Results 1 to 5 of 5

Thread: எங்கள் பெரியகுளத்துச் செல்வி..

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் பாவூர் பாண்டி's Avatar
    Join Date
    17 Sep 2010
    Location
    Chennai
    Age
    36
    Posts
    145
    Post Thanks / Like
    iCash Credits
    18,187
    Downloads
    11
    Uploads
    0

    எங்கள் பெரியகுளத்துச் செல்வி..

    குற்றால மலையூற்றின்
    அடிவாரத்தில்
    அமையா விடிலும்
    இத்திரு நன்னீரை
    தன்னுடல் போர்த்திக்கொள்ளும்
    பரந்த மேனியுடையாள் !

    தன் சுற்றும்
    பசுமையுடல் பரப்பி
    பாட்டளிகளின் பசிதீர்க்கும்
    அன்னப் பயிர்க்கெல்லாம்
    நன்னீர்
    கொடையளிப் பவளாம் !

    தன்னுடல் சூடு தணியாப்
    பொழுதும்
    ஊரார் உடல் குளிர்வித்து
    உள மகிழ்பவளாம் !
    ..போதாதென
    பசிபோக்க மீனையும்
    பிரசவிப்பவளாம் !

    வட்டக் கிணறு
    வெட்டுக் கிணறு
    சாஸ்த்தா கோவில்
    கரம்பக் கிடங்கு
    கண்மாய் யென
    பன் முகங்களும்
    உளனவே இவளுக்கு !

    சிவந்த
    மாலை வேளையில்
    கரைதனில் இளங்காதலர்கள்
    புரியும் காவியத்தை
    பூங்காற்றுடன் இரண்டற கலந்து
    வீசச் செய்பவளாம் !

    மனித வாழ்வின்
    மகத்தான வரம்
    மரணம் !
    ஊரார் விட்டுப் பிரியுமுன்
    ஓர் உயிரையெனும்
    தனதாக்கிக் கொள்பவளும்
    இவள்தானே !

    நன்னீர் உடை களைந்தாலும்
    ஊற்றில்
    உதிரம் உதிர்த்து உயிர்
    காப்பதிலும்
    இவளன்றி வேறொருவர்
    உளரோ !!

    கரையோரம் கடைவிரித்து
    வஞ்சகம் விளையாதிருங்கள்
    மலட்டு நீரை
    மண்ட விட்டு மண்ணை
    மலடாக்காதீர்கள்...
    பஞ்சம் பரவாமலிருக்கும்..

    நம் மகள் யிவள் !
    நம் அன்னை யிவள் !
    நம் பாட்டி யிவள் !
    நம் மூதாட்டி யிவள் !

    நம் கீழ்ப்பாவூருக்கு
    கொடை வழங்கும்
    நூற்றாண்டு கல்லணை கொண்ட
    பெரிய குளத்துச் செல்வி யிவளுக்கு
    நிகர் வேறொன்றும்
    இலவே !!

    --ஜெ.பா

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பெரியகுளத்துச் செல்வி மனம் நிறைத்துப்போகிறாள். பசி தீர்க்க மீனைப் பிரசவிப்பவள் -கவிநயம் அழகு. இயற்கை அளிக்கும் கொடையை மனிதர்கள் மாசுபடுத்தி வீணாக்குவதை கவிதையில் சுட்டியிருப்பது சிறப்பு. பாராட்டுகள் பாவூர் பாண்டி.

    (பாட்டாளி, மகள் இவள் - திருத்த வேண்டுகிறேன். கவிதையின் இறுதியில் ஜெ.பா என்றிருக்கிறதே... கவிதையை எழுதியவர் தாங்கள்தானே?)

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் பாவூர் பாண்டி's Avatar
    Join Date
    17 Sep 2010
    Location
    Chennai
    Age
    36
    Posts
    145
    Post Thanks / Like
    iCash Credits
    18,187
    Downloads
    11
    Uploads
    0
    நானே எழுதியது தான், ஜெ.பா என்பது நானே..
    பாராட்டுக்கு நன்றி கீதம் அவர்களே.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    பெரியகுளத்து செல்வி பெரிய இடத்து செல்வி ..
    வசிகரன்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் பாவூர் பாண்டி's Avatar
    Join Date
    17 Sep 2010
    Location
    Chennai
    Age
    36
    Posts
    145
    Post Thanks / Like
    iCash Credits
    18,187
    Downloads
    11
    Uploads
    0
    நன்றி அன்பரே

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •