Results 1 to 11 of 11

Thread: ஊதாரி - by முரளி

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0

    ஊதாரி - by முரளி

    கணேஷ் , சென்னையில் ஒரு தொழில் அதிபர். 45 வயது இளைஞன். டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ், ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலையின் சொந்தக்காரன்.

    வருஷம் ஒரு தடவை வெளிநாடு சுற்றுலா, கடனில் வீடு, கடனில் தொழிற்சாலை, ஆடம்பர வாழ்க்கை. வரவுக்கு மீறிய செலவு.

    அவன் மனைவி ஊர்மிளா கணேஷை விட ஒரு படி அதிகம். சரியான நகைப் பைத்தியம் மட்டுமல்ல. பகட்டு, படாடோபம், டாம்பிகத்திற்கு ஒரு சரியான உதாரணம். ஊதாரிக்குடும்பம். சுருக்கமாக, வருங்கால பிச்சைக்காரர்கள்.

    கணேஷ் அப்பா, அடிக்கடி சொல்வார். “ இதோ பாரு கணேஷ்! உன் போக்கே சரியில்லை. சம்பாதிக்கறதை செலவு பண்ணிட்டு, மிச்சமிருந்தா மீதியை சேமிக்கணும்னு நினைக்காதே. அது முட்டாள்தனம். சம்பாதிக்கிறதிலே, சேமிப்பு போக, மிச்சத்தை செலவு பண்ணு. அதுதான் புத்திசாலித்தனம்.”

    அது கணேஷை பொருத்தவரை செவிடன் காதில் சங்கு. பெருசுக்கு வேறே வேலை இல்லை. வாழ்க்கையை அனுபவிக்க தெரியாத அசடு.

    இவர்கள் இல்லற வாழ்க்கையில், சேமிப்பு என்கிற பேச்சுக்கு இடமே இல்லை.

    இப்போது கொஞ்ச நாளாக கணேஷுக்கு தொழில் நஷ்டம். கடன் தொல்லை. ஒரே குழப்பம்.

    ***

    வங்கி கிளை

    “சொல்லுங்க மிஸ்டர் கணேஷ்! எப்படி இருக்கீங்க ?” – பேங்க் மேனேஜர் கணேஷை வரவேற்றார்.

    “அதை ஏன் சார் கேக்கறீங்க? பேசாமே பாக்டரியை இழுத்து மூடிட்டு போகலாமாங்கிற அளவுக்கு போயிடுச்சி” – கணேஷ்

    “அட கஷ்டமே! நான் கூட உங்க ஸ்டாக் ஸ்டேட்மெண்ட் பார்த்தேன். ப்ரொடக்ஷன் ரொம்ப கம்மி மாதிரி இருக்கே! ரா மெட்டிரியல்ஸ் வாங்கி இருக்கிறதும் கம்மியாத்தான் இருக்கு. என்ன ஆச்சு?”

    “முன்னெல்லாம் மூணு ஷிப்ட் பாக்டரி போயிட்டிருந்தது. இப்போ ஒரு ஷிப்ட் தான். அதுக்கே வேலை இல்லை. ஏற்றுமதி ரொம்ப குறைந்து போயிடுத்து. என் ஏற்றுமதி மார்க்கெட் விலை நமக்கு கட்டுபடி ஆகலை. லேபர் ப்ரோப்ளம் வேறே. ஒன்னும் முடியலே சார்!” அலுத்துக்கொண்டான் கணேஷ்.

    “அக்கௌன்ட் கூட ஆறு மாசமா ரொம்ப இர்றேகுலர்ன்னு எங்க லோன் அதிகாரி சொன்னார்! ” மேனேஜர் கவலை அவருக்கு.

    ‘அது விஷயமாத்தான் உங்களை பாக்க வந்திருக்கேன் சார். எனக்கு ஒரு ஐம்பது லக்ஷம் வேண்டியிருக்கு. புது மெஷின் வாங்கணும்”

    “சாரி மிஸ்டர் கணேஷ். நான் இப்போ ஒன்னும் பண்ண முடியாது. நிறைய நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பியிருக்கோம். ஆனால், எந்த நடவடிக்கையும் நீங்க எடுக்கலே. அதனால், மேலிடத்திலே இதை வாராக் கடன் அப்படின்னு முத்திரை குத்தி, பணத்தை ரெகவர் பண்ண சொல்லியிருக்காங்க. கோர்ட்லே கேஸ் வேறே போடச்சொல்லி நெருக்கறாங்க. என் வேலைக்கே உலை வந்துடும் போல இருக்கு”

    “ஐயோ சார், என் நிலைமை ரொம்ப டைட் சார், உங்க பாங்கை நம்பித்தான் நானே வந்திருக்கேன். நீங்க ஹெல்ப் பண்ணியே ஆகணும்”

    “சான்சே இல்லை கணேஷ். ரொம்ப சாரி. உங்க வீட்டுக் கடன் வேறே ஒரு வருட பாக்கி இருக்கு. நீங்க உடனே ஒரு முப்பது லக்ஷம் ஏற்பாடு பண்ணி கடனை நேர் பண்ணப் பாருங்க. அதுக்கப்புறம், நானே மேலே பேசி, மெஷின் கடனுக்கு ஏற்பாடு பண்றேன்”

    வேறே ஒண்ணும் முடியாதா சார்? நம்ம தொழில் மினிஸ்டர் என்னோட உறவுக்காரர் தான். அவர்கிட்டே வேணா சொல்லி ...” இழுத்தான்.

    “ அதெல்லாம் வேண்டாம் மிஸ்டர் கணேஷ். ஆவரதில்லே. வேறே பிரச்சனை வந்துடும். ஒரு மாசத்திலே கடனை சீர் பண்ணிடுங்க. இந்த விஷயத்திலே, மேலிடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். என்னை கிழிக்கறாங்க. நீங்க சரி பண்ணலைன்னா, உங்க வீட்டை ஏலத்திற்கு கொண்டு வரச்சொல்லி யிருக்காங்க. ரொம்ப சாரி மிஸ்டர் கணேஷ்.”

    ****

    கணேஷ் வீடு

    “என்னங்க! ரொம்ப வாட்டமாயிருக்கீங்க! பாக்டரியிலே ஏதாவது பிரச்னையா?” – மனைவி ஊர்மிளா.

    “உனக்கு தெரியாததா ஊர்மிளா? பிசினஸ் ரொம்ப நஷ்டம். கடன் கொடுத்தவங்க நெருக்கராங்க. பாக்டரி கடன், வீட்டு கடன், வட்டியோட சேர்ந்து பூதாகாரமா நிக்குது. என்ன பண்றதுன்னே தெரியலே.”

    “ஐயோ! நமக்கு ஏன்தான் இந்த கஷ்ட காலமோ? வேறே ஏதாவது கடன் கிடன் முயற்சி பண்ணீங்களா? ”

    “பண்ணேன். ஒண்ணும் கிடைக்கலே. பேங்க் கையை விரிச்சுட்டாங்க. முதல்லே கடனை சரி பண்ணு. பின்னாலே பாக்கலாம்னு சொல்லிட்டாங்க. அப்பாகிட்டே பணம் கேட்டேன். அவரது திருச்சி பக்கத்திலே தரிசு நிலத்தை ஒண்ணா வித்துக்க சொன்னார்”

    “நீங்க என்ன சொன்னீங்க?”

    “அது வேஸ்ட் ஊர்மிளா. எப்போவோ சல்லிசா வரதுன்னு வாங்கி போட்டார்.. அதை வித்து வர காசு, கால் வாசி கடனுக்கு கூட காணாதும்மா. எனக்கு குறைந்தது ஒரு ஒரு கோடியாவது வேணும், இப்பத்திக்கு கடனை சமாளிக்க.”

    “வேறே என்ன வழி?”

    “இந்த வீட்டை வித்துடலாம்!. ஐம்பது லக்ஷம் கிடைக்கும். மிச்சத்தை அங்கே இங்கே வாங்கி சமாளிச்சிப்பேன்.”

    “ஐயோ! அப்போ நாம்ப எங்கே போறது? நடு ரோட்டுக்கா? இப்பத்தான், நிறைய செலவு பண்ணி, வாசல் லான், தோட்டம், ஊஞ்சல் அப்பிடின்னு , பாத்து பாத்து பண்ணியிருக்கேன். வீட்டை உள்பக்கம் இடிச்சி ரி மாடல் பண்ணிட்டிருக்கேன்.. இந்த ஐடியாவை விட்டுடுங்க. ப்ளீஸ்”

    “அதுவும் சரிதான். ஊருக்கு வெளியே வீடு. யார் வாங்குவாங்க ? பத்து வருஷம் கழிச்சி வேணா ரேட் ஏறும். அப்போ நகைகளை வித்துடலாமா?”

    “என்ன, உங்களுக்கு விளையாட்டா இருக்கா? இதெல்லாம் பின்னாடி குழந்தைகள் கல்யாணத்திற்கு. அதுவுமில்லாமே, எல்லாம் பேன்சி நகைகள். கல் வெச்சி, மாடர்ன் டிசைன். வித்தா சேதாரம் போய், ரொம்ப கம்மியாத்தான் கிடைக்கும். போயும் போயும் உங்களுக்கு இப்படி கேவலமா ஐடியா தோணுதே? நகையை விக்கறதாம்? ம்..”

    “பின்னே என்னதான் வழி ஊர்மிளா?”

    “யோசனை பண்ணுங்க!. எதாவது பிளான் போடுங்க. பேங்க் மேனேஜர் கிட்டே டைம் கேளுங்க. வீடு விக்கறது, நகை விக்கறதெல்லாம் வேணாம்.”

    கணேஷ் யோசித்தான். என்ன பண்ணலாம்? எதாவது பண்ணித்தான் ஆகணும்.

    ****


    .... தொடரும்.....இதே திரியில் கீழே
    Last edited by முரளி; 31-08-2013 at 03:15 AM. Reason: cosmetic, improvement

  2. #2
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    ஊதாரி ... தொடர்ச்சி

    ஒரு பதினைந்து நாள் கழித்து -- குஜராத்

    கணேஷ், வியாபார நிமித்தமாக குஜராத் போயிருந்தான். ஹோட்டல் அறையில், இரவு 10.15 க்கு மணிக்கு சென்னையிலிருந்து கால். மனைவியிடமிருந்து.

    “என்னங்க! நம்ப பாக்டரி கோடவுன்லே தீ விபத்தாங்க! நம்ம சுபெர்வைசர், முத்துதான் போன் பண்ணினார்.”

    “என்னது? எப்படி? எப்போ?”

    “இப்போதான் ஒரு பத்து மணிக்கு. எப்படின்னு தெரியலே. வாட்ச்மன் சொல்லி, தீயணைப்பு படை வரதுக்குள்ளே, உள்ளே இருந்த அத்தனை பொருளும் எரிந்து போச்சாம்”

    “அத்தனையும் ஜெர்மனிக்கு அனுப்ப வேண்டிய லேடீஸ் ரெடிமேட் துணிகளாச்சே. ஷிப்பிங்க்கு ரெடியா கோடவுன் அனுப்பிச்சிட்டு வந்தேனே, அதுவா? ”

    “அது தெரியலே. முத்து உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன்னு சொன்னார்”

    “யாருக்காவது எதாவது விபத்து?”

    “நல்லவேளையா அப்போ அங்கே யாரும் இல்லையாம். நீங்க உடனே புறப்பட்டு வாங்க”

    “சரிம்மா! நீ எதுக்கும் கவலைப் படாதே. நான் நாளைக்கே வந்துடறேன்”

    ****

    ஒரு பத்து நிமிடத்தில், கணேஷ் பாக்டரி சுபெர்வைசர் முத்துவிடமிருந்து போன்.

    “சார்! நீங்க சொன்னமாதிரி செஞ்சுட்டேன். ஒரு பிரச்னையும் இல்லே”

    “வெரி குட் முத்து. யாருக்கும் தெரியாதே?”

    “மூச்! ஈ, காக்கைக்கு கூட தெரியாது சார். நானே, எல்லாத்தையும் கிட்டே இருந்து, பண்ணிட்டேன்.”

    “என்ன பண்ணினே சொல்லு”

    “நீங்க சொன்ன ஐடியா படி, எக்ஸ்போர்ட் பண்ற 2000 அட்டைபெட்டிங்க உள்ளே பழைய பேப்பர், பழைய துணி, ரிஜெக்ட் பண்ணின டிரஸ் எல்லாம் வெச்சு நம்ம திருமழிசை கோடவுன்க்கு அனுப்பிட்டேன்.

    “குட்”

    “அப்புறம், பாக்டரி எம்ப்ளாய்ஸ் ஒருத்தருக்கும் சந்தேகம் வராத மாதிரி, வெளி ஆட்களை வச்சு, ராத்திரி பத்து மணிக்கு அந்த கோடவுன்க்கு நெருப்பு வெச்சுட்டேன்.”


    “குட். குட். என் மனைவிக்கு கூட எதையும் சொல்லாதே. உளறிடுவா. சமயம் பார்த்து நான் சொல்லிக்கறேன்.”

    “சரி சார்”

    “நான் உடனே கிளம்பறேன். அதுக்குள்ளே, நீ உடனே, போலீஸ் ரிப்போர்ட், எப்.ஐ.ஆர், தீ அணைப்பு படை ரிப்போர்ட். எல்லாம் வாங்கிக்கோ. நம்ப எம்.எல்.ஏ கிட்டே நான் இப்போவே பேசறேன். அவர் எல்லா ஏற்பாடும் பண்ணிடுவார்.”

    ‘சரி சார்”

    “சொல்ல மறந்துட்டேன். இது, மின்சார ஷார்ட் சர்கியுட்னாலே ஏற்பட்ட விபத்துன்னு ரிபோர்ட் வாங்கு. மினிஸ்டர் ஆளுன்னு சொல்லு. கொடுத்துடுவாங்க. அவங்க கேக்கிறதை நீயும் கொடுத்துடு.”

    “அப்படியே பண்றேன் சார்”

    “மறக்காமே, நான் சொன்ன மாதிரி, நம்ம தீ விபத்து, தினசரிலே வரதுக்கு ஏற்பாடு பண்ணிடு. தீ விபத்து நடந்தப்போ, போட்டோ எடுத்தாங்களா? நீயும் கோடவுன் சைட், போட்டோ பிரிண்ட் போட்டுக்கோ. அது கட்டாயம் வேண்டும்”

    “சரி சார்”

    “இன்சூரன்ஸ் கிளைம் பாரம் உடனே, நம்ம ஏஜென்ட் மூலமா வாங்கி, தயாரா ரெடி பண்ணிக்கோ. நானும் அவரோட பேசறேன். என்ன பண்ணனும்னு அவருக்கும் சொல்லறேன். ”

    “சரி சார்”.

    “நான் வந்து மிச்சத்தை பார்த்துக்கறேன். வெச்சுடட்டுமா?”

    ****

    ஒரு வாரம் கழித்து

    தனியார் இன்சூரன்ஸ் அலுவலகம்


    கிளைம்ஸ் பிரிவு. மணி அந்த அலுவகத்தில் ஒரு அதிகாரி. அவனது உதவியாளர்கள், கிளைம் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்யும் கிளைம்களை, பரிசீலனை செய்து, ஒப்புதலுக்கு மேலே அனுப்புவது அவன் வேலை.

    காலை 11 மணி. நிறைய கிளைம்ஸ் அவனது ஒப்புதலுக்காக காத்திருந்தன. ஒன்றை மிக தீவிரமாக படித்துக் கொண்டிருந்தான். “ச்சே! இப்போவெல்லாம் நிறைய போகஸ் கிளைம்ஸ் வருதே! நாட்டிலே மோசடி பண்றவங்க நிறைய ஆயிட்டாங்க போல” அலுத்துக் கொண்டான்.
    இன்டர்காம் அழைத்தது.

    “மணி, ஒரு நிமிஷம் என் அறைக்கு வரீங்களா?” மோகன் ,வைஸ் பிரசிடென்ட்

    “சார், இதோ வரேன்”

    ***

    மோகன் வைஸ் பிரசிடென்ட்(க்ளைம்ஸ்) அறை.

    “மணி, டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ், சென்னை கோடவுன் தீ விபத்து கிளைம் ஸ்டேடஸ் என்ன? காலைலேயிருந்து கால் மேலே கால். அரசியல் செல்வாக்கு உள்ளவங்க போல. ஓயாம மினிஸ்டர் பேரை சொல்லிக் கிட்டிருக்காங்க”

    “அதைதான் பாத்துக்கிட்டேயிருக்கேன் சார்”.

    “சரி, எவ்வளவு கிளைம் கேட்டிருக்காங்க?”

    “ரூபா ஒரு கோடி சார், பாலிசி அமௌன்ட். அவங்க மார்க்கெட் ரேட் இழப்பு ரூபா 1.7 கோடி. துணி ஏற்றுமதி சார்.”

    ‘எல்லா டாகுமென்ட்ஸ்ம் இருக்கா?”

    “எல்லாம் சரியா இருக்கு சார். அதிலே ஒரு பிரச்னையும் இல்ல.”

    “கிளைம் இன்ஸ்பெக்டர் ஒப்புதல் கொடுத்திருக்காரா?”

    “அதுவும் இருக்கு சார்”

    “சரி, அப்போ ப்ராசஸ் பண்ணி, உன் ஒப்புதலோட எனக்கு உடனே அனுப்பி வை”



    .... தொடரும்.....இதே திரியில் கீழே
    Last edited by முரளி; 30-08-2013 at 10:23 AM. Reason: cosmetic, improvement

  3. #3
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    ஊதாரி ... தொடர்ச்சி ....

    “சார், அதிலே எனக்கு இரண்டு மூணு சந்தேகம் இருக்கு!” இழுத்தான் மோகன்.

    “என்ன! போகஸ் கிளைமா? உனக்கு எதாவது இடிக்குதா?”

    “அப்படித்தான் தோணுது சார். ஆனா நிச்சயமா சொல்ல முடியலே”

    “என்ன மோகன், எதை வெச்சி சந்தேகப் படறே?”

    “விசாரிச்சதிலே, டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ் முதலாளி கணேஷ்க்கு நிறைய கடன் தொல்லை இருக்கு போலிருக்கு சார். கொஞ்ச நாளா,தொழில் நஷ்டம்ன்னு தெரியுது.”

    “மோசடி மோடிவ் போல இருக்கா?”

    “ஆமா சார். சந்தேகத்தின் பேரில், அவங்க ஸ்டாக் ஸ்டேட்மெண்ட் வாங்கி பார்த்தேன். கோடவுன்லே வைக்கற அளவு , கிட்டதட்ட இரண்டாயிரம் யூனிட் தயார் பண்ற அளவு, ரா மட்டிரியல் இல்லே சார்”

    “இது நல்ல பாய்ன்ட் தான். ஆனால், கிளைம் தள்ளுபடி செய்ய வேறே நல்ல ஆதாரம் வேணுமே.”

    “நான் அந்த முதலாளி கணேஷ் , அப்புறம் அவர் சுப்பெர்வைசரோட பேசினேன். அவங்க கிட்டே எந்த பதட்டமும் இல்லே. கோடவுன் எரிஞ்சி போச்சேன்னு கவலை இல்லை. டெலிவரி டிலே பத்தி பேசவே மாட்டேங்கறாங்க. எதுக்கு இதை கேக்கறீங்கன்னு காட்டமா கேக்கறாங்க. வேறே ஏதோ பேசி மழுப்பறாங்க.”

    “இதுவும் மோசடி கிளைம்க்கான நல்ல இன்டிகேட்டர் தான். ஆனால், இதுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிற தைரியம் கூட காரணமா இருக்கலாம் இல்லியா?”

    “இருக்கலாம் சார். நீங்க சொல்லுங்க சார், அப்படியே பண்ணிடலாம்.”

    “ம். நீ சொல்றதும் யோசிக்கரா மாதிரி தான் இருக்கு. எதுக்கும், நீ ஒரு தடவை பாக்டரிலே செக் பண்ணு. விசாரி. தீ விபத்து நடந்த இடத்தை பார்வை இடு. ஏதாவது துப்பு கிடைக்குதான்னு பாரு. மூணு நாளிலே ரிப்போர்ட் கொடு. குட் லக்”

    “தேங்க்ஸ் சார்”

    ****

    டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ் அலுவலக அறை

    “வணக்கம் சார், நான் இன்சூரன்ஸ் அதிகாரி மணி”

    “வாங்க! வாங்க! காத்துக்கிட்டு இருக்கேன். கிளைம் கிளியரன்ஸ் ஆயிடுச்சா? செக் கொண்டுவந்திருக்கீங்களா? – வரவேற்றான் கணேஷ். உடன் சுப்பெர்வைசர் முத்து.

    “இல்லே சார். இன்னும் கொஞ்சம் தீ விபத்து பற்றிய தகவல் வேணும். அது பத்தி பேசத்தான் வந்திருக்கேன்”

    “அதான் வேனப்பட்ட டாகுமென்ட்ஸ் கொடுத்திருக்கோமே! இன்னும் என்ன வேண்டும்?” எரிந்து விழுந்தான் கணேஷ்.

    “சொல்றேன் சார். கோபப் படாதீங்க. எரிந்து போன எக்ஸ்போர்ட் துணிமணிகள் சாம்பிள் இருக்கா?”

    “எதுக்கு கேக்கறீங்க?”

    “இல்லே. இதெல்லாம் ஒரு பார்மாலிட்டி தான்”

    “ம். சரி. கொடுக்கச்சொல்றேன். சீக்கிரமே கிளைம் செட்டில் பண்ணுங்க. இல்லாட்டி, மினிஸ்டர் கோபப் படுவாரு.”

    “சார், தீ விபத்து நடந்த இடத்தை இன்னோரு முறை பார்க்கணும்.”

    “எதுக்கு இப்படி டிலே பண்ணறீங்க? உங்க இன்சூரன்ஸ் இன்ஸ்பெக்டர் தான் பாத்து ரிப்போர்ட் கொடுத்திருப்பாரே!”

    “இல்லே சார், நெருப்பு முதல்லே கோடவுன் பின்னாடிதான் ஆரம்பிச்சிருக்கு. ஆனால், மின்சார மெயின் போர்ட் முன் பக்கம் இருக்கு. அது எப்படின்னு பாக்கணும்?”

    “இதோ பாருங்க. விபத்து நடந்த போது, நான் ஊரிலேயே இல்லை. போலீஸ் ரிப்போர்ட்லே விபத்துக்கு காரணம் மின்சார குளறுபடின்னு சொல்லியிருக்கில்லே. அவங்களை கேளுங்க. நீங்க என்ன செக் பண்றது?”

    “இல்லே சார், கேக்க வேண்டியது என் கடமை. கோபப் படாதீங்க”

    “சரி சரி, முத்து இவரை கோடவுன்க்கு அழைச்சிட்டு போ”

    “அங்கே, எதையும் வெளியே எடுத்துப போடல இல்லையா? எரிஞ்ச சாமான்கள், துணி சாம்பல் எல்லாம், அப்படியே தானே இருக்கு?”

    “ஆமா. நீங்க கிளைம் அப்ரூவ் பண்ற வரைக்கும் அப்படியே விட்டு வைக்க சொன்னாங்க”

    சரி! நான் கிளம்பட்டுமா?”

    “இந்தாங்க! நீங்க கேட்ட எக்ஸ்போர்ட் துணி சாம்பிள் பாக்கெட்”

    “தேங்க்ஸ்”

    “சீக்கிரம் முடிங்க. எனக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு மணி. உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணாலும் கட்டாயம் வீடு தேடி வந்து பண்ணி கொடுக்கறோம். நீங்க எதுக்கும் கவலையே படாதீங்க. நான் பாத்துக்கறேன்”

    ‘இதெல்லாம் நீங்க சொல்லனுமா சார்! நான் பாத்துக்கிறேன். வரட்டுமா?” மணி கிளம்பினான்.

    “அப்பா!” மூச்சு வந்தது கணேஷுக்கு.

    ***


    இரண்டு நாள் கழித்து

    இன்சூரன்ஸ் அலுவலகம் – மணியின் அறை.



    “என்ன மணி சார், வரச் சொன்னீங்க ! செக் ரெடியா? மினிஸ்டர் ஐயா கூட கேட்டாரு, “ஏன் கணேஷ்! இன்னுமா கிளைம் செட்டில் ஆவலன்னு?”- கணேஷ்

    “சார்! மன்னிக்கணும், செக் ரெடியாயில்லே. உங்களுக்கு வேணா, கைக்கு போட, விலங்கு ரெடி”

    “என்ன சார் சொல்றீங்க! நான் யாரு தெரியுமா?”

    “தெரியும். அதானலேதான், உங்களை கூப்பிட்டு பேசிக்கிட்டிருக்கேன். இல்லேன்னா, இந்த நேரம் போலீஸ் கம்ப்ளைன்ட் போயிருக்கும், மோசடி குற்றத்திற்காக”

    “வாட்?”

    “எல்லாம் நல்லாத்தான் ஜோடனை பண்ணீங்க. ஆனால், சில விஷயங்களை கோட்டை விட்டுட்டீங்களே கணேஷ் சார்”

    “நிறுத்துங்க. நான் இப்போவே உங்க மேலதிகாரியை பாக்கிறேன்”

    “அதுக்கு முன்னாடி நான் சொல்றதை கேளுங்க மிஸ்டர் கணேஷ்”

    “சொல்லுங்க! உங்களுக்கு நீங்களே குழி வெட்டிக்கிறீங்க மணி”

    “பாக்கலாம் யாருக்கு வெட்டியிருக்காங்கன்னுட்டு. உங்க தீ விபத்து இடத்திலே நான் பார்வை இட்டதிலே, இந்த ஹூக்ஸ் கொஞ்சம் கிடைச்சது. இதெல்லாம், நம்ம ஊரு நைட்டீஸ், பாண்ட்ஸ் இதிலே தான் இருக்கும். இது வெளி நாட்டுக்கு அனுப்பற துணிமணி சாம்பிள் கொடுத்தீங்களே, அதிலே இல்லே. இது எப்படி கோடவ்ன்லே வந்தது? கொஞ்சம் சொல்ல முடியுமா?”

    “அது எப்படி எனக்கு தெரியும்? முன்னாடி அங்கே சில துணிகள் இருந்திருக்கலாம்! அதிலே இந்த ஹூக்ஸ் இருந்திருக்கலாமே?”

    “ரொம்ப சரி. மிஸ்டர் கணேஷ். அப்படியும் இருக்கலாம். அப்போ, உங்க ஏற்றுமதி செய்யற துணியிலே ஏதாவது உலோக பாகம் இருந்தா, அவை அங்கே எரியாம இருந்திருக்கனுமில்லே?”

    “நீங்க என்ன சொல்லவரீங்க மணி? ” – கணேஷ் குரல் லேசாக நடுங்கியது.

    “உங்க லேடீஸ் கார்மென்ட் ஏற்றுமதி சாம்பிள் பார்த்தேன், அதைதான் நீங்க கோடோவுன்க்கு அனுப்பியிருக்கீங்க. அதிலே, இடுப்பு பகுதியில் துணி பெல்ட் இருக்கு. அதை இறுக்கி கட்ட, ஒரு பான்சி மெடல் பின் அதோட இனைச்சிருக்கீங்க. பித்தளைலே. கழட்டி மாட்ட வசதியா! சரியா?”

    “ஆமா! அதுக்கென்ன இப்போ?” கணேஷ் முகம் கொஞ்சம் இருண்டது.

    “அங்கே தான் தப்பு பண்ணிட்டீங்க மிஸ்டர் கணேஷ். நெருப்பிலே அழியாத ஐட்டங்கள் சில இருக்கு உதாரணத்திற்கு, மெடல் பீசெஸ், பைபர் கிளாஸ், கருவிகள். எரிந்து போன அந்த கோடவுனில், மாதிரிக்கு கூட ஏற்றுமதி டிரஸ்லே இருக்க வேண்டிய ஒரு பான்சி மெடல் பின் கூட காணோம். உங்க கணக்கு படி 2000 பீஸ் இருக்கணும். எங்கே போச்சு? எரிஞ்சு போச்சா?”

    “அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?” - கணேஷ் குரல் கம்மியது. முகம் வெளிறி விட்டது.

    “இதோ பாருங்க கணேஷ். எனக்கு நடந்தது என்னன்னு தெரியும். உங்க கம்பனி நிதி நிலைமை, உங்க கடன், நஷ்டம் எல்லாம் எங்க கிட்ட ஆதாரம் இருக்கு. நீங்களா ஒப்புக்கொண்டு, உங்க கிளைமை வாபஸ் வாங்கிக் கொண்டால் ஓகே. இத்தொட விட்டுடலாம். இல்லையா, விசாரணை பண்ண வேண்டி வரும். கோர்ட், போலீஸ், உங்க வண்டவாளம் வெளிலே வரும். என்ன சொல்றீங்க?”

    “சரி. வேறே வழியில்லே. வாபஸ் வாங்கிக்கறேன். மடையன், முத்து இதை யோசிக்கலையே?” – கணேஷ் புலம்பினான்.

    “அடுத்த தடவை, சரியா பிளான் பண்ணி, போகஸ் கிளைம் பண்ணலாமோன்னு நினைக்காதீங்க. வேறே ஏதாவது தப்பு வரும். மாட்டிக்குவீங்க”

    “கோடோவுன் எரிந்தது தான் மிச்சமா?”

    “நீங்க முதல் தடவையா இந்த மாதிரி மோசடி பண்றதாலே, பெரிய இடத்து சம்பந்தம் இருக்கிறதாலே, இந்த அளவோட விடறோம். அதுக்கு சந்தோஷப் படுங்க. குட் பை கணேஷ்”

    ****


    சோர்ந்து போய் வீட்டுக்கு வந்தான் கணேஷ். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். இனிமே இந்த வழிக்கே போகமாட்டேன். பேசாம, இருக்கிற வீட்டை விக்க வேண்டியது தான். நகையையும் வந்த விலைக்கு விக்க வேண்டியதுதான். வேறே வழி?

    அவனது அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. “கணேஷ், வேண்டாம்பா இந்த ஆடம்பரம். இன்னிக்கு தேவையில்லாமல் வாங்கினால், நாளைக்கு தேவையானதை எல்லாம் விக்க வேண்டியிருக்கும். சேமிப்பு அவசியம்பா.”

    எவ்வளவு சரியான வார்த்தை? இன்னிக்கு கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். இப்போ வருந்தி என்ன பிரயோசனம்?

    விட்டத்தை பார்த்து, வீட்டில், வராந்தாவில் உட்கார்ந்திருந்தான். அப்பா கிட்டேயிருந்து போன்.

    “கணேஷ்! அப்பா பேசறேன்ப்பா! ரொம்ப நாளைக்கு முன்னாலே, திருச்சியிலே வாங்கி போட்டிருந்தேனே, ஐந்து ஏக்கர் நிலம், அதை இப்போ விலைக்கு கேக்கறாங்க. ஏதோ பாக்டரி கட்ட போறாங்களாம். ஐந்து கோடிக்கு கிட்டே போகும் போல இருக்கு. உனக்காக வித்துடலாம்னு பாக்கிறேன். என்ன சொல்றே? நீயும் ஏதோ பணமுடை, நஷ்டம்ன்னு சொன்னியே. உனக்கில்லாததா? வரியா? ஏதோ இனிமேயாவது பாத்து நடந்துக்க”

    “அப்பா! ரொம்ப தேங்க்ஸ்பா. இப்போவே வரேன்”

    "கணேஷ். அப்புறம், நம்ம மினிஸ்டர் சுகவனம் இருக்காரில்லே, அவரை கட்சியிலிருந்து நீக்கிட்டாங்க. ஏதோ பெரிய ஊழல் பண்ணிட்டாராம். கட்சி மேலிடம் அவர் பேரிலே ரொம்ப கோபமா இருக்கு போலிருக்கு. நீ பாட்டுக்கு அவர் நம்ம உறவுன்னு எங்கேயாவது சொல்லிவைக்கப் போறே? வம்பிலே மாட்டிக்குவே. கேஸ் கீஸ் போட்டுரப் போறாங்க. பாத்துக்கோ"

    "ச்சே ச்சே ! எனக்கென்ன பைத்தியமா? நான் ஏன் அவர் பேரை சொல்லப் போறேன்?.

    போனை வைத்தான்.

    ‘ஊர்மிளா, நான் நாளைக்கு ஊருக்கு போயிட்டு பணத்தோட வரேன்”

    “அட! பரவாயில்லியே. பிரச்சனை தீர்ந்ததா?”

    “ஆமா. நல்ல வேளை, எங்கப்பா என்னை மாதிரி ஊதாரி இல்லை

    ***
    அன்று இரவு. கணேஷின் படுக்கை அறை.

    “என்னங்க! நமக்கு தான் பைசா வருதே. நான் வேணா ஒரு வைர நெக்லஸ் வாங்கிக்கவா?

    “ஒ! வாங்கிக்கோ செல்லம். என்ஜாய். அப்படியே, நம்ம அசோக் ட்ராவல்ஸ்க்கு போன் பண்ணி, ஆஸ்திரேலியா டூர்க்கு புக்கிங் பண்ணிடு. அக்டோபெர்லே போலாம்”

    “அட! இந்த வருஷமும் போறோமா?”

    பின்னே! எங்க அப்பா இருக்குற வரைக்கும் நம்ம காட்டிலே மழைதான். கறந்துடலாம்.”

    “அப்புறம்?”

    “இருக்கவே இருக்கு, இன்சூரன்ஸ் கம்பெனி” - கணேஷ் காப்பீடை விடறதாயில்லை.

    “ரொம்ப சரி. ஆனால், இந்த தடவை சொதப்பக் கூடாது” - ஊர்மிளா. ஜாடிக்கேத்த மூடி.

    “ஆகட்டும் கண்மணி. ஆனால் பாக்டரி வேணாம். இந்த வீட்டை எரிச்சுடலாம்.”

    “சூப்பர். இன்னொரு ஐடியா. முதல்லே, நகை திருட்டு போச்சுன்னு இன்சூரன்ஸ் கிளைம் பண்ணிட்டு அப்புறம் வீட்டை எரிச்சுடலாம். எனக்கும் புது வீடு போகணும் போல இருக்குதுங்க”

    “ஆஹா! என்னை மாதிரி எப்படியெல்லாம் மாத்தி யோசிக்கறே? என் ராசாத்தி !”

    "பெட் ரூம் போட்டு யோசனை பண்ரோமில்லே! அதான்." சிரித்தார்கள், இந்த எதிர்கால ஏமாற்றுக்காரர்கள். ஆனால், இவர்கள் வாரிசுகளின் எதிர்காலம் ஒரு ?தான்.



    *** முற்றும்
    Last edited by முரளி; 04-09-2013 at 05:52 AM. Reason: cosmetic, improvement

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    மௌரியப் பேரரசர் சந்திரகுப்தரின் குரு சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?

    வருமானத்தை 6 பங்காக பிரி. ஒரு பங்கு வரி , ஒரு பங்கு தானம், ஒரு பங்கு சேமிப்பு, ஒரு பங்கு குடும்பச் செலவு, ஒரு பங்கு உறவினருக்கு, ஒரு பங்கு உன் இன்பத்திற்கு.....

    இதன்படி செய்தால் சும்மா ஒரு கணக்கு...

    30 வருட உழைப்பில் சேமிப்பது உனது ஓராண்டு வருமானத்தைப் போல 5 மடங்கு. அதை சரியாக முதலீடு செய்தால் அது உனது பத்து ஆண்டு வருமானமாக மாறும். அது தேவைகள் சுருங்க்கிய முதுமை காலத்தைக் கவலையின்றி கழிக்க உதவும்.

    சேமிப்பு என்பது இந்தியக்கலாச்சாரத்தின் அடிப்படை. இன்று அது அருகி வருகிறது. சட்டென பணக்காரன் ஆகிவிட வேண்டும். பணமழை கொட்ட வேண்டும் என்ற ஆசையில் பாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கிறோம்.

    ஊதாரித்தனமும் பேராசையும்தான் பல குற்றங்க்களுக்கு அடிப்படை...

    கதையில் நல்ல விஷயத்தைச் சொல்ல முயற்சி செய்திருக்கீங்க..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    "சம்பாதிக்கறதை செலவு பண்ணிட்டு, மிச்சமிருந்தா மீதியை சேமிக்கணும்னு நினைக்காதே. அது முட்டாள்தனம். சம்பாதிக்கிறதிலே, சேமிப்பு போக, மிச்சத்தை செலவு பண்ணு. அதுதான் புத்திசாலித்தனம்.”

    அனுபவஸ்தரின் அழகான அறிவுரையை கேட்டு நடந்திருந்தால் இந்த கஷ்டமே வந்திருக்காதே.

    அனைவரும் பின்பற்ற வேண்டிய அறிவுரை.

    பதிவுக்கு நன்றி.

    மும்பை நாதன்

  6. #6
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தாமரை..

  7. #7
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நாதன்.

    உங்களது சிறுகதை படிக்கும் ஆர்வமும், ஆவலும் , .... யு ஆர் கிரேட்.

    உங்கள் கருத்து , எனக்கு ஒரு புது உற்சாகத்தை கொடுக்கிறது. டானிக் மாதிரி. மிக்க நன்றி.
    Last edited by முரளி; 31-08-2013 at 05:09 AM.

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    ஒரு நல்ல எழுத்தாளரின் முயற்சியை ஊக்கப்படுத்த முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.

    மேன் மேலும் நல்ல படைப்புகளைத்தாருங்கள் முரளி.

    மும்பை நாதன்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by முரளி View Post
    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நாதன்.

    உங்களது சிறுகதை படிக்கும் ஆர்வமும், ஆவலும் , .... யு ஆர் கிரேட்.

    உங்கள் கருத்து , எனக்கு ஒரு புது உற்சாகத்தை கொடுக்கிறது. டானிக் மாதிரி. மிக்க நன்றி.
    ஆமாம் போங்க முரளி.

    உங்களுக்கென்ன சொல்லீட்டிங்க.

    பெருமையாய் என் மனைவியிடம் காட்டினேன்.

    கிடைத்த கமென்ட்:

    " சிலர் சிறந்த கதைகள் எழுதி நல்ல பெயர் பெறுவார்கள்.

    சிலர் கதைகளுக்கு பின்னூட்டங்கள் போட்டே நல்ல பெயர் வாங்கி விடுவார்கள்.

    இதில் நீங்கள் எந்த வகை என்று உங்களுக்கெ தெரியும். "

    மும்பை நாதன்

  10. Likes முரளி liked this post
  11. #10
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    அடாடா! என்ன ஒரு வேதனை வாட்டுது மும்பை நாதனை? என்னால் தானே இந்த சோதனை?

    வருத்தப் படாதீர்கள். வீட்டுக்கு வீடு வாசல்படி. எங்க வீட்டிலேயும் இதே கதை தான். ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு. அப்போ நானும் மும்பையில் தான் வாசம். இப்போ என் நிலைமை இன்னும் மோசம்.

    என் தர்ம பத்தினி முன்பெல்லாம் என்னுடன் ஏதாவது பேச வேண்டுமானால், என் பையனை கூப்பிடுவாள் முதலில்.

    “கண்ணா ! சமையலறையிலிருந்து கொஞ்சம் தட்டும், கரண்டிகளும் எடுத்து கொண்டு வா. அப்பாவுடன் நான் கொஞ்சம் பேசணும்”. என் பையனும் தட்டாமல் எடுத்துக் கொண்டு வருவான்.

    உங்க பாடு தேவலைன்னு நினைக்கிறேன். பேச்சு பேச்சோட தானே இருக்கு!

    நான் சொல்வேன், அடிக்கடி, 'இந்த கதையை இன்னும் கொஞ்சம் நல்லா எழுதியிருக்கலாமோ? '. அதற்கு என் மனைவி சொல்வது இதுதான் “ இதுக்கு தான் நீங்க எழுதின கதையை நீங்க முதல்லே படிக்கனும்ங்கறது."

    அதனாலே, இப்போவெல்லாம், கொஞ்ச நாளா, கதை மட்டமாக இருந்தா, என் மனைவி எழுதினா மாதிரி பத்திரிகைக்கு போட்டுடுவேன். திட்டு கொஞ்சம் அவங்களுக்கும் விழட்டுமே. அதிலே ஒரு ஆத்ம திருப்தி.

    அரசியல்லே இதெல்லாம் ஜகஜமுங்க !.
    Last edited by முரளி; 04-09-2013 at 06:16 AM.

  12. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    என்னமாவெல்லாம் யோசிக்கிறீங்க !

    மிகுந்த அனுபவஸ்தராய் இருக்கிறீர்கள் முரளி.

    ஆனாலும் எனக்கு ரொம்ப ஆறுதலாய் இருக்குங்க.

    மும்பை நாதன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •