Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: ராஜாவின் ரோஜாக்கள்

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0

    ராஜாவின் ரோஜாக்கள்

    மனம் - கனம்

    கோடி வார்த்தைகள்
    மனதில் ஓட
    வாயால் வெளியிட
    வார்த்தை கிட்டாதாவென்று
    சிந்தை தேட
    கந்தல் ஆடை தவிர
    வேறோன்றும்மில்லா உடல்
    ஆயினும் கனக்கிறது மனம்
    ஆயிரம் யானைகளின் கனம்
    Last edited by rajapandian21; 02-12-2013 at 04:52 PM.

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  2. #2
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0
    பெண் மயில்

    பெண் மயிலுக்கும்
    தோகை உண்டென்று
    அறிந்தேன் - பெண்ணனே
    நீ என் முன்
    தை முடியை
    பின்னாமல் விரித்து
    சென்ற பொழுது

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  3. #3
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0
    கூந்தல்

    என் இதய கடிகாரத்தை
    உடைத்து என் முன்
    செல்பவளே
    கடிகாரம் உடைந்ததால்
    யாவுமே நின்றன எனக்கு
    இன்னும் ஏன் நிற்காமல்
    ஊசல் ஆடுகிறது
    உன் பின்னிய கூந்தல்
    பெண்டுலங்கள் மட்டும்

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கலாபம் விரித்தாடும் அழகே! உந்தன்
    ...கந்தனிடம் கேட்டெனக்குச் சொல்வாய் மயிலே!
    பலாவின் சுளையினும் சுவைமிக்க அதரத்தால்
    ...பக்கலிலே வந்தமர்ந்து முத்தமிடும் பாவையவள்
    உலாவிடும் கூந்தலினும் உன்னுடைய தோகைக்கு
    ...உயர்வேதும் உண்டோ? உண்மை உரைத்திடுவாய்
    முலாமிடும் பித்தளை தங்கம்போல் ஆகாது
    ...முடிநீண்ட பெண்களுக்கு உன்தோகை ஈடாமோ?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #5
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0
    புதிய வரவுக்காக

    தலைகீழாய் இருட்டறையில்
    கடுந்தவமிருந்ததால்,
    தொலைந்து விடாதிருக்க
    வடத்துடன் வெளியுலகிற்கு
    வருகை தந்திட்ட
    சிறு உயிரே
    வடம் அறுந்துவிடும்; ஆனால்
    உறவராது; வளர்ந்து
    வாழ்ந்து வளர்த்திட
    வாழ்த்துக்கள்

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  6. #6
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0
    மனம்-மணம்

    சல்லடை போட்டு பொருக்கி
    எடுத்து ஒருவரை மணந்து,
    நேசிக்கச் சொல்லும் உலகம்
    ஒருவரை நேசித்து மணக்க
    அனுமதி மறுப்பது ஏன்?

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  7. #7
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0
    ஹைக்கு

    கட்டித் தயிரில்
    முளைத்த
    குட்டிப் பயிர்
    அவளின் பரு

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  8. #8
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0
    அழகு

    மல்லிப் பற்கள் தெரிய
    ரோஜா இதழ்கள் நடுவே
    ஏறுக்கம்பூ பாசி கடித்து
    என் தவத்தை உடைக்கிறாய்
    சூரியகாந்தி முகத்தின் நடுவே
    அங்கும் இங்கும் அலையும்
    இருபெரு கருவண்டு கண்களால்
    விடாது கொட்டி
    காதல் விசமேற்றுகிறாயே

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  9. #9
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0
    பண்டிகை

    வாழ்த்துக்கள் சொல்ல
    மறவா நாம்
    கொண்டாடும் விதம்
    காரணம் மட்டும்
    மறந்தது ஏன்?

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    ராஜபாண்டியனின் கம்பீரமான கவிதைகள்...


    சில எழுத்துப் பிழைகள் தவிர...

    மன்னிக்கவும்...

    சுட்டிக்காட்டியதற்கு...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. #11
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0
    நானும் ஓர் காகிதப் பூ

    மரக்கூலில் இதழ்கள் செய்து
    இளைச்சாறில் வண்ணம் செய்து
    பூச்சாறில் வாசம் செய்து
    பழச்சாரின் சுவையைச் சேர்த்து
    பூ வொன்று செய்தேனம்மா
    செய்ததந்த பூவையும் எந்தன்
    சிகையினிலே வைத்தேனம்மா
    பூவினது வாசம் கண்டோர்
    மூச்சயர்ந்து விழுந்தனரே
    பூவினது வண்ணம் கண்டோர்
    கண்ணிமையாது நின்றனரே
    பூவினது சுவையை கண்டோர்
    வாயடைத்துப் போனரே
    பூவைக் கண்ட யாவருமே
    புகழ் பாடி நின்றனரே
    யான் செய்த பூவைக்காண
    பூச்சியினங்கள் வரவில்லையே
    ஆண்டு பல கடந்தபின்னும்
    பூக்களெல்லாம் வாடவில்லை
    சூடிக்கொண்ட யான் மட்டும்
    வயதாகி வாடி நின்றேனே
    இறுதியிலே புரிந்ததம்மா-இவை
    இயற்கையல்ல செயற்கையென்று
    இன்னும் ஒன்று விளங்கியது
    மனிதெரெல்லாம் புறங்காண்பர்
    அகங்காண தெரியா மனிதருக்கோ
    யான் செய்த பூவழகு
    அகங்கானும் பூச்சிகளோ
    புறங்கண்டு மயங்கவில்லை

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  12. #12
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0
    தலைவியின் நாணம்

    தொட்டஞ்சினுங்கியே
    தென்றலுனை தழுவும்போது
    தலையசத்து ஏனையோர்
    தொட்டால் தலைகுனிந்தும்
    வெட்கப்படும் வித்தையை;
    விண்ணைத்தொட்டு விளையாடி
    என்னைக் கண்டது
    மண்ணைப் பார்த்து
    நாணத்தால் தன்
    பெண்மை காட்டும்-என்
    தலைவியிடம் கற்றாயோ?

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •