Results 1 to 7 of 7

Thread: உழைப்பின் அருமை...

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    07 Dec 2013
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    640
    Downloads
    0
    Uploads
    0

    உழைப்பின் அருமை...

    திருமண வயதாகியும் ஒரு இளைஞன் எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பிக் கிடந்தான்.வெறுத்துப்போன அவன் தந்தை கோபமாக ஒரு நாள்,''இன்றிலிருந்து தினசரி நூறு ரூபாய் கொண்டு வந்தால்தான் உனக்கு சாப்பாடு,''என்றார்.இளைஞன் நொந்து போய்விட்டான்.என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.தாயிடம் புலம்பினான். தாயும் இரக்கப்பட்டு, ''நீ வெளியில் போய்வா.நான் உன்னிடம் நூறு ரூபாய் தருகிறேன்.நீ அதை அப்பாவிடம் கொடுத்துவிடு'' என்று சொல்ல அவனும் சம்மதித்தான்.அன்று நூறு ரூபாயை அப்பாவிடம் கொடுத்தபோது அவர் அதை வாங்கி,''நீயும் உன் ரூபாயும்,''என்று கூறி தூக்கி எறிந்து விட்டு வெளியே சென்று விட்டார்.இளைஞன் அமைதியாக இருந்தான்.சில நாட்கள் இப்படியே போயிற்று.ஒரு நிலையில் தாயிடம் கொடுக்கப் பணமில்லை.சில நாட்கள் கடன் வாங்கிக் கொடுத்தாள் .ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் தந்தை ,''நீயும் உன் ரூபாயும்,''என்று கூறி விட்டெறிந்து கொண்டிருந்தார்.இப்போது தாய்க்கு கடன் யாரும் கொடுக்கத் தயாராயில்லை.மேலும் கொடுத்த பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர்.தாய் வேறு வழியில்லாது,''மகனே,இனி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை.இனி நீ போய் ஏதாவது வேலை செய்து பணம் கொண்டு வருவதைத்தவிர வேறு வழியில்லை.உன் தந்தையும் இவ்விசயத்தில் பிடிவாதமாக இருக்கிறார்.நான் என்ன செய்ய முடியும்?என்று கூறி கை விரித்து விட்டார்.இளைஞன் வேறு வழியின்றி வெளியே சென்று மூட்டை தூக்குவதிலிருந்து எந்த வேலையானாலும் செய்து அன்று நூறு ரூபாய் சம்பாதித்து விட்டான்.அன்று பெருமையாகத் தந்தையிடம் ரூபாயைக் கொடுத்தான்.அன்றும் வழக்கம் போலத் தந்தை,''நீயும் உன் ரூபாயும்,''என்று கூறித் தூக்கி எறிந்தார்.இளைஞனுக்கு வந்ததே கோபம்!''அவனவன் மூட்டை தூக்கி கல் சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் இப்படித் தூக்கி எறிகிறீர்களே,என்ன நியாயம்?''என்று கேட்டான்.தந்தை சிரித்துக் கொண்டே கீழ குனிந்து எறிந்த பணத்தை எடுத்து,அதை முத்தமிட்டு தனது பைக்குள் வைத்துக்கொண்டு,''இது என் மகன் உழைப்பில் வந்த பணம்,இனி அவனைப்பற்றி எனக்குக் கவலை இல்லை''என்று கூறி மகிழ்ச்சியுடன் வெளியே சென்றார்.

  2. #2
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    சிரிக்க சிரிக்க சொல்லுவார் சிலர் உன்னைப்பற்றி அது சிரிக்கத்தான் வைக்கும் உண்னைப்பார்த்துப்பலர்
    நீ அழ அழ சொல்லுவார் சிலர் உன்னைப்பற்றி அது உண்னை சிறக்கத்தான் வைக்கும் வாழ!
    என சொல்லும் என் பாட்டியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.

    தந்தைக்கு தன் மகனைத்திருத்தும் வழியும்
    மகனுக்கு தன் தன் உழைப்பின் வழி (வலி) யையும்
    புரிய வைக்கும் நீதி நன்று!

    பாராட்டுகள்!
    என்றென்றும் நட்புடன்!

  3. Likes perumald liked this post
  4. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உழைப்பின் மகத்துவம் உணர்த்தும் நீதிக் கதை!

    அருமையான கதைக்கு, கும்பகோணப் பிள்ளையின் அழகு பின்னூட்டம் இன்னமும் மெருகு!

    வாழ்த்துகள்..!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் நல்ல நீதிக்கதை... நன்று.

  6. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    குறும்புத்தனமான சிந்தனை. கோவித்துக்கொள்ளாதீர்கள். பையன் அறிவில் கொஞ்சம் வீக்கு,

    அப்பா முதல் நாள் பணத்தை தூக்கி எறிந்த பின், அப்பா அந்த பக்கம் போனபின்னால் எடுத்து வச்சிருக்கலாம். பாவம் அம்மாவைப் போட்டு கஷ்டப்படுத்திட்டான்.

    கதையின் கருத்தை வலுவாக்க அப்பா கிழித்துப் போட்டதாகச் சொல்லி இருக்கலாம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பணத்தைக் கிழித்துப் போடுவது சட்டத்துக்கு விரோதமான செயலாச்சே..!!??

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    அது எல்லா நாடுகளிலும் உள்ள சட்டமல்ல. ஏமாற்றும் நோக்குடன் என்று ஒரு வார்த்தை சட்டத்தில் இருக்கு
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. Likes ஓவியன் liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •