வறுமையின் பிடியில் படிப்பை முடித்து

வேலைக்கு நாயாய் அவன் அலைகையில்.....

எப்பொழுதும் எதிர் பார்த்து கொண்டே

இருப்பது போலவே அழகு அழகாய்.....



ஒவ்வொரு தெருமுனையிலும் ஒவ்வொரு

புதியவள்..... தானுண்டு தன் வேலையுண்டு

அவன் இருக்க விழிகளில் விளையாட்டு

விண்ணைத்தாண்டி அவன் போகையிலே,......



குடும்ப சூழ்நிலையை சூதனமாய் சொல்லி,

கரம் ஓன்று தட்டி அமைதியை இரு என்றது.......

தங்கைக்கும் பெரிய சகோதரனுக்கும்

திருமணம் முடிய இனி வாழ்வின் தொடக்கம்....



ஆரம்பம் என்று எண்ணி, தெருவின் ஓரம் நடக்கையில்

எதிரே நெடு நெடுவென, ஒரு அழகு பெண்

அவள் பார்க்க, அவன் பார்க்க, அவளே, பெருமையுடன்.....

பேசவும் ஆரம்பித்தாள்...........


"அண்ணா நினைவு இருக்க என்னை"

அதிர்ந்தான் அவன்......தெருவின் பெயரை

சொல்லி"பத்து வருடங்களுக்கு முன்

கணிதம் சொல்லி தந்தீர்களே"என்றாள்.....

யோசித்தான்,அவன் வாழ்க்கையையும்தான்?????????