கண்ணுக்கு லட்ஷணமாய் காசுபணம் உள்ளவனாய்
......கல்வியிலே கம்பனாய் காண்பதற்கு எளியவனாய்
பெண்ணுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்தவனாய்
......பெரியோர்கள் கைகூப்பி வணங்கத் தகுந்தவனாய்
புண்ணுக்கு மருந்தேபோல் உதவும் குணத்தினனாய்
......புவிமாந்தர் போற்றும் உயர்குலத்துக் கோமானாய்
மண்ணிலே யாரேனும் இருந்தால் அவனைநான்
......மாலையிட்டு மணமுடிக்க இப்போதே ஒப்பிடுவேன்.