Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 34

Thread: நெஞ்சை நெகிழ்த்தும்/கிள்ளும்/அள்ளும் குறுந்தொகையும் பிறவும்....

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    நெஞ்சை நெகிழ்த்தும்/கிள்ளும்/அள்ளும் குறுந்தொகையும் பிறவும்....



    நண்பர்களே,

    சங்க இலக்கியங்கள் மீதான எனது காதல் பல காலமாக நீடித்து நிலைத்து நிற்பது ;ஆழமானது ;
    இன்று 'பக்தி 'பூர்வமானதும் கூட!மிக வியக்கத்தக்க ,உயர்ந்த சிந்தனைகளை, உன்னத உலகியல்
    மரபுகளை உள்ளடக்கிய பெருஞ் செல்வம் அது!அகம், புறம் எனும் இரு பெரும் பிரிவுகளிலுமே
    இவை யாவற்றையும் காணலாம் - அதுவும் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே
    அற்புதமான வடிவில் யாத்து சீரிய முறையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளமை,
    அதிலுள்ள சிரமத்தையும் சிரத்தையையும் கருதினோமெனில், பிரமிப்பையும் மலைப்பையும் தோற்றுவிப்பனவே!!
    என் உள்ளம் கொள்ளை போனது அகத்துறைப் பாக்களில்தான் - அதிலும் குறிப்பாக குறுந்தொகையில்!!!
    நேர்த்தியான கட்டமைப்பு,சிறந்த உள்ளடக்கம், இயல்பான உவமைகள், செறிவான சிந்தனை, நுண்ணிய உணர்வுகள்....
    அனைத்தையும் கொண்டவை குறுந்தொகைப் பாடல்கள்! அத்துனையும் சிறந்தவையெனினும் அதில் ஒரு முத்து..

    காதலனுக்காக காத்திருக்கும் காதலி; தன் உள்ளம் நிறைந்தவன், உணர்வில் பூத்தவன், உள்ளுள் உறைந்தவன் எனினும்
    காத்து, காத்து நின்றதில் மனம் வெதும்பிப் போகின்றனள் - அவளன்றி அவள் துயர் யாரறிவர் ?
    சினத்தில் வெடித்துச் சிதறும் துயரம் கப்பிய வார்த்தைகளே இவைகள் எனும் போதிலும் , தன் தலைவன் நிலை தாழக்
    கூடாது எனும் கவலையே அவளுக்கு! - நிந்தனையிலும் கூட அவளது சிந்தனைப் போக்கைப் பாருங்களேன்...!


    பாடல் இதோ நான்கே வரிகளில் :

    உள்ளின் உள்ளம் வேமே ; உள்ளா
    திருப்பின்எம் அளவைத் தன்றே ; வருத்தி
    வான் தோய்வு அற்றே காமம் ;
    சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.


    பொருள் இதுதான் -

    என் தலைவரை நினத்தால் என் உள்ளம் கொதிக்கும் - வேகும்! நினைத்தால்தானே வேகிறது மனம் என நினைக்காமல்
    இருக்கலாம் எனில் , அய்யோ!, அது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக அல்லவோ அமைந்துள்ளது! என் காதலோ
    ( காமம் என்பது அன்றைய வழக்கில் இன்றுள்ள காதலையேக் குறித்தது ) வானம் அளவியது போல் பெரிதாயுள்ளது!
    என் இவ்வல்லலுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான் - என் மனம் மருவிய தலைவன் சான்றோன் அல்லன்..!!!

    கடைசியில் போட்டாளே ஒரு போடு..!

    சான்றோன் - அன்பு, நாண்,ஒப்புரவு,கண்ணோட்டம்,வாய்மை என அய்ந்தும் கொண்டவன்.

    தன் தலைவன்
    1. நீண்ட காலம் வாராமல் இருந்தமையால் அன்பில்லாதவன் ;
    2. தகுதியுடன் ஒழுகிக் கொள்ள கருத்தில்லாமையால் நாணமில்லாதவன் ;
    3. விருந்தாற்றும் உலகியலை மறந்தமையால் ஒப்புரவில்லாதவன் ;
    4. என் துயரம் தணிக்கக் கருதாமையால் கண்ணோட்டமில்லாதவன் ;
    5. இன்ன காலத்தில் வருகிறேன் என்றபடி வராமையால் வாய்மையில்லாதவன்.

    இந்த குணங்களைத் தன்தலைவன் பெற வேண்டும் எனும் ஆதங்கமே அவளது வார்த்தைகளில் வழிந்தோடுவது...!!


    அன்பன்,
    சுந்தரம்

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காதலரைப் பிரிந்த வேதனையை எவ்வளவு துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன பாடல்வரிகள். அழகிய குறுந்தொகைப் பாடலொன்றை தெளிந்த விளக்கத்தோடு எடுத்துக் காட்டியமைக்கு நன்றி. காதலன் சான்றோன் அல்லன் என்று காதலி கூறுவதற்கான காரணங்களை அவள் தரப்பிலிருந்து பட்டியலிட்டமை சிறப்பு. பாடலோடு பாடலாசிரியரையும் குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இலக்கியச் சுவையை இனிதாய் ருசிக்கத் தந்த தங்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டும்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    குறுந்தொகை பிடிக்குமா சுந்தரம் ,உங்களுக்கு?
    அருமை!!
    இன்றும் வியக்கத்தக்க மனவோட்டங்கள் அப் பாக்களில் விரவிக்கிடக்கும் !!

  4. #4
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    காதலரைப் பிரிந்த வேதனையை எவ்வளவு துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன பாடல்வரிகள். அழகிய குறுந்தொகைப் பாடலொன்றை தெளிந்த விளக்கத்தோடு எடுத்துக் காட்டியமைக்கு நன்றி. காதலன் சான்றோன் அல்லன் என்று காதலி கூறுவதற்கான காரணங்களை அவள் தரப்பிலிருந்து பட்டியலிட்டமை சிறப்பு. பாடலோடு பாடலாசிரியரையும் குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இலக்கியச் சுவையை இனிதாய் ருசிக்கத் தந்த தங்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டும்.
    தங்களின் பின்னூட்டத்திற்கு முதலில் நன்றி !
    அந்தப்பாடல் , அய்யன்மீர் , அவ்வை யாத்தது ; குறுந்தொகையில் 102-ம் பாடல் ; பாலைத்திணையைச் சேர்ந்தது !
    ஒன்று இங்கு சொல்லிடல் வேண்டும் ; நான் தமிழை முறையாகப் படித்தவன் இல்லை ; என் தாய் மொழி மீது அளவிடற்கரியபற்று
    கொண்டவன் ; தமிழ் அனைவருக்கும் உரித்தானது - குறிப்பாக , இன்றைய தமிழாசிரியர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல - என்ற
    பார்வை கொண்டவன் !
    தமிழை தமிழுக்காக மட்டும் படிப்பவன் ; அதில் எனக்குப் பிடித்த , என் பார்வையில், என் மனதுக்குப் பட்டதில் - பாமர வழியில் - சிலவற்றைப்
    பகிர்ந்து கொள்கிறேன் ; அவ்வளவே !

  5. #5
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    பரணின் ஒப்புமையில்லா உவமையின் உச்சம்...

    நண்பர்களே,

    அடியேன் என்னைக் குறுந்தொகைக் ’காதலன்’ எனவே என்னைச் சொல்லிக்கொள்ள பெருவிருப்புடையவன்..!!!

    இன்னும் நெருக்கமாக ‘கபிலக் காதலன்’ எனச் சொல்லிக்கொள்ள விழைபவன்..!
    அவன் ‘ நின்ற சொல்லன்’ அன்றோ..!!

    சங்க இலக்கியத் தொகுப்பு ஒரு பெரும் பெட்டகம்! அதனுள் இருக்கும் செல்வத்திற்கு மதிப்புரைக்க இயலுமா!
    அச்செல்வத்துள் எல்லாம் தலையாயது நானூறு அகவற் பாக்களைக் கொண்ட குறுந்தொகை !
    தலையாயது ஏன்..? உலகத்தை உயிர்ப் பொருளாக்கி இயக்கிச் செல்லும் ஆண்-பெண் காதலுறவின் அத்துனைப்
    பரிமாணங்களையும் கவின் நிறை வனப்பால் சித்திரமாக்கியிருப்பதுதான்!

    " யாயும் ஞாயும் யாரோ கியரோ " கவும் " யானும் நீயும் எவ்வழி அறிதும் " மாயும் இருந்த இருவர்
    மனம் கலப்பது இயற்கையின் விதியன்றோ..! கூடிப்பழகுதற்கு தடைகள் பல ; ஆயினும் கருத்தொருமித்த
    காதலர் களித்து மகிழ்ந்திருந்தனர் - எப்போதும் உடனிருத்தல் முடியுமா..!? அவ்வப்போது பிரியவும் நேரிடுகிறது...!

    காதலன் அருகில் உள்ளபோதெல்லாம் மங்கையின் மேனி தங்கம்தான்!; அவன் தொட்டு துய்க்கும் போதோ அங்கமெல்லாம்
    பிரகாசிக்கிறது..!!ஆனால் அவன் பிரிந்து சென்றவுடன்... இதென்ன.. மேனி வனப்பும் ஒளியும் எங்கு போயிற்று..!
    அவளை நோய் ஏதும் தொற்றிக் கொண்டதா..? ஆம்!..நோயேதான்..! பசலை நோய்! தலைவனின் பிரிவாற்றாமை
    தலைவியின் நிறத்தையே மாற்றிடும் வல்லமை கொண்டதாய் இருக்கிறது ; வேறுபட்ட அந்நிறமே 'பசலை'!
    காதலன் தீண்டும்போதெல்லாம் அருகில் வர அஞ்சும் பசலை அவன் நீங்கியவுடன் ஒட்டிக் கொள்கிறது..!
    இவ்விந்தையை ' பரணன் ' நான்கே வரிகளில் நம் மனத்திரையில் பதிக்கும் பாடல்தான் இது:



    ஊருண் கேணி உண் துறைத் தொக்க
    பாசி யற்றே பசலை, காதலர்
    தொடுவுழி தொடுவுழி நீங்கி
    விடுவுழி விடுவுழி பரத்தலானே


    - குறுந்தொகை


    இதற்கு அவன் காட்டும் உவமை நயந்தான் என்னே..!

    இயற்கையைத் தெய்வம் எனக் கொண்டாடியவர்கள் அதன் கூறுகளை எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளனர்!
    நீர்நிலைகளில் பாசி இருத்தல் இயல்பு!
    ( இப்போது எங்கேயா குளங்கள்...!? எல்லாம்தான் 'ப்ளாட்' ஆகிவிட்டதே..!எனக் கேட்பது காதில் விழுகிறது அன்பர்களே..!)
    உண்ணும் நீர்நிலைகளில் பாசி இருந்தால் ஊரார் அதனைக் குடிக்கும்போது அதனை விலக்கிக் குடிப்பர் ;
    அவர் விலகியவுடன் அது மீண்டும் ஒட்டிக் கொள்ளும்!
    காதலியின் பசலை நோயும் இப்பாசியை ஒத்ததே எனப் பகர்கிறான், நம் பாவலன்!

    தொக்க - கூடியிருக்கின்ற , பரத்தலான் - பரவுவதால் 'பரத்தலான்' ஆயிற்று.

    அன்பன்,
    சுந்தரம்


    My earnest wish and appeal is that Tamils should not only study our ancient treasures , such as Sangam Literature , but also make efforts so that these treasures and the literary criticism on them are available in other major languages , say in French , in Chinese , in Spanish...

    I hope this will not just remain my dream...

    To induce the esteemed readers , I think it may not be out of place to give quotes from learned and reputed researchers...


    On the above poem a keen and an interesting observation :


    "Paranar's contribution to Kurundohai is very slender , and chiefly by reason of the brevity of the stanzas , does not show him in a very favourable light on the whole. But there is one of them that make ample amends by a lightning- flash, as it were , of the imagination . The paleness on the heroine's complexion is compared to the moss that covers the surface of still water. When she is happy with the lover , the paleness shrinks away , leaving the natural healthy brown of the complexion . But when she begins pining for him , the paleness creeps back . Like the persitent moss , we find the pallor

    " With every touch gives away
    And back with each estrangement spreads . "


    It might be conceit , but a very brilliant one , and wholly untranslateable owing to the charm of the sound arrangement with the original .

    " Thoduvili toduvili ningi
    Viduvili viduvilip paratta lane . "


    These two lines may safely be ranked as the crest of all Paranar's achievements . "
    Last edited by Sundaram77; 24-08-2013 at 12:39 PM.

  6. Likes கீதம் liked this post
  7. #6
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    ஓ!!அருமை அருமை!!

  8. #7
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    ஈராயிரம் ஆண்டுகள் கடந்தாலென்ன....

    நண்பர்களே,

    குறுந்தொகைக்கு இன்று விடை கொடுத்து கொஞ்சம் பொதுவில் பார்ப்போமே..........

    சங்க இலக்கியம் பெரும்பாலும் சாதாரணமக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் சித்தரிக்கும்
    ஒப்பற்ற இலக்கியம் ஆகும் . சங்ககாலத்தின் துவக்க நிலையிலையே இயற்கையின் உன்னதம்
    அறியப்பட்டு பெரிதும் போற்றப்பட்டது ; வணங்கப்பட்டது !

    மேலும் நற்சிந்தனைகளும் உயர்வான நெறிமுறைகளும் அச்சமூகத்தில் பொங்கும் ஊற்றென வெளிப்படலாயின ;
    இவற்றின் காப்பாளார்களாக சான்றாண்மை மிக்க பெரும்புலவர்கள் அமைந்தனர் . அவர்கள் அள்ளித்தந்தக்கருத்துச் செல்வம்
    இன்றைய வாழ்க்கைக்கும் ஏற்றவையாய் இருப்பது வியப்புதான் !
    இப்படியானப் பாடல்களில் சிலவற்றையேனும் சொல்லவேண்டும் எனும் என் அவாவே இவ்விடுகைக்குக் காரணம் !

    இந்தப்பாடல் நமக்காகவே பாடப்பட்டுள்ளது போல் தெரிகிறது...!
    நாம் எப்போதும் சொன்னதைச் 'செய்வதும்' , ' செய்வதை'ச் சொல்லும் சத்தியப்புத்திரர்கள் அல்லவா !
    போகட்டும்...

    இன்றைய நிலை என்ன ? எந்த அலுவலும் ஒரு சிபாரிசை நாடியே நடத்திட இயலும் எனும் அவலம் !
    ' திருமிகு சென்னைப்' பட்டணத்திற்கு அந்தக் காலத்தில் ஆம்னி பஸ்கள் எல்லாம் இல்லை.
    ஆனால் இப்போதோ ( 1969-70 க்குப்பிறகுதான் இந்நிலைமை ) ஒரு நாளைக்கு
    சென்னை செல்லும் பயணிகளில் பாதிப்பேர் ஒருவரின் பரிந்துரை ( சிபாரிசுதான் - வேறென்ன ? )க்கு
    பயணிப்பவர்களே...! இவர்களில் பெரும்பாலோர்க்கு வெட்டியான அலைச்சலும் , பணச்செலவும் , துயரமும் தான் மிஞ்சும்!?
    இவை யாவுக்கும் காரணம் இதுவெனப் பலர் அறியார் ! ஆனாலும் ஒரு தமிழ்ப் பெரும் புலவனுக்கு இது தெற்றென விளங்கியிருக்கிறது...
    அவன் சொல்கிறான் : முடியாததை அல்லது முடிக்க மனம் இல்லாத ஒரு செய்கையினை முடிப்பேன் எனக் கூறிக்
    கொள்ளலும் , முடியக்கூடியதை ஒருவன் வேண்டும்போது , அதை முடிக்க இயலாது என இறுக்கஞ் செய்வதும்
    இரப்போரை - நம் காலத்தில் ஒரு சிபாரிசு எனக் கொள்வோமே - அலைக்கழிக்கச் செய்தலே பெருங் காரணம் ;
    இச்செயல் அவர்களின் புகழைக் குறைக்கவே செய்யும் என்றும் மேலும் கூறுகின்றான் .


    ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
    ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
    ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
    ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
    இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;
    இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
    புகழ்குறை படூஉம்


    அப்புலவன் இப்பாடலைத் துவங்கும்போதே நடைமுறைக்குப் பெரிதும் ஒவ்வும் ஞானபோதனையுடன் ஆரம்பிக்கிறான்.
    ' ஒருவரால் இயலக்கூடிய செயலை இகலும் எனப்பகர்தலும் ...அதேபோன்று , ஒருவர்க்கு இயலாத ஒரு
    வினையை 'இயலாது இச்செயல்' என உண்மை நிலை உரைத்தலும் மேலாண்மைப் பண்புகளே ஆகும் என்கிறான் .

    இப்பாடலை யாத்தவன் ஆவூர் மூலங்கிழார் என்பான் . இவ்வறவுரையை யாருக்குச் சொல்கிறான் தெரியுமா , நண்பர்களே - நன்மாறன் எனும் பாண்டிய மன்னனுக்கு... அறவுரை இருக்கட்டும் ...
    சான்றாண்மையும் பெருந்தன்மையும் மிக்க இவனின் இன்னொரு பக்கத்தைப் பார்ப்போமா !
    அப்பாடலில் அவன் மேலும் சொல்கிறான் :
    ' என் போன்றோர்க்கு எக்காலத்திலும் உன் முன்னோர்கள் செய்ய நினைக்கா இவ்வலைக்கழிப்பை
    நீ எனக்குச் செய்தலால் உனக்கு நேர்கின்ற பழி உன் மக்கள் மீது விழாது இருக்கட்டும் ; அவர்கள் நோயின்றி வாழட்டும் ' என நெஞ்சார வாழ்த்துகிறான் ;


    அதனால்,
    நோயிலர் ஆகநின் புதல்வர்


    அம்மட்டோ ?!
    தனக்கு ஈனாத நன்மாறனின்
    எதிர்வரும் நாட்களும் சிறப்பாக இருக்க வேண்டுகிறான் !

    சிறக்க, நின் நாளே!

    எவ்வளவு உயரிய நெஞ்சம் ! எவ்வளவு உயரிய வாழ்க்கை நெறிமுறை அப்பெரும் புலவனுக்கு கைவரப்பெற்றிருக்கிறது !!
    தன் தாழ் நிலையை முற்றிலும் மறந்து அடுத்தவன் - அதுவும் தனக்கான கௌரவத்தை மறுக்கும் ஒருவனது
    - உயர்நிலையை விரும்பும் அவனை எங்கே இருத்துவது !

    தன் இல்லத்தைப் பற்றியும் இல்லக்கிழத்தியைப் பற்றியும் அவன் கூறுவது கல்லையும் உருக்கும் ;
    ஆனால் ,அப்பாண்டிய மன்னனை இவ்வவலம் உருக்கவில்லையே...!?


    யானும்,
    வெயிலென முனியேன், பனியென மடியேன்,
    கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,
    நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
    மெல்லியல் குறுமகள் உள்ளிச்
    செல்வல்


    வெளியே மழை கொட்டும்போது அம்மழை வீட்டிலுள்ளும் கொட்டுமாம் ; வெயிலையோ , பனியையோ அது தடுக்காதாம் ;
    காற்றை மட்டிலும் இலேசாக அடைக்குமாம் ; கல்லில் ஆன அவ்வீட்டில் கல்லைப்போல் இறுக்கமாய் இருப்பது வறுமை மட்டும்தானாம் !!!

    ஆயினும் அவன் இல்லக்கிழத்தி இறுகியவள் அல்லள் - மெல்லிய சாயல் உள்ளவளாக்கும் ; அவளின்
    நெற்றியில் காணும் ஒளி அவளின் அறிவொளியாக்கும் ; மிக்க கற்புடையவள் ! அவளது ஒரேயொரு
    அணிகலன் அவளது நாணம் மட்டுமே ; பெரும் பரிசிலோடு வருவேன் என நினைத்துக்கொண்டிருப்பாள் ;
    அவளை உள்ளிச் செல்கிறேன் !
    என முடிக்கிறான் தன் கவிதையை...!!

    கொடிது , கொடிது வறுமை கொடிதென்றாள் , அவ்வை பிராட்டி ; ஏனெனில் , மனித மாண்புகளை முற்றாகத் தகர்க்க வல்லது அது !
    ஆயினும் இத்தமிழ்ப் புலவனிடம் அவ்வறுமைகூட தோற்றோடுகிறதே...!
    வறுமையின் வாட்டத்திலும் அவனின் மனப்பக்குவமும் மாண்பும் எண்ணி எண்ணி வியப்புறக்கூடியதல்லவா...

    முழுப்பாடல் :

    ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
    ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
    ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
    ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
    இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;
    இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
    புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
    அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்
    சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,
    நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்,
    வெயிலென முனியேன், பனியென மடியேன்,
    கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,
    நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
    மெல்லியல் குறுமகள் உள்ளிச்
    செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!


    ஒல்லுவது - முடிவது
    அனைத்தாகியர் - அத்தன்மையில் சேர்ந்தது
    குயின்றன்ன - இழைத்தாற் போன்று
    முனியேன் - வெறுக்கிலேன்
    வளி - காற்று
    செல்வல் - செல்கிறேன்


    அன்பன்,
    சுந்தரம்

  9. #8
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    அருமையாகச் செல்கிறது திரி

  10. #9
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    அருமையாகச் செல்கிறது திரி
    திரு.ஜான், நீங்கள் இன்னும் பார்க்கவில்லையோ என நினைத்திருந்தேன்...பின்னூட்டத்திற்கு நன்றி !
    ஆனால் , அடுத்த இடுகையைப்பற்றி என்ன சொல்லப்போறீங்களோ...
    எதுவாயினும் இன்னும் கொஞ்சம் விரிவாச் சொல்லுங்களேன்...
    அன்புடன்,
    சுந்தரம்

  11. #10
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0
    மேலதுதான்...இரண்டாம் தடவை ஆகி விட்டது...

  12. #11
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    எனக்கு பாடல்கள் வாசிக்கப் பிடிக்கும் ..சங்க இலக்கியத்தில் அவ்வளவு வல்லமையோ புலமையோ இல்லை எனக்கு !!
    தொடருங்கள்...உங்கள் பணி சிறந்தது

  13. #12
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    ஈஎன இரத்தல் மட்டுமா கேவலம்....இல்லையே...!?



    நண்பர்களே,
    நான் ரொம்ப நாட்களாகவே இவைகளைச் சொல்லவேண்டும் என நினைத்ததுண்டு...
    ஆனால் எத்தனை பேர் விரும்புவர் என்பதும் யாருக்காக இவை சொல்லப்பட நினைக்கிறோனோ அவர்களை இது
    சேராது என்ற நிதர்சனமும் என்னை இவ்வளவு காலமும் கட்டிப்போட்டது...இருந்தும் இப்போது இஃது...
    படிப்பவர்கள் அமைதியாய் சிந்திக்க வேண்டும் எனும் வேண்டுகோளை மட்டும் துவக்கத்திலேயே சொல்லிக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன...முன்னாட்களில் எவ்விதம்...

    இன்றைக்கு நம்மில் பலர் நியாயமன உழைப்புக்கு அஞ்சுபவர்களாகவே ஆகி விட்டோம்.முன்னர் எல்லாம் சில மேடைகளிலாவது ஜப்பானைப் பார் , ஜெர்மனியைப் பார் , அங்கெல்லாம் மக்கள் எவ்வாறு தேனீக்கள் போல் சுறுசுறுவென உழைத்து முன்னேறுகின்றனர் ; நாம் அப்படியெல்லாம் முன்னேற வேண்டாமா !? என்றெல்லாம் சொல்லுவர்.ஆனால், இப்போதோ...ம்ஹூம் ...அந்தப்பேச்சுகளையேக் காணொம்! மாறாக அதைத் தருகிறோம் , இதைத் தருகிறோம் ...இலவசமாய்...என்பதுதான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பேச்சுகள்...மக்களும் அவற்றையெல்லாம் ஏற்கும் மனநிலைக்கும் தள்ளப்பட்டுவிட்டனர் என்றே நினைக்கவும் தோன்றுகிறது...பொதுவில் நாம் கையேந்தி நிற்பவர்களாக ஆக்கப்பட்டு விட்டோம்...
    ஆம்...நண்பர்களே, நாம் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டிருக்கிறோம்...அறிந்தோ , அறியாமலோ...

    ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் , நம் பாட்டன்களுக்கு பாட்டன்மார் எப்படியிருந்தனர்? அவர்களது சிந்தனையோட்டம் எப்படியிருந்தது ? தினசரியான , நடைமுறை வாழ்க்கைப் பற்றிய அவர்கள் எண்ணம் யாது ? - சற்று பின்னோக்குவோமா...

    இரப்பது பற்றி , அதாவது தன் தேவைக்கு அடுத்தவர் தயவை எதிர்பார்ப்பதைப்பற்றி , அவர்கள் தீர்க்கமாகவே இருந்தனர் என்பது தெற்றென விளங்குகிறது ! இரப்பது என்றும் இழிவு என்றுதான் அவர்கள் நினைத்தனர் ! மேலும் இவ்வெண்ணப்போக்கைக் கட்டிக்காக்கவும் சில பேராசான்கள் முனைப்பும் காட்டியிருக்கின்றனர் !

    ஏதோ சில நிலைகளில் கையேந்தல்/இரத்தல் சரியே என தமிழ் மக்கள் மூலைச்சலவை செய்யப்பட ஆரம்பித்த நேரத்திலேயே வள்ளுவன் வெகுண்டெழுகிறான் ; இரத்தல் எந்நிலையிலும் கூடாது என ஓங்கி அறிவிக்கிறான்...
    இப்படிச் சொல்கிறான் அவன்:


    " நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று. "


    எப்போதும் யாரிடமும் எதுவும் வாங்காதே ; ஆனால் , கொடுப்பதெனில் நன்றென்கிறான்...
    என்னாளும் இரவாதே ; இலவசங்களைப் பெறாதே என்கிறான் வள்ளுவன் ! ஆனால் , அவன் வழி வந்தவர் எனச்சொல்லிக்கொள்வோரோ, அவன் சிலை வைத்தால் மட்டும் போதும் , அவன் சொல்படி நாமும் மக்களும் நடக்க வேண்டியதில்லை என்றுதான் இன்று அரிசி இனாம் , தொலைக்காட்சி இனாம் , மடிக்கணிணி இனாம் என்றெல்லாம் சொல்லி மக்களையும் ஏற்கவைத்து இந்நாட்டை ...என்னவென்று சொல்வது , அன்பர்களே ...நீங்களே யூகித்துக் கொள்ள வேண்டியதுதான்....இந்நேரத்தில் இதையும் சொல்லத்தான் வேண்டும்...

    'தொல்காப்பியம் ' - இதையும் விட்டு வைக்கவில்லை இவர்கள்...இதற்கும் உரை எழுதப்போய் விட்டார்கள்...
    I always consider this as the greatest ever insult on Tamil, Tamils and the great work . To write comments and notes on
    such an all pervasive - on every aspect of language - masterpiece , well , you have to be a Philologist , first and last ; you have to be an Etymologist of the first order - par excellence ; and above all you have to be a Grammarian , in and out ! Being none of these , how one
    can accept this ! Whenever I think of this I'm always reminded of this too...' Fools rush in where angels fear to tread ' !


    இதில் வேடிக்கை என்னவெனில் இதிலும் நாற்பது லட்சம் பார்த்து விட்டனராம்; இருவது லட்சம் தனக்காம் - மீதம் தன் ஆளுகைக்குள்ள ஒரு அறக்கட்டளைக்காம்... எதிலோ படித்ததுதான்...

    போய்த்தொலைகிறது...ஈவதும் ஏற்றலும் பற்றி , ஓர் சங்கத்தமிழ் பெரும்புலவன் , ' கழைதின் யானையார் ' என்பார் என்ன சொல்கிறார் எனப்பார்ப்போமே...புறநானூற்றில் 204 - வதுப் பாடல் இவரதுதான்.
    ' கொடு என யாசிப்பது இழிவே ; நான் தரமாட்டேன் ; எனக்கு எதுவும் எப்போதும் கொடுத்துப் பழக்கமில்லை எனச்சொல்வது அதனினும் மிக இழிவானது . இதற்கு மாறுபட்ட நிலையில் , இந்தா , பெற்றுக்கொள் என்பது உயர்வே ; ஆனாலும் , அதனிலும் உயர்ந்த பண்பாடு, சீர்மையான மனப்பக்குவம் - தான் முயற்சித்து , உழைத்துக் கிடைக்காத ஒன்றை வேண்டாம் என மறுப்பது ...'மிகக் கூர்மையுடன் யாத்துள்ளார் இக்கவிதையினை...


    அதன் முத்தான முதல் நான்கு வரிகள் இவைதான்...

    "ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
    கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
    கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;"


    இப்படிச் செல்லும் அவர் பாடலில் இன்றளவும் - ஏன் , என்றைக்குமேதான் - நின்று நிலைக்கும் சில யதார்த்தங்களையும் எளிதில் மனதில் தைக்கும்படி உரைக்கிறார் ; தண்ணீர்த் தாகம் எடுப்பின் ஒலியும் , நுரையும் பொங்கி , தெளிவான நீர்ப்பரப்பைக் கொண்ட கடல்நீரை யாரும் பருகுவதில்லை ; அதேவேளையில் , ஆறாம் அறிவற்ற விலங்குகள் கூட , சேறு நிறைந்ததாயினும் உண்ணுதற்குரிய சிறிய நீர்நிலைகளை அணுகி அடிக்கடி அந்நீரைப்பருகுவதால் அக்குளங்களில் உள்ள வழித்தடங்கள் பலவே ; அதே போன்றே , நாம் செய்த பணிகளுக்கு உதவியைப் பெறினும் அதனையும் செல்வம் நிறைந்து பண்பு குறைவானவர்களிடம் பெறாது,
    செல்வம் சிறிதே பெற்றவராயினும் குணத்தில் , பண்பில் , ஒழுக்கத்தில் சிறந்தோரிடமிருந்தேப் பெற வேண்டும் எனச் சொல்கிறார். இன்னும் பல அந்தப்பாடலில் இருப்பினும் இதுவரைப் போதும் ...


    முழுப்பாடல் கீழே :


    "ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
    கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
    கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
    தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
    உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;
    ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,
    சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
    உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
    புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
    உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
    புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்
    கருவி வானம் போல
    வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே."


    பாடியவர்: கழைதின் யானையார்.


    இமிழ் - ஒலிக்கின்ற
    நீர் மருங்கின் - நீர் நிலையிடத்தில்
    அதர் - வழி
    புள் - பறவை
    புலவேன் - வெறுக்க மாட்டென்


    அன்பன்,
    சுந்தரம்
    Last edited by Sundaram77; 29-08-2013 at 06:18 AM.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •