ஒரு நாள் அவர் தமிழில் யாருடனேயே ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு நான் கேட்டேன்
நான்: தம்பி நீ தமிழா...??
அவர்: ஆமாங்க....!
நான்: சொந்த இடம் எதுப்பா...??
அவர்: தூத்துக்குடியில் எட்டயபுரமுங்க.
நான்: அட நம்ம பாரதியார் பிறந்த இடம்...!!
அவர்: உங்க பாரதியாரா...??, ஆமா அவரை எப்படி உங்களுக்குத் தெரியும்...???
அதிர்ந்து போன நான், அவர் வேற ஒரு பாரதியாரைச் சொல்லுகிறார் என நினைத்து....
நான்: நீங்க எந்த பாரதியாரைச் சொல்லுறீங்க, நான் மாகாகவி பாரதியாரைக் கேட்டன்...
அவர்: அவரைத்தான் நானும் சொல்லுகிறேன், அவரை எப்படிங்க உங்களுக்குத் தெரியும்...??
நல்ல காலம் பாரதியார் உயிருடன் இல்லையே என நினைத்துக் கொண்டு.....
நான்: அவர் எழுதிய ஆக்கங்களால் எல்லா தமிழரிடமும் வாழ்பவராச்சே அப்பா....
அவர்: ஓ அப்படியா, அவர் படித்த பள்ளியில் தான் நானும் படிச்சேன், அவரோட பிறந்த நாள்னா ஜாலியா லீவு விட்டுருவாங்க...!!
நான்:![]()
Bookmarks