Results 1 to 7 of 7

Thread: பூவின் மனம்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    23 Nov 2013
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    7,184
    Downloads
    5
    Uploads
    0

    பூவின் மனம்

    பூக்களைப் பறிக்கையில்
    பூக்களுக்கு வலிக்குமென்று
    கவலையடைகின்றேன்
    காரணம்
    பூவுக்கு பூவின் மனம் தெரியும்
    தெரியாதோர்க்கு மணம் மட்டுமே.....

  2. Likes ஜானகி liked this post
  3. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பறிப்போர் இல்லையென ஏங்குகின்றன சில பூக்கள்,
    பறித்துவிட்டார்களே என்று மருகுகின்றன சில பூக்கள்,
    பறித்த்தாலும் சேருமிடம் கோவிலா, பாவையின் கூந்தலா
    என்று புரியாமல் பரிதவிக்கின்றன சில பூக்கள்,
    பூக்களின் மனம் பற்றி சிந்திக்கிறோம்
    பூக்களின் மணம் பற்றி சிலாகிக்கிறோம்
    பூக்களின் வலி பற்றியும் விவாதிக்கிறோம்
    பூவிழந்த செடியின் வலியறிவார் யாரே?

    மேற்கண்ட வரிகள் கண்டு கலங்கவேண்டாம். தங்கள் கவிதை வாசித்தபோது சும்மா மனத்தில் தோன்றியது.
    பூவின் நிலையிலிருந்து பூவின் மனமறிந்து எழுதிய கவிவரிகளுக்குப் பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

  4. Likes ஜானகி liked this post
  5. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    பூவினைப் பறிக்காமல் செடியிலேயே விட்டுவைத்து இயல்பாய் வாடிப்போகச்செய்வதுதான் கவிமனம் !!
    கவிமனம் என்றென்றும் பூமனம்தான் !!பூ மணமும் கூட !!!

  6. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    பூக்கள் பூப்பது பறிப்பதற்கு
    ......பூவையர் பிறப்பது மணப்பதற்கு
    நாக்கு இருப்பது சுவைப்பதற்கு
    ......நல்ல சொற்களைப் பேசிடவே!
    வாக்கு கொடுப்பது காப்பாற்ற
    ......வரவு என்பது செலவிடவே!
    தூக்கம் என்பது வாழ்ந்திடவே!
    ......தூரம் கடந்திட சாதனையே!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. Likes ஜானகி liked this post
  8. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அட அட அட..!

    பூவைப் பற்றி
    பூமாலை கோர்க்கப்பட்டிருக்கு
    இந்த இழையில்.

    மணம் மனம் மயக்குகிறது.

  9. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பூவுக்கே
    பூமாரியா...??
    கவி மாரியாக...!!

    வாழ்த்துகள் சந்தோஸ்குமார்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அருமை..

    இந்த கவிதையை இரண்டுவிதமாக அணுகுகிறேன்.
    முதலாவது
    ஆழ உள் நோக்குபவர்களுக்கு இயற்கை தன்னை, தன் சுயரூபத்தைக் காண்பிக்கிறது. மேலோட்டமாக காண்பவர்களுக்கு அது வெறும் பூ தான். இயற்கையின் செல்லப் பிள்ளைகள் பூக்களும் கனிகளுமாகும். அவைகள் செல்லப்பிள்ளைகளாக உணர நீங்கள் அதன் மனதை அணுகவேண்டும், செடிகள் பேசிக் கொள்ளும் என்பதை நாம் தான் கண்டறிந்தோம். அதன் பாஷைக்கு நாம் பழகவேண்டும். நீங்கள் நம்ப்வீர்களோ மாட்டீர்களோ, நான் கொஞ்ச நாட்கள் ஒரு ரோஜா செடியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதுவரையிலும் நன்றாகத்தான் வளர்ந்தது. பேசியதை நிறுத்திய பிறகு அதன் வளர்ச்சியில் பெரும் பிரச்சனை எழுந்தது. இயற்கை ஒரு குழந்தை மாதிரி, அதனை அடிக்கடி நாம் கொஞ்ச வேண்டும்!
    இரண்டாவதாக,
    இயற்கையில் பூக்கள் நமக்காக படைக்கப்பட்டவை, என்னைப் பொறுத்தவரையில் இயற்கையே இறைவன். பூக்களை நமது சந்தோசத்திற்காகவும், நமது ஆரோக்கியத்திற்காகவும் படைத்திருக்கிறது. பறிக்காத பூ உண்மையிலேயே தன்னை பறிக்க யாருமில்லையென அழுகிறது. அதன் பிறவிப் பலனை எய்தாமல் வாடுகிறது. பின் உலர்ந்து சருகாகிவிடுகிறது. ஆகவே பூக்கள் பறிப்பதற்காகத்தான் என்று கவிதையின் கருவுக்கு எதிரேயும் கருத்து கொள்ள முடியும்.
    மட்டுமல்லாமல்,
    பூவை, ஒரு பெண்ணாக உருவகிக்கிறேன். எனக்கு வேறு பார்வைகள் கிடைக்கின்றன.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •