எங்கள் ஏரி அது எங்கள் ஊர் ஏரி
அய்யனாரு அவர்தான் எங்கள் சாமி;
அவரே எங்கள் ஏரிச்சாமி;
நான் கூப்பிடுவேன்
தினமும் அய்யாச்சாமி..

நான் உண்ண பயிறு விளையும்;
நான் படுக்க காற்றுக் கொடுக்கும்;
எங்கள் விலங்குகளுக்கு மெத்தையாகும்..
அதுதான் என்றும் என் ஊரின் சொத்தாகும்..

வறட்சியிலும் வசந்தகாலம்;
வறுமையிலும் குளிர்க்காலம்;
செத்தாலும் படுகளம்;
பிறந்தாலும் மாறும் காலம்...

நான் நீச்சல் பழக ஏற்ற இடம்;
பிறர் மீன் பிடிக்க வந்த இடம்;
துன்பம் கலைய செல்லும் இடம்;
இன்பம் கொடுக்கும் பிறப்பிடம்...

நீர் வற்றினாலும் மண் கொடுக்கும்
ஊர் விட்டு ஊர் பெண் எடுப்போம்
ஊர்க்கும் ஒன்று என்றால் ஒன்று
சேர்வோம்;

ஏரியினை காப்போம்;
மண் வளம் பெருக்குவோம்;
மரம் வளர்ப்போம்;
மண் அரிப்பை தடுப்போம்..
எங்கள் ஏரி என்றும்
உதவும் பல வாழ,.......