Results 1 to 1 of 1

Thread: வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா.?

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    16 Dec 2013
    Location
    மதுரை
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    1,147
    Downloads
    6
    Uploads
    0

    Lightbulb வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா.?

    வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா.?
    அப்ப இதை முதலில் படிங்க..!

    சிங்கப்பூரில் சித்தாள் வேலைக்கு ஆட்கள் தேவை.. சவுதியில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..’ கண்ணைப் பறிக்கும் கலரில் ஒட்டப்படும் இந்த போஸ்டர்களை நம்பி இன்னமும் பலபேர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாம் இஷ்டத்துக்கு போஸ்டர் ஒட்டி, வெளிநாட்டுக்கு ஆள்பிடிப்பது சட்டப்படி குற்றம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

    வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் எடுப்பவர்கள் குடிபெயர்வோர் பாதுகாவலரிடம் (Protector Of Emigrants) லைசென்ஸ் பெறவேண்டும். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா இந்த நான்கு மாநிலங்களுக்குமான குடிபெயர்வோர் பாதுகாவலர் (பி.ஓ.இ) அலுவலகம் சென்னையில் இருக்கிறது. வெளிநாடுவாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்த அலுவலகத்தில் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி பி.ஓ.இ-யாக இருக்கிறார்.

    வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை எடுக்கும் நிறுவனங்கள் 45 லட்ச ரூபாய்க்கு சொத்து மதிப்பும் 20 லட்ச ரூபாய்க்கு வங்கி உத்தரவாதமும் கொடுக்க வேண்டும். குறைந்தது 500 சதுர அடியில் சகல வசதிகளுடன் அலுவலகம் இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால்தான் லைசென்ஸ் கிடைக்கும். இந்த லைசென்ஸ் ஐந்தாண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதற்குள்ளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பலாம்.

    ஆள்பிடிப்பது குற்றம்

    லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து ஆட்களை இன்டர்வியூவுக்கு அழைக்கலாம். துண்டுப்பிரசுரங்கள் கொடுத்தோ, லோக்கல் சேனல்களில் விளம்பரம் செய்தோ, சுவரொட்டிகளை ஒட்டியோ ஆள்பிடிப்பது சட்டப்படி குற்றம். லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் தவிர மற்றவர்கள் தனிநபர்களின் பாஸ்போர்ட்களை வாங்கி வைத்திருப்பதே கைதுக்குரிய குற்றம் என்கிறது சட்டம்.

    வேலைக்கு ஆட்களை எடுக்கும் வெளிநாட்டுக் கம்பெனியானது பணியாளருக்கான குறைந்தபட்ச ஊதியம், விசா, தங்குமிடம், உணவு, மருத்துவம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவைகளை இலவசமாக அளிப்பதுடன், பணியாளர் இறக்க நேரிட்டால் பிரேதத்தை தங்கள் செலவிலேயே இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதாகவும் உத்தரவாதம் தரவேண்டும்.

    வங்கி உத்தரவாதம்

    எதிர்பாராதவிதமாக வெளிநாட்டில் இந்திய பணியாளருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை வெளிநாட்டுக் கம்பெனியிடமிருந்து வாங்கிக்கொடுக்கும் பொறுப்பு இங்கிருந்து ஆட்களை எடுத்து அனுப்பும் நிறுவனத்துடையது. இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அந்த நிறுவனத்தின் வங்கி உத்தரவாதத்தை வைத்து அரசே சம்பந்தப்பட்ட பணியாளருக்கு இழப்பீட்டை வழங்கிவிடும்.

    போலிகளை தண்டிக்க முடியும்

    “நிறுவனங்கள் மூலமாக இல்லாமல், சுயமுயற்சியில் வெளிநாட்டு வேலைகளுக்கு போகும் நபர்களுக்கு தினமும் நாங்களே இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கிறோம்’’ என்கிறார்கள் பி.ஓ.இ. அலுவலக அதிகாரிகள். “அதெல்லாம் சரி.. ஊர் ஊருக்கு பெட்டிக் கடைபோட்டு வெளிநாட்டு வேலைக்கு ஆள் எடுப்பதாகச் சொல்லும் மோசடிக் கம்பெனிகளை தடுக்க முடியாதா?’’ என்று கேட்டால், “தமிழகத்தில் முறைப்படி லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் 104 மட்டுமே. மற்ற வைகள் எல்லாமே போலிகள்தான். போலிகள் மீது
    நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், எங்களிடம் அதற்கான மேன் பவர் இல்லை; போலீஸைத்தான் நம்ப வேண்டி இருக்கிறது. இதற்கு ஒரேவழி மக்கள் விழிப்புடன் இருப்பதுதான்’’ என்கிறார்கள்.
    Last edited by கீதம்; 18-12-2013 at 11:00 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •