Results 1 to 5 of 5

Thread: ஒரு கதை சொல்கிறேன்..........................

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    29 Feb 2012
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    17,297
    Downloads
    0
    Uploads
    0

    ஒரு கதை சொல்கிறேன்..........................

    மாலை மங்கும் நேரம், களைத்துப்போய் இருந்தும் விரைந்தேன் விடுதி நோக்கிய இரயில் பயணத்திற்காக.............. கொஞ்சம் கோபம் கொஞ்சம் ஏமாற்றம் கொஞ்சம் சோர்வு......... ஒரு நொடி தாமதம்தான் , ஓடி வந்தும் இரயிலை பார்க்க மட்டுமே முடிந்தது.காத்திருக்கும் வேலையில் என் தோழியும் வந்துவிட்டாள். அப்பாடா பேச்சுத்துணைக்கு ஆள் இருக்கு , மனம் சொல்லிக்கொண்டது.இரயில் வருவதை கவனிப்போமா என்பது போல் பேசிக்கொண்டே இருந்தோம்.இமயம் உயரத்தையும் தாண்டிய கோபம், வார்த்தைகள் கொந்தளிக்க திட்டினேன் . என் வயது தான் எனது அலுவலகம் தான், ஓடிய இரயிலில் ஏறி உயிரிழந்த அந்த அறிவிழந்த அரிவை. என்ன தான் அவசர உலகமோ? இரயில் போனால் வரும் , உயிர் போனால் வருமா? கோபமாய் வினவினேன்.இரயில் சத்தம் காது துளைக்க சாந்தமாய் விரைந்தோடும் எண்ணம் மட்டும் நிறைந்தது. உதிக்கும் ஆதவனோடு உதயமானது இன்று அலுவலக கூட்டம் என்னும் எண்ணம். ஒரு மணி நேரம் ஒடியது, நானும் ஓடினேன் இரயில் பயணத்திற்காக...........கடைசி படியில் கால்கள், மணியடிக்கும் ஓசை செவியில், தடதடவென ஓட்டம், பச்சைக்கொடி அசைக்க, கைகள் கம்பியை பற்ற கால்கள் இரயில் படியை மிதித்தன......... ஓடிய இரயிலில் ஏறி உயிரிழக்கும் எண்ணமோ அறிவிழந்த அரிவைக்கு என என் செவியில் யாரோ இதயத்தின் மொழி கேட்டது இரு நொடி படபடப்புக்கு பின். தவறிழைத்தேன்............தன்னிலையும் முன்னிலையும் இலக்கணத்தில் மட்டும் அல்லாது எங்குமே மாறும் என உண்மை கண்டேன். சராசரி மனிதமாய் வாழ்வது தவறில்லை, தவறு செய்ய சராசரி மனிதமாய் நானும் வாழ்ந்துவிட்டேனோ?

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஊருக்குதான் உபதேசம், உனக்கும் எனக்கும் இல்லை என்பார்கள். அதுபோல் மற்றவரைக் குறை கூறும் நாமும் அதே தவறைச் செய்கிறோம்.

    ஓடிய இரயிலில் ஏற முயன்று உயிரிழந்த ஒருவரின் செயலைக் கண்டிக்கும் நாமும் அதே தவறைச் செய்யத் துணிவதேன்? நமக்கு அதுபோல் நேராது என்னும் அலட்சியமா?

    சொல்லவந்த கருத்து மிக அருமை. ஆனால் சொன்னவிதத்தில் மனம் ஈர்க்காமல் போகும் சாத்தியம் அதிகம்.

    வரிகளைப் பிரித்து தெளிவுடன் எழுதிப் பழகுங்கள். விரைவில் தேர்ந்த கதையாசியராவீர்கள். வாழ்த்துக்கள் சுகன்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    லஞ்சம் (கையூட்டு) போல பல விடையங்களில் அடுத்தவரின் செயலுக்காக ஆத்திரப்படும் நாம் நம் செயல்களில் அதை கடைபிடிப்போமா என்றால் சந்தேகம்தான்.
    நமக்குத்தான் என்றால் அதற்க்காக ஒரு (கதையை) காரணத்தை உற்பத்தி செய்யவும் தயங்கமாட்டோம்.

    நல்ல கதைதான் போங்க சுகன்!

    நடைச்செம்மொழிதான்
    இடைஇடையே... இரயில் பெட்டிகளுக்கிடையே....
    இடைவெளி அவ்வளவுதான்....
    என்றென்றும் நட்புடன்!

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    பதிவுக்கு நன்றி.
    சொல்ல நினைத்ததை கீதமும், கு.கோ.பி யும் சொல்லி விட்டார்கள்.
    படைப்பிற்கு வாழ்த்துக்கள்.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  5. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    நன்று. தொடர்ந்து வந்தால், நடை நன்றாகும் .

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •