கான்சர் நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகச்சிறந்த பழவகைகள்ஒன்றுதான் சோர்சாப் எனப்படும் பிரிக்லி கஸ்டர்டு ஆப்பிள்.

சீத்தா பழத்தின் மீது பலாப்பழத்திற்கு மேல் உள்ள முள் தோலைப்போன்ற தோற்றம் கொண்டது இப்பழம்.
உலகில் சுமார் 120 வகைகளில் இப்பழம் காணப்பட்டாலும்,

இந்தியாவில் 4 ரகங்கள் மட்டும்தான் உள்ளன. இந்த நான்கும் நீலகிரியில் மட்டுமே உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட இப்பழம், மித தட்ப வெப்பநிலை பகுதிகளில் வளரக்கூடியது. இதன் எடை 3 முதல் 5 கிலோ வரை இருக்குமென்பதால்

தண்டுப்பகுதியில்தான் இப்பழங்கள் வளரும். அதனால் இதை பலாப்பழம் எனக் கருதுவோரும் உண்டு.
""சோர்சாப் எனப்படும் பழ வகை புற்றுநோய்க்கு சிறந்த நிவாரணி
. சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்கு இதன் இலை மற்றும் பூவும்,

தொடர் இருமலையும், கண் புரையையும் கட்டுப்படுத்த இதன் மொட்டுக்களும்,

இதன் இலையிலிருந்து காய்ச்சி வடிகட்டி எடுக்கப்படும் கசாயம் நரம்பு தளர்ச்சியைப் போக்கவும், நாட்பட்ட காயங்களுக்கு மருந்தாகவும், அடிபட்ட காயத்திலிருந்து வெளியேறும் அதிக அளவிலான ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் சாறைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை குறைதல், தலைமுடி உதிர்தல், தொடர் வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவர். ஆனால்,

சோர்சாப்பைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, புற்று நோய்க்கான செல்களின் வளர்ச்சியும் தடுக்கப்படுகிறது. இதனால் உடனடியாக நோய் குணமடையாவிட்டாலும், மேலும் பரவாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், சிறுநீர் வழித்தட புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய் உள்ளிட்ட 12 வகையான புற்று நோய்களுக்குத் தீர்வாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் நாளுக்குநாள் இதன் தேவையும் அதிகரித்து வருகிறது''

courtesy;''sunday kondaattam/dinamani