Results 1 to 4 of 4

Thread: நாய்க்குட்டி சொன்ன நீதி

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    16 Dec 2013
    Location
    மதுரை
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    1,147
    Downloads
    6
    Uploads
    0

    Post நாய்க்குட்டி சொன்ன நீதி

    நாய்க்குட்டி சொன்ன நீதி


    ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.

    இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

    என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.

    அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து

    துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.

    இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை இல்லாதொலித்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி

    எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை,சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.

    உண்மைதான்! என்றது நாய்க் குட்டி Posted Image
    பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.

    ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.

    இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?

    குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக்

    கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.

    ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை

    வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி

    அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.

    திருடுதல்,ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

    நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே

    முன்னிற்கும்.
    Last edited by கீதம்; 18-12-2013 at 11:01 AM.

  2. Likes sarcharan liked this post
  3. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    பாட்டிசுட்ட வடையைக் காக்கா எடுத்துச் சென்றது கதை! அந்தக் கதையை வைத்துக் காக்கைக்குத் திருட்டுப் பட்டம் சூட்டக் கூடாது. அப்படிப் பார்த்தால் நாய்கள் கூடத்தான் திருடுகின்றன. திறந்த வீட்டில் நாய்கள் நுழைந்து உணவுப் பொருளைத் தூக்கிச் செல்கின்றன. எனவே காக்கைக்குப் புத்திமதி சொல்ல நாய்க்குட்டிக்கு யோக்கியதை கிடையாது.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. Likes sarcharan liked this post
  5. #3
    Loganathan Natarajan
    விருந்தினர்
    அருமை

  6. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஜெகதீசன் அவர்களின் கருத்தே என் கருத்தும்..!!

    இருந்தாலும் கதை சொல்லும் நீதி அருமை - வாழ்த்துகள்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •