தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவையோட்டிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இணையப் பயனர்கள் அனைவரும் பங்கு பெறும் வகையில் இந்தப் புதிர்ப் போட்டியைத் தமிழ் விக்கிப்பீடியா குழு வழங்குகிறது. மூன்று சிறப்புப் பரிசுகள் காத்திருக்கிறது.

எந்த வித தடையுமில்லாமல் அனைவரும் இப்புதிரில் பங்கு கொள்ளலாம்.
போட்டி விதிகள்:
மொத்தமுள்ள இருபது கேள்விக்கு உங்கள் விடைகளை எண்ணிட்டுக் கீழுள்ள மறுமொழிப் பெட்டியில் இடவும்.
ஒருவர் ஒரு கேள்விக்குக் கடைசியாகச் சொன்ன விடை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
விடைகள், விழா நாளன்று வெளியிடப்படும் அதுவரை விடைகள் கொண்ட மறுமொழிகள் மட்டும் மட்டுறுத்தல் செய்யப்படும்.
புதியவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ் விக்கிப்பீடியாவில் 1000 திருத்தங்களுக்கு மேல் செய்தவர்கள் கௌவுரப் போட்டியாளர்களாகக் கணக்கில் கொண்டு பரிசுப் போட்டியில் சேர்க்கப்படாது.
ஏனையோரில் எந்த வயதினரும், எந்த மொழியினரும், எந்த நாட்டினரும் பரிசுப் போட்டிக்குத் தகுதியானவர்களே.
விக்கிப்பீடிய பயனராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

புதிர்ப் பக்கம்
http://tamilwikipedia.blogspot.com/2013/09/quiz.html
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவுக் கூடல் கொண்டாட்ட அரங்கில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். இடம்:கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை நாள்:செப்டம்பர் 29
மேலும் கூடல் பற்றி அறிய இங்கு வாருங்கள்