Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 34 of 34

Thread: நெஞ்சை நெகிழ்த்தும்/கிள்ளும்/அள்ளும் குறுந்தொகையும் பிறவும்....

                  
   
   
  1. #25
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    துன்பத்திற்கு யாரே துணையாவார்...



    நண்பர்களே !
    ஒரு குறுந்தொகைப் பாடல் தோற்றுவிக்கும் எண்ணங்கள்...

    இந்த மாந்தரினம் சூழலின் கைதியாகத்தான் என்றும் இருந்துள்ளது.டார்வினின் பரிமாண வளர்ச்சிக் கோட்பாடுபடி,
    நம்மினம் அமீபா எனும் மிகச் சிறிய உயிரியிலிருந்து இன்றுள்ள ஆறறிவு மாந்தனாக வளர்ந்துள்ள நிலைவரை சூழல்
    மிக முக்கிய பங்கினை வகித்து வந்துள்ளது ; இன்னும் சொல்லப்போனால் தலைமை இடம் கூட அதற்குண்டு எனத்
    துணியலாம் ! இல்லையெனில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் ஆண்டுகள் வளர்நிலை கொண்ட நாம் பேசும் மொழிகள் கூட
    அதற்கு அடிபணிந்திருக்க முடியுமா..!?

    ஒரு சிறு எடுத்துக்காட்டு பார்ப்போமா..

    மேற்கத்திய நாடுகளில் ஒருவரை சிறப்பாக வரவேற்பதை ' warm welcome ' என்றே கூறுகின்றனர் ; ஏனெனில் , புவியின்
    வட அரைக் கோளத்தில் பெரும்பாலும் நிலவும் சகிக்க இயலா குளிருக்கு இதமான வேனில் பருவம் பெரும் வரவேற்பைப்
    பெறுவது இயல்புதானே ! அதன் பாதிப்பே ' warm welcome ' மும் ! இதனையே தமிழகச் சூழலில் கற்பனை செய்து
    பாருங்களேன்... ' சூடான வரவேற்பு ' விபரீதமான எதிர்மறைப் பொருளைத்தானே காட்டும் ; காரணம் , எளிதானது -
    நம் சூழலுக்கு வெப்பம் இனிப்பானதல்ல !

    இவ்வாறே காலத்தின் இயல்புக்கும் நம் உள்ளம் உள்ளும் எண்ணங்களுக்கும் இயைபுண்டு. நம் அனைவரின் மெய்யுள்ளும்
    உயிரியல் கடிகை ( biological clock ) இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. பகற்போழ்தில் பல பணிகள் ; மாலைப்
    போழ்தில் ஓய்வும் தனிமையும் களிப்பினை நாட ஏதுவாகிறது. தோழமையான அருகாமையை எந்த மனம்தான் விழையாது !

    அதிலும் காதலில் கட்டுண்டு உடலும் , உள்ளமும் உயிரும் ஒன்றிணைந்த இருவர் பிரிந்திருப்பின் மனச்சோர்வு மறையுமா !?
    ஆடவருக்காவது உரமான மனம் ; தனிமை இனிமையாகாவிடினும் சமாளித்துவிட முடிகிறது. ஆனால் இள நங்கைக்கு...
    அதிலும் , இல்லமே உலகமாய் உள்ளவளுக்கு துயர்தானே !


    இதோ...! ஒளிவிட்ட ஞாயிற்றுச்சுடர் அந்திப்போழ்தைச் செக்கர்வானக்கிவிட்ட பின்னர் மறையப்பார்க்கிறது ! அவ்வொளி
    மங்கும் நேரத்தில்தான் துணையை மனம் விரும்பி நாடுகிறது ; ஆனால் , துணை இல்லா நிலை ! துன்பம் மிகுகிறது !!
    அதனை ஈடுகட்டவே முல்லை மலர்ந்து மணம் பரப்புகிறது எனக் கூறுவோரும் உளர் !ஆனால் , இவ்வாறு கூறுபவர்கள்
    மதியிழந்தவர்களாகத்தான் இருத்தல் வேன்டும் !! வேறு எப்படித்தான் சொல்வது அவர்களைப் பற்றி !!!
    சலித்துக் கொள்கிறாள் தலைவி .


    காலவியல்புகளுக்கு ஏற்ப உள்ளமும் திரிபு கொள்ளும் ; மாறாக , சில வேளைகளில் , உள்ளத்தின் இயல்புக்கேற்பவும்
    காலவியல்புகள் மாறுபட்டுத் தோன்றலுங் கூடும். உள்ளத்தின் உணர்வாற்றல் , காலத்தின் ஆற்றலைவிட நம் தலைவிக்கு
    மிகுந்திருக்கிறது - தனிமை தரும் வேதனை ! ஆதலால், காலம் கூட அவளுக்கு மாறித் தோன்றுவதில் விந்தை இல்லை !
    இம்மாலைக் காலம் மட்டும் அவளை வருத்தவில்லை !
    அவளின் கூற்றைத்தான் பாருங்களேன்...!

    ' பெரும்புலர் விடியலும் மாலை ' யாம் !
    விடியும் புலர்காலைப்பொழுதும் அவளுக்கு மாலை நேரமாய் தோற்றுகிறாம்...பிதற்றுகிறாளா...!

    இல்லை , நண்பர்களே , இல்லை !
    துணையில்லாத நினப்பே அவளை வருத்துவதால் , பக்ற்காலத்தையும் அவள்
    வேதனை விளைவிக்கும் மாலையாகவேக் காண்கிறாள் ...!


    முழுப்பாடல் :

    சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்
    தெல்லறு பொழுதின் முல்லை மலரும்
    மாலை என்மனார் மயங்கி யோரே
    குடுமிக் கோழி நெடுநக ரியம்பும்
    பெரும்புலர் விடியலு மாலை
    பகலும் மாலை துணையி லோர்க்கே.


    தோழியை நோக்கித்தான் சொல்கிறாள் !
    நம் காதிலும் விழுவதால் நமக்கும் வருத்தமாய்த்தான் உள்ளது !
    ஆனால், தலைவிக்கு ஆறுதல் இல்லையே ...
    அவளின் துன்பத்திற்கு அவளின் மனம் மட்டுமே ஆறுதலையும் தேறுதலையும் தர முடியும் ...

    "துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சந் துணையல் வழி."

    இதை அறிந்தவள்தான் நம் தலைவியும்...!

    இக்குறுந்தொகைப்பாடலலை இயற்றியவர் மிளைப்பெருங் கந்தனார் ...


    படர் கூர்ந்து - துன்ப நினைவு மிக
    எல்லறு - ஒளி குறைகின்ற
    புலர் - இராப்பொழுது புலர்
    தலையுடைய
    இயம்பும் - கூவும்

    அன்பன்,
    சுந்தரம்
    Last edited by Sundaram77; 25-09-2013 at 02:57 AM.

  2. Likes கீதம் liked this post
  3. #26
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    குறுந்தொகைப் பாடலை மிக எளிதாகவும் நேர்த்தியாகவும் விளக்கும் தங்கள் பாங்கு மிகவும் பாராடடுக்குரியது. மனத்துக்கினியவர் அருகில் இல்லாமையை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகின்றன வரிகள். ஒரு பெண்ணின் துயரை உள்வாங்கி ஏற்றமுடன் வெளிப்படுத்திய பாடலாசிரியரின் சிந்தனையும் வரிகளும் மனம் கொள்ளை கொள்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு.

  4. #27
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    யாயும் ஞாயும் யாரா கியரோ...வும் ஒரு இலக்கிய ஆர்வலரும்....

    நண்பர்களே ,
    சங்க இலக்கிய நெடும் பரப்பில் மிகவும் பிரபலமான , பல்லோர்க்கும் தெரிந்த பாடல்கள் இரண்டு !
    இரண்டும் ' யா ' வில் துவங்குவது தற்செயலே ; இவற்றில் ஒன்று புறத்தையும் அடுத்தது அகத்தையும் சேர்ந்ததாய்
    இருப்பதும் கூட தற்செயலே ! விந்தைதான் !

    புறப்பாடல் கணியன் பூங்குன்றன் யாத்த ' யாதும் ஊரே யாவரும் கேளிர் ' எனத் தொடங்கி 13,14 வது வரிகளில்


    ' யாதும் ஊரே யாவரும் கேளிர்

    ...................................
    ...................................
    மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே
    சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே . '


    என முடியும் உலகத்தை அளக்கும் ஒரு தத்துவஞானியின் பிரகடனம் ஆகும் .

    எல்லோராலும் எடுத்தாளப்படுவதும் , உலக மாந்தர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதும் அந்த முதல் வரி !
    அதன் ஒப்புயர்வில்லா உலகப்பார்வை சிறந்ததெனினும் , அடியேனுக்கு பிடித்தது அந்தக் கடைசி இரு வரிகள் !
    அதில் எவ்வளவு ஆழ்ந்த அகன்ற ஞானச்செருக்கு மிளிர்கிறது , நண்பர்களே !

    சரி , தடம் மாறிப் போகிறேன் ...
    நான் சொல்ல வந்ததெல்லாம் இரண்டாவதான அகப்பாடல் பற்றி ...
    இதுவும் இன்று உலகளாவிய அளவில் நன்கு அறியப்பட்ட பாடல்தான் , A .K. ராமனுஜனின் ஆங்கில மொழி பெயர்ப்பின்
    பயனாய் ! இதன் ஒரு வரியின் வெளிப்பாடு - உணர்விலும் செயலிலும் - அத்தகையது .

    சிறு மேற்கோள் ஒன்றிங்கு :


    This line is so evocative, standing at once for the union in love and also for a geographical context.
    Evidently, it is this line that inspired the title of Vikram Chandra's English novel, " Red Earth and Pouring Rain ".
    The line that is referred to is " செம்புலப் பெயனீர் போல " ! , now a very famed quote !

    ஒருவன் , ஒருத்தி ...காலம் காலமாய் திகழ்வதுதான்.
    இயற்கையின் நியதி , ஊழின் உற்சாக விளையாட்டு , மன்மதன் - ரதியின் நிர்ணயங்கள்
    ...பலவாறு பகரலாம் , நண்பர்களே !
    எப்படியோ இருவரின் சந்திப்பு நிகழ்கிறது . கண்கள் கலக்கின்றன ; மனங்களும் இசைகின்றன .
    மழை அளவில்லா இரக்கமும் பயன்பாடும் கொண்டதுவே ; விளை மண்ணும் பொறுமையும் வளமையும் நிரம்பியதே !
    அள்ளி அள்ளி வழங்குவதுதான் இரண்டின் இயற்கையே .
    இன்னொரு தமிழ்ப் புலவன் கூறுவான் : நேற்றும் அதற்கு முன்னரும் கொடுத்தோமே என்று எண்ணாது
    என்றும் வழங்கும் மழையைப்போல் நீயும் பரிசளிக்கவேண்டும் என்பான்.. .
    இருப்பினும் , இரண்டுமே தனித்தே நீடிப்பின் அவற்றின் முழுப்பயன் கிட்டுமா !?
    மழைமண்ணும் வளமான செம்மண்ணும் ஒருங்கி இணைந்தால்தானே விளைச்சல் மண்டும் ; இப்பூவுலகும் திளைக்கும் !

    அவ்வாறுதான் , இந்த ஒருவனும் ஒருத்தியும் - அல்ல , தலைவனும் தலைவியும் - யார் யாரோவாக இருந்தவர்கள்தான்.
    ஆனாலும் , மனங்களின் சங்கமத்திலே , அவள் அன்பை மட்டுமே ஆடையாக அணிந்து , நாணம் மின்னி நெளிய , குன்றியும்
    ஒடுங்கியும் , எழுச்சி பெற்று நினைவழியும் நிலையும் தலைவனுடன் அடைகிறாள் ! அதனை நினைவுறும்போது கலங்குகிறாள்.
    அவசரப்பட்டு ஆட்பட்டுவிட்டோமோ என்றும் துணுக்குறுகிறாள் .இருப்பினும் தன்னையும் தன் தலைவனையும்
    நம்புபவள் . தலைவனுக்கும் அவள் சஞ்சலம் தெரிகிறது ; அவள் அவநம்பிக்கையில் உழன்றால் அவனால் தாங்க
    இயலுமா ! எனவே , , மெதுவாக , பரிவாக , ஆதரவாக , அன்பைக்குழைத்து அவளிடம் சொல்கிறான் :


    " அன்பே , என் தாய் நீ அறியாய் ; உன் தாய் நான் அறியேன். என் தந்தையை நீ அறியாய் ; அவ்வாறே , உன்
    தந்தையையும் நான் அறியேன். நம் பெற்றோர்களாவது ஒருவருக்கொருவர் அறிந்தவர்களா , இல்லையே ; உறவினர்களா,
    அதுவும் இல்லையே ! அமுதே , உன்னை நானறியேன் , என்னை நீ அறியாய் , நேற்றுவரை !! ஆயின் , இப்போழ்திலோ,
    மழை பெய்தலால் செம்மண்ணில் எவ்வாறு அவைகள் தம் இயல்புகள் இழந்து அய்க்கியமாகிற்றோ , அதுபோன்றே ,
    நம் இரு மனங்களும் கள்ளமில்லா அன்பினால் கலந்து நம்மை இழந்து ஒன்றானோம் ;
    இருவரும் பயனுற்றோம் ; நம்மவர்களும் பயனுறுவர் , நல்லாளே . "

    அவளும் விகசித்து மலர்ந்து மென்சிரிப்பில் அதை ஏற்றிருப்பாள் !

    உண்மையில் உண்டாகும் உள்ள நெகழ்ச்சி இன்ன இடத்தில் இன்ன காலத்தில் இன்னாரிடத்தில்தான் தோன்றும்
    என்று கட்டுப்படுடையதா, இல்லையே ! அந்நெகிழ்ச்சிக்கு உரியார் எவரோ அவர் எதிர்ப்படும்போது அது தானே
    வெளிப்படுத்திக் கொள்ளும் . அதன்முன் ஒரு வேறுபாடும் எதிர் நில்லாது ; வெள்ளம்போல் பெருக்கெடுத்து பாயும் அது !
    இயற்கையின் இயல்பினால் ஒன்று கூடுவதே வலிவானது ; தளராதது ; உறுபயன் தருவது !!


    சிரஞ்சித்துவமான அக்குறுந்தொகைப் பாடல் :


    யாயும் ஞாயும் யாரா கியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ்வழி யறிதும்
    செம்புலப் பெயனீர் போல
    அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

    - செம்புலப் பெயனீரார்.

    யாய் - என் தாய்
    ஞாய் - நின் தாய்
    எந்தை - என் தந்தை
    நுந்தை - உன் தந்தை
    கேளிர் - சுற்றம்
    அறிதும் - அறிந்து கொண்டோம் என்ற பொருளில் வந்தது
    செம் - செந்நிறமான
    புலம் - நிலம்
    பெயல் - மழை


    சரி , நண்பர்களே , இப்பாடல் ஒரு தமிழ் இலக்கிய தாகம் மிகுந்த ஒரு அம்மையாரை , தன் இன்னல்களையும்
    அலைச்சலையும் பொருட்படுத்தாது , லண்டன் மாநகரின் நிலம்புகு வண்டியில் ( London Metro / Tube ) இப்பாடலைத்
    தோற்றச் செய்ய வேண்டும் என எவ்வளவு ஆர்வமுடன் செயலாற்றினார் என சற்று பார்ப்போமே !

    சஞ்சிகைகளிலும் , ஆங்கில தினசரிகளிலும் எழுதும் சுதந்திர எழுத்தாளர் ( freelancer )அவர் . அவ்வப்போது லண்டன்
    பயணிப்பது அவரது வழக்கம் . அங்கு நிலத்தடி ரயிலில் பயணம் செய்யும்போதெல்லாம் , ரயில் பெட்டிகளில்
    ஏதேனும் ஒரு கவிஞரின் பாடல் அழகுற அச்சிடப்பட்டு , சிறு விளக்கத்துடன் , ஒட்டப்படுவதை , கண்டு களித்திருக்கிறார் .
    அவருக்கு இயல்பிலேயே அமைந்த இலக்கிய ஆர்வத்தால் அதன் மேல் விவரங்களை அறிந்து கொள்கிறார் .

    " Persistent enquiries at Underground stations finally yielded a name and telephone number.
    That was how I found myself in Chernaik's home, to hear how the project came up as the brainchild of British poets Gerard Benson, Cicely Herbert and American-born, London-based novelist scholar Chernaik herself. "


    பிறகு இந்த அம்மையாருடன் அவரது நட்பு - இரு பக்க ஆர்வத்துடன் - தொடர்கிறது .

    "Since then I have been in touch with Chernaik, exchanging books and letters. I also kept track of the Underground Poetry happenings, as when Benson decided to watch the dawn from Westminster bridge and recite Wordsworth's poem in situ - for those who braved the autumn cold, on a "birth anniversary" of the sonnet. "

    ஒரு நேரத்தில் , கவிதைகளைப் பிரபலபடுத்தும்போது , எவையெல்லாம் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என அறிய வருகிறார்.

    " Benson explains, "Our selection not only had poems celebrating life in London and Britain, but poetry as a criticism of culture, as an expression of truth." The choice was far more eclectic, wide-ranging in themes and styles. "Healthy" grief is in, but excessive gloom is out. Light verse gets special attention. Translations from other languages (mainly European, occasionally a Chinese verse) came in, reflecting the increasingly multicultural ambience of London town."


    இதுபற்றியெல்லாம் அம்மையார் செர்னெய்க்கிடன் வினவும்போது அவர் சொல்கிறார் :

    "Go back to the beginnings of English poetry, juxtapose the early lyrics with the most recent by living poets, and you discover the sense of continuity in the language and themes of poetry. The world changes, so do culture and life styles, but poetry shows us that our relationship with fellow humans, with the natural and the working worlds, do not change. It is one of the functions of art to reassure people about their connections with the past."

    இதன் பிழிவு இதுதான் : " காலங்கள் மாறினாலும் ஆதாரமான மனித உறவுகளில் தொடர்ச்சியை கவிதைகள் சுட்டுகின்றன் ."

    நமது இதழாளாலர் கூறுகிறார் :

    "I agree that our most contemporary thoughts are often expressed in our oldest verse," I smiled.
    "My own favourite love poem was written 2,000 years ago by an anonymous Tamil bard whom we have named after the striking metaphor he created to visualise love." I proceeded to describe the Sangam literature of ancient Tamil, some of it Englished by A.K. Ramanujan, a sensitive 20th Century scholar poet.

    And walking down the quiet Mansfield Road at sundown I found myself reciting the poem to Chernaik.

    "What could my mother be
    to yours? What kin is my father
    to yours anyway? And how
    Did you and I meet ever?
    But in love
    our hearts have mingled
    as red earth and pouring rain" .

    காலத்தை வென்ற இக்கவிதையை ரயில்பெட்டிகளில் கண்ணுறும்படிச் செய்யலாமா என்று கேட்டதற்கு .

    "She was delighted when I suggested that this poem be included in the Poems on the Underground. And the vintage Tamil verse becamethe first (also the only Asian and Indian) poem in a set of six, now displayed on the London subway through June-July 2001."

    நண்பர்களே , இப்படிப்பட்ட அம்மையார் - அவரின் பெயர் ' கௌரி ராமநாதன் ' - போன்ற இலக்கிய ஜீவிகளால்தான் தமிழ் இன்றும் இளமையாய் வாழ்கிறது !


    அன்பன்,
    சுந்தரம்
    Last edited by Sundaram77; 02-11-2013 at 03:03 AM.

  5. #28
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    இதையெல்லாம் படிப்பதற்கு ...ம் ...ம் ...ம் ...

  6. #29
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    ( ஆண் ) மகனல்லடா நீ....

    நண்பர்களே ,

    ஒரு திங்களாகவே ( ஒரு மாதமாய் ) நான் ஒரு சங்கப்பாடலைப் பதிப்பிக்கலாம் என நினைத்து - தொடரும் ஆர்வக் குறைவுக் காரணமாய் - செய்ய இயலாமல் ...

    ஆனால் ஒருவர் பதிப்பித்த ஒர் புதுக்கவிதை என் சோர்வை போக்கி விட்டது ...அவர் இக்கவிதையினை யார் எழுதியது
    எனசொல்லவில்லை ...ஆனால் அது 25 பிப்ரவரி, 2010 லேயே யாசர் அராபத்
    என்பவரால் எழுதி பதிப்பிக்கப்பட்டுள்ளது ... ...

    சரி, இந்த முன்னுரை போதும் என நினைக்கிறேன் ....

    கணவன் , மனைவி இல்லற வாழ்வில் கூட்டு வாழ்க்கை நடத்துவதில் சங்கடங்கள் எத்தனை உண்டோ அத்துனை நலங்களும்
    உண்டு. இன்றைய பரபரக்கும் வாழ்வில் எங்கு நோக்கினும் உள்ள பாதுகாப்பின்மையும் நிழல் போன்று கூட வருகையில்
    வீட்டில் பெற்றோரோ அல்லது மற்ற உறவினரோ உடன் வசித்தல் வீட்டு வேலைகளைப் பங்கிடுதலினும் ஒரு நிம்மதி
    உணர்வைத் தோற்றுவிக்கும் ; பாதுகாப்பை கூட்டவும் செய்யும் ; ஊக்கத்தை ஊட்டும் - பின்னும் குழந்தைகள் பெற்றவுடன்
    இவ்வுறவுகளின் அவசியம் தெற்றென விளங்கவே செய்யும் ! ஆனால் , அதற்கு சற்று பரந்த மன்ப்பாங்கும் பொறுமையும்
    வேண்டுமே - அதற்கு எங்கு போவது !

    சரி , இந்தக்கதையெல்லாம் ஏன் இப்போது ...

    வேறொன்றுமில்லை , நண்பர்களே , இந்தக் கதை - அதாவது, கூட்டு வாழ்வில் கூட வசிப்போரின் வார்த்தைகளைக் கேட்டல் -
    என்றும் நடந்து வருவதுதான் என்பதை ஒரு கலித்தொகைப் பாடல் உணர்வுடன் சொல்கிறது !

    களவொழுக்கத்தினின்று மீண்டு கற்பொழுக்கத்தில் காலடி வைத்து சின்னாட்களே ஆயின தலைவிக்கு ! அதாவது , காதலன் தன்னைக்
    கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுக்கும் காரிகையாகி விட்டனள் தலைவி !! மணம் நடந்து விட்டது !!!
    அதற்கு முன்னர் அக்காதலனோ , நான் உன்னைக் கண்ணுக்குள் கண்ணாக வைத்துக் காப்பேன் எனவும் உன்னை என்றும்
    பிரியேன் எனவும் பிரியமான வார்த்தைகளை இனிக்கப் பேசி " செவ்விய தீவிய சொல்லி " ,
    அவளையும் மெதுவாகத் தழுவி " பைய முயங்கிய " மலரை நுகர்வது போல் அவளை நுகர்ந்தும் இருந்துவன் அவன் !
    - இவ்வளவும் இதற்கு மேலும் அறிந்தவள் தலைவியின் தோழி . இந்நிலையில் , தலைவனுக்கு
    பொருள் அவசியமாகிறது ...பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பது இப்போது அவனுக்கு உறைக்கிறது . தலைவிக்கு
    சொன்னவை எல்லாம் மறந்தே போயிற்று . அவன் வெகு தொலைவு செல்ல முடிவு செய்து விடுகிறான்.

    தோழிக்குப் பொறுக்கவில்லை ...அவனை ஒரு பிடி பிடித்து விடுகிறாள் !

    தலவனை நோக்கி அவள் சொல்கிறாள் : என் இனிய தோழியிடத்து நீ எவ்வளவு இனிமை சொட்ட பேசினை ;
    எவ்வளவி செவ்விய மொழிகள் பகர்ந்தனை ; என்ன உறுதிகள் தந்து அவளை உன்னுடையவள் ஆக்கினை !
    இவை யாவையும் மறந்து " அஞ்ஞான்று அவற்றொடு பைய முயங்கிய அவை எல்லாம் பொய்யாதல் "
    ஆகி அவளை விட்டு செல்வாய் எனப் பாவி நான் அறியாது " யான் யாங்கு அறிகோ " போனேன் !

    நீ வெளியூர் செல்லலால் என்ன நடக்கும் என்று சிந்தித்தனையா...
    புது மணம் முடித்த அவள் , தனியளாகி , உன் அரண்மனை போன்ற வீட்டில் உன் உற்றார்களால் அவள் என்னவெல்லாம் சொல்லி
    அலைக்களிக்கப்படுவாள் " அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து ",நீ இதை எல்லாம் கிஞ்சித்தும் நினையாமல் , அவளை விட்டு ஏகிறாய் !
    இப்போது எல்லை தகர்ந்த சினத்தில் சிதைக்கிறாள் அவனை : " மகன் அல்லை மன்ற " நீ ( ஆண் ) மகன் இல்லை!.
    தன் தோழிக்கும் நேரப்போகும் துயரை நினைத்து எவ்வளவு ஆவேசமாகிறாள் இத்தோழி !

    அத்தோடும் விட மனதில்லை அவளுக்கு !

    கொடும் வெயில் சுட்டெரிக்கும் வழிதனைக் கடந்து வேற்றூரில் உள்ளபோது நம்மூர்க்காரர்கள் உன்னை போன்றே அங்கு வருவர் .
    அவர்களிடம் , அன்பை விட்டொழித்து , யான் துறந்து வந்த தலைவி எங்ஙனம் உள்ளாள் என்ன கேட்டுத்
    தொலைக்காதே ; அதன் மேல் அவர்கள் உண்மை செப்பும் நிலையில் , உன் தலைவி பற்றி உரைத்து விடுவார்கள் எனில் ,
    " பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய " , பகலவன் போல் விளங்கும் உன் களையான முகம் , அவ்வவலச் செய்தியால்
    " ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு. " நீயும் துக்கப்படுவாய் ! இதனால்
    நீயும் நொந்து உன் வினை முடிக்க இயலாமல் " அருஞ் செய் வினை முற்றாமல் " அல்லல் உறுவாய் ! எனவே , அவளைப்பற்றி
    ஏதும் வினவாதே எனவும் நெஞ்செரிய எச்சரிக்கிறாள் !!

    புரிகிறதுதானே , நண்பர்களே !

    நீ அவளைப் பிரிந்த சின்னாட்களில் அவள் இறந்து படுவாள் என்பதைத்தான் இவ்வளவு
    சுற்றி வளைத்துக் கூறுகிறாள் தோழி !!

    தலைவியின் வரம்பிலா காதல் மனத்தினையும் தோழியின் நட்பின் உயர்வையும் நாம் எண்ணி எண்ணி வியக்ககத்தான் முடியும் !

    இந்தப் பாடல் வள்ளுவனின் இக்குறளுக்கு

    செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க் குரை.


    விரிவுரையாக அமைகிறது ...!!!



    இக்காட்சியைத் தீட்டும் அச்சங்கப்பாடல் :

    செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
    பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
    பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய!
    அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
    பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்;
    மகன் அல்லை மன்ற, இனி
    செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி,
    அன்பு அற மாறி, யாம் உள்ளத் துறந்தவள்
    பண்பும் அறிதிரோ? என்று, வருவாரை
    என் திறம் யாதும் வினவல்; வினவின்,
    பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,
    தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
    அவலம் படுதலும் உண்டு!

    கலித்தொகை - பாலைக் கலி - 19

    இதில் கடின சொற்கள் இல்லை ! இருப்பினும் ,

    செவ்விய - நேர்மையான
    தீவிய - இனிய
    மன்ற - திண்ணமாக
    அகன் நகர் - அகன்ற வீட்டில் உள்ளோர்
    பகல் முனி - பகலவன் , ஞாயிறு , கதிரவன்


    சரி , தற்போதையக் கவிதைக்கும் வருவோமே ...

    ஈராயிரம் ஆண்டுகளானாலும் மாறா மனித இயல்புகளைக் காட்டுகிறதில்லையா...!!??


    புகைப்படத்துடன்வந்து
    பிடித்திருக்கா?என்றாள் என் அம்மா!
    ..........................................
    கல்யாணமும் முடிந்துவிட்டது!!
    முழுதாய்ப் புரிவதற்குள்
    ...........................................
    பத்தே நாட்களின் வாழ்க்கை
    பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!
    ( வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன் )
    பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
    பலிகடாவாய் நான்!
    ............................................
    ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
    வசை பாடிவிட்டே சென்றார்கள்!
    ( அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,)
    ...............................................
    ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!
    துக்கம் தொண்டையை அடைக்க;
    உருண்டு வந்த கண்ணீரையும்
    ஒரமாய்த் துடைத்துவிட்டு;
    உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
    உரைத்தேன் – இருந்திருக்கலாம்
    முதிர்கன்னியாகவே!!!!

    ஆக்கியவர் : யாசர் அராபத்

    அன்புடன் ,
    சுந்தரம்

    பி . கு : நீண்டு விட்டது நண்பர்களே , பொறுக்க ! என் ஆர்வம் அப்படி ...

  7. #30
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Sundaram77 View Post

    சிரஞ்சித்துவமான அக்குறுந்தொகைப் பாடல் :


    யாயும் ஞாயும் யாரா கியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ்வழி யறிதும்
    செம்புலப் பெயனீர் போல
    அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

    - செம்புலப் பெயனீரார்.
    நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
    இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

    என்று எளிய வரிகளால் கவியரசர் தொட்டுச்சென்ற சங்கப்பாடலை அதன் முழுப்பொருளும் அறியும் வகையில் இங்கு பகிர்ந்து உளம் நிறைத்தமைக்கு மனமார்ந்த நன்றி தங்களுக்கு. எவ்வளவு அழகான பாடல்.

    உபயம் என்று குழாய் மின்விளக்குகளில் அவற்றின் ஒளிமறைத்து தம் பெயரைப் பொறிக்கும் வள்ளல்களை இந்நாட்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் எவ்வளவு புலவர்கள் தங்கள் பெயரை அறியத்தராமல் எவ்வளவு அற்புதமானப் பாடல்களைப் பாடிச்சென்றுள்ளனர்.

    செம்மண்ணில் மழைவிழுந்தால் மண் குழைந்து செழிக்கும் என்னும் அற்புதமான உவமையால் அன்புள்ளத்தின் பிணைப்பைக் காட்டும் அழகிய பாடலை அயல்தேசத்தவரும் அறியும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஏ.கே. ராமானுஜம் அவர்களின் பங்களிப்பு ஒருபக்கம் பெருமை தருகிறது என்றால் இவ்வரிய பாடலை தம் முயற்சியால் லண்டன் நிலம்புகு வண்டியில் பலரும் பார்த்து ரசித்திடவும் தமிழின் சிறப்பை உணர்ந்திடும் வகையிலும் பொறிக்கச்செய்த கௌரி ராமநாதன் அவர்களின் முயற்சி பேருவகையும் பெருமிதமும் தருவதாய் உள்ளது. இது பற்றிய செய்தியை தங்கள் பதிவின் மூலமே அறிந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு. தொடரும் தங்கள் தமிழ்ச்சேவைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  8. #31
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Sundaram77 View Post

    செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
    பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
    பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய!
    அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
    பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்;
    மகன் அல்லை மன்ற, இனி
    செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி,
    அன்பு அற மாறி, யாம் உள்ளத் துறந்தவள்
    பண்பும் அறிதிரோ? என்று, வருவாரை
    என் திறம் யாதும் வினவல்; வினவின்,
    பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,
    தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
    அவலம் படுதலும் உண்டு!

    கலித்தொகை - பாலைக் கலி - 19
    பாடலின் ஒவ்வொரு வரியையும் தெள்ளந்தெளிவாக அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் விளக்கும் தங்கள் முயற்சியைப் பெரிதும் போற்றுகிறேன். இந்தக் கலித்தொகைப் பாடலைத் தாங்கள் விளக்கியபின் அதை வாசிக்கும்போது வரிக்கு வரி விளங்குகிறது. தலைவனை 'நீ ஒரு ஆண்மகனல்லன்' என்று துணிவுடன் சாடும் தோழியின் சாடலுக்குப் பின்னே உள்ள கரிசனமும் கவலையும் பாடல் வரிகளில் மறைமுகமாக வெளிப்படுத்தப்படுவது சிறப்பு. உன்னைப் பிரிந்தால் அவள் உயிரையே இழப்பாள் என்பதை எவ்வளவு சூசகமாகவும் நறுக்குத்தெறித்தாற்போன்றும் தெரிவிக்கின்றன வரிகள்.

    கலித்தொகைப் பாடலின் ஒத்த கருத்தை வலியுறுத்தும் குறளோடு புதுக்கவிதை ஒன்றையும் தந்து விளக்கியமை சிறப்பு. மனமார்ந்த நன்றி தங்களுக்கு.

  9. #32
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by Sundaram77 View Post
    நண்பர்களே ,

    ஒரு திங்களாகவே ( ஒரு மாதமாய் ) நான் ஒரு சங்கப்பாடலைப் பதிப்பிக்கலாம் என நினைத்து - தொடரும் ஆர்வக் குறைவுக் காரணமாய் - செய்ய இயலாமல் ...

    ஆனால் ஒருவர் பதிப்பித்த ஒர் புதுக்கவிதை என் சோர்வை போக்கி விட்டது ...அவர் இக்கவிதையினை யார் எழுதியது
    எனசொல்லவில்லை ...ஆனால் அது 25 பிப்ரவரி, 2010 லேயே யாசர் அராபத்
    என்பவரால் எழுதி பதிப்பிக்கப்பட்டுள்ளது ... ...

    சரி, இந்த முன்னுரை போதும் என நினைக்கிறேன் ....

    கணவன் , மனைவி இல்லற வாழ்வில் கூட்டு வாழ்க்கை நடத்துவதில் சங்கடங்கள் எத்தனை உண்டோ அத்துனை நலங்களும்
    உண்டு. இன்றைய பரபரக்கும் வாழ்வில் எங்கு நோக்கினும் உள்ள பாதுகாப்பின்மையும் நிழல் போன்று கூட வருகையில்
    வீட்டில் பெற்றோரோ அல்லது மற்ற உறவினரோ உடன் வசித்தல் வீட்டு வேலைகளைப் பங்கிடுதலினும் ஒரு நிம்மதி
    உணர்வைத் தோற்றுவிக்கும் ; பாதுகாப்பை கூட்டவும் செய்யும் ; ஊக்கத்தை ஊட்டும் - பின்னும் குழந்தைகள் பெற்றவுடன்
    இவ்வுறவுகளின் அவசியம் தெற்றென விளங்கவே செய்யும் ! ஆனால் , அதற்கு சற்று பரந்த மன்ப்பாங்கும் பொறுமையும்
    வேண்டுமே - அதற்கு எங்கு போவது !

    சரி , இந்தக்கதையெல்லாம் ஏன் இப்போது ...

    வேறொன்றுமில்லை , நண்பர்களே , இந்தக் கதை - அதாவது, கூட்டு வாழ்வில் கூட வசிப்போரின் வார்த்தைகளைக் கேட்டல் -
    என்றும் நடந்து வருவதுதான் என்பதை ஒரு கலித்தொகைப் பாடல் உணர்வுடன் சொல்கிறது !

    களவொழுக்கத்தினின்று மீண்டு கற்பொழுக்கத்தில் காலடி வைத்து சின்னாட்களே ஆயின தலைவிக்கு ! அதாவது , காதலன் தன்னைக்
    கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுக்கும் காரிகையாகி விட்டனள் தலைவி !! மணம் நடந்து விட்டது !!!
    அதற்கு முன்னர் அக்காதலனோ , நான் உன்னைக் கண்ணுக்குள் கண்ணாக வைத்துக் காப்பேன் எனவும் உன்னை என்றும்
    பிரியேன் எனவும் பிரியமான வார்த்தைகளை இனிக்கப் பேசி " செவ்விய தீவிய சொல்லி " ,
    அவளையும் மெதுவாகத் தழுவி " பைய முயங்கிய " மலரை நுகர்வது போல் அவளை நுகர்ந்தும் இருந்துவன் அவன் !
    - இவ்வளவும் இதற்கு மேலும் அறிந்தவள் தலைவியின் தோழி . இந்நிலையில் , தலைவனுக்கு
    பொருள் அவசியமாகிறது ...பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பது இப்போது அவனுக்கு உறைக்கிறது . தலைவிக்கு
    சொன்னவை எல்லாம் மறந்தே போயிற்று . அவன் வெகு தொலைவு செல்ல முடிவு செய்து விடுகிறான்.

    தோழிக்குப் பொறுக்கவில்லை ...அவனை ஒரு பிடி பிடித்து விடுகிறாள் !

    தலவனை நோக்கி அவள் சொல்கிறாள் : என் இனிய தோழியிடத்து நீ எவ்வளவு இனிமை சொட்ட பேசினை ;
    எவ்வளவி செவ்விய மொழிகள் பகர்ந்தனை ; என்ன உறுதிகள் தந்து அவளை உன்னுடையவள் ஆக்கினை !
    இவை யாவையும் மறந்து " அஞ்ஞான்று அவற்றொடு பைய முயங்கிய அவை எல்லாம் பொய்யாதல் "
    ஆகி அவளை விட்டு செல்வாய் எனப் பாவி நான் அறியாது " யான் யாங்கு அறிகோ " போனேன் !

    நீ வெளியூர் செல்லலால் என்ன நடக்கும் என்று சிந்தித்தனையா...
    புது மணம் முடித்த அவள் , தனியளாகி , உன் அரண்மனை போன்ற வீட்டில் உன் உற்றார்களால் அவள் என்னவெல்லாம் சொல்லி
    அலைக்களிக்கப்படுவாள் " அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து ",நீ இதை எல்லாம் கிஞ்சித்தும் நினையாமல் , அவளை விட்டு ஏகிறாய் !
    இப்போது எல்லை தகர்ந்த சினத்தில் சிதைக்கிறாள் அவனை : " மகன் அல்லை மன்ற " நீ ( ஆண் ) மகன் இல்லை!.
    தன் தோழிக்கும் நேரப்போகும் துயரை நினைத்து எவ்வளவு ஆவேசமாகிறாள் இத்தோழி !

    அத்தோடும் விட மனதில்லை அவளுக்கு !

    கொடும் வெயில் சுட்டெரிக்கும் வழிதனைக் கடந்து வேற்றூரில் உள்ளபோது நம்மூர்க்காரர்கள் உன்னை போன்றே அங்கு வருவர் .
    அவர்களிடம் , அன்பை விட்டொழித்து , யான் துறந்து வந்த தலைவி எங்ஙனம் உள்ளாள் என்ன கேட்டுத்
    தொலைக்காதே ; அதன் மேல் அவர்கள் உண்மை செப்பும் நிலையில் , உன் தலைவி பற்றி உரைத்து விடுவார்கள் எனில் ,
    " பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய " , பகலவன் போல் விளங்கும் உன் களையான முகம் , அவ்வவலச் செய்தியால்
    " ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு. " நீயும் துக்கப்படுவாய் ! இதனால்
    நீயும் நொந்து உன் வினை முடிக்க இயலாமல் " அருஞ் செய் வினை முற்றாமல் " அல்லல் உறுவாய் ! எனவே , அவளைப்பற்றி
    ஏதும் வினவாதே எனவும் நெஞ்செரிய எச்சரிக்கிறாள் !!

    புரிகிறதுதானே , நண்பர்களே !

    நீ அவளைப் பிரிந்த சின்னாட்களில் அவள் இறந்து படுவாள் என்பதைத்தான் இவ்வளவு
    சுற்றி வளைத்துக் கூறுகிறாள் தோழி !!

    தலைவியின் வரம்பிலா காதல் மனத்தினையும் தோழியின் நட்பின் உயர்வையும் நாம் எண்ணி எண்ணி வியக்ககத்தான் முடியும் !

    இந்தப் பாடல் வள்ளுவனின் இக்குறளுக்கு

    செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க் குரை.


    விரிவுரையாக அமைகிறது ...!!!



    இக்காட்சியைத் தீட்டும் அச்சங்கப்பாடல் :

    செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
    பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
    பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய!
    அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
    பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்;
    மகன் அல்லை மன்ற, இனி
    செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி,
    அன்பு அற மாறி, யாம் உள்ளத் துறந்தவள்
    பண்பும் அறிதிரோ? என்று, வருவாரை
    என் திறம் யாதும் வினவல்; வினவின்,
    பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,
    தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
    அவலம் படுதலும் உண்டு!

    கலித்தொகை - பாலைக் கலி - 19

    இதில் கடின சொற்கள் இல்லை ! இருப்பினும் ,

    செவ்விய - நேர்மையான
    தீவிய - இனிய
    மன்ற - திண்ணமாக
    அகன் நகர் - அகன்ற வீட்டில் உள்ளோர்
    பகல் முனி - பகலவன் , ஞாயிறு , கதிரவன்


    சரி , தற்போதையக் கவிதைக்கும் வருவோமே ...

    ஈராயிரம் ஆண்டுகளானாலும் மாறா மனித இயல்புகளைக் காட்டுகிறதில்லையா...!!??


    புகைப்படத்துடன்வந்து
    பிடித்திருக்கா?என்றாள் என் அம்மா!
    ..........................................
    கல்யாணமும் முடிந்துவிட்டது!!
    முழுதாய்ப் புரிவதற்குள்
    ...........................................
    பத்தே நாட்களின் வாழ்க்கை
    பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!
    ( வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன் )
    பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
    பலிகடாவாய் நான்!
    ............................................
    ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
    வசை பாடிவிட்டே சென்றார்கள்!
    ( அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,)
    ...............................................
    ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!
    துக்கம் தொண்டையை அடைக்க;
    உருண்டு வந்த கண்ணீரையும்
    ஒரமாய்த் துடைத்துவிட்டு;
    உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
    உரைத்தேன் – இருந்திருக்கலாம்
    முதிர்கன்னியாகவே!!!!

    ஆக்கியவர் : யாசர் அராபத்

    அன்புடன் ,
    சுந்தரம்

    பி . கு : நீண்டு விட்டது நண்பர்களே , பொறுக்க ! என் ஆர்வம் அப்படி ...
    அகல் நகர் கொள்ளா அலர்தலைத் தந்து ..
    அருமை ,சுந்தரம்

  10. #33
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    அன்னையும் அத்தனும் அல்லரோ , தோழி !


    நண்பர்களே,
    சற்றே காலம் கடந்து விட்டது...
    ஒருத்தி , அவளது தோழி , அவ்வொருத்தியின் தலைவன் ! மூவர்தான் இங்கு உலகம் !!
    இந்த தோழி இருக்காளே - நான் சொல்வது சங்கப்பாடல்களில் காணும் தோழிகளை - எந்த இலக்கியத்திலும் காண முடியாதவள் ! அடியேன் இதைச் சொல்லவில்லை ; சொல்வதற்கான தகுதியும் இல்லை - ஏனெனில் தெரிந்தது , தமிழன்றி ஆங்கிலம் மட்டும்தான் ! ஆயின் , பல மொழிகள் கற்றுத்துறைப் போகிய ஞானம் சிறந்த பல்லோர் சங்க இலக்கியத் தோழிகள் போல் திறம் வாய்ந்தோர் வேறு இலக்கியங்களில் இல்லை என உறுதிபடக் கூறியுள்ளனர் !
    She is not just a Friend , Philosopher and Guide !

    இவர்களுக்கும் மேலானவள் !! தலைவியைத் தன் உயிரெனத் தாங்குபவள் ; தலைவியின் மகிழ்ச்சி தன்னதே எனத் திளைப்பவள் ; அவளின் மென் மனதில் தோன்றும் - முகத்தில் அல்ல அன்பர்களே - சிறு மாறுதல்களையும் உடனறிபவள்;அது துயரம் சார்ந்ததெனில் உடன் அதை துடைத்தெறிய முயல்பவள் ; தலைவியின் மனம் களவு போனதெனில் , அந்நிலையில் முழு உறுதுணையாய் இருப்பவள் ; தூதும் போவாள் ; தலைவிக்கு அமைச்சாயும் இருப்பாள் ; தலைவனையும் , தவறிழைக்கையில் அவன் செயல்களை சாடுபவள் ; தலைவி சொல்ல நினைத்தும் சொல்ல முடியாதவற்றை தலைவனிடம் நயம்படச் சொல்பவள் ; தலைவனையும் நட்பாய் நினைப்பவள் ...


    இப்படிப்பட்ட தோழி கிடைக்க கோடி கோடி புண்ணியம் - தலைவி மட்டுமில்லை , அவளது முன்னோர்களும் -
    செய்திருக்கவேணும் ...

    சரி , இங்கு என்னவென எட்டிப்பார்ப்போமே ...

    தன் உற்ற தோழியிடம் தலைவி சொல்கிறாள் ...
    என் தலைவனிடம் நீ , என் பொருட்டு , கடிந்து பேசாதே ; உரையல் என்கிறாள் .
    ஏன் அவ்வாறு சொல்கிறாள் ..!? ஒன்றுமில்லை , கதை இதுதான் ...


    தலைவன் ஏதோ ஒரு நிமித்தமாய் தலைவியை விட்டு சிலகாலம் பிரிந்துவிட நேர்கிறது .
    ( இதை , சிலர் பரத்தமையோடு உள்ள உறவினால் பிரிந்துள்ளான் என்றும் கொள்வர் ; அப்படிப் பொருள் கொள்வதில்
    என்ன திருப்தியோ...!?) காதலில் கனிந்து நிற்கும் அன்புள்ளம் கொண்ட இருவர் பிரிந்திருத்தல் வேதனையே .
    அவளுடன் உடனுறையனாக , மாதொரு பாகனாக , வசித்த நாளெல்லாம் அவள் சுகித்திருந்தவள் மட்டுமல்ல ; இல்லறமும் மாண்புற நடத்தி வந்தவள் . அதனாலேயே , அவளின் பெண்மையுள்ளம் மலர்ந்து மணம் நீக்கமற வீசலாயிற்று ; அவளின் மேனியழகும் மிகுந்து , வாழ்நாளும் நீடிக்குமாய் இன்புற தோற்றம் கண்டது .

    ஆனாலும் என் ...!?

    அத்தலைவன் மனம் பேதலுற்று அவளைப் பிரிந்தபோது , அவளது மேன்மைகளும் அவளிடமிருந்து விடை பெற்றுக்
    கொண்டன ; அவளது பெண்மை நலங்கள் தொலைந்தது மட்டுமல்லாமல் அவளது உடலழகும் மாசுபட்டது ; குறைபட்ட
    இவ்விரு நலங்களால் அவளது இன்னுயிரும் நீங்கிவிடும் நிலை ; அப்படியும் , தலைவன் மாட்டு அத்தலைவி கொண்ட
    காதலன்பு குறையவில்லை ! அதானாலேயே , அவள் தோழியிடம் இவ்வாறு கூறலானாள் :


    " என் இனிய தோழியே, தலைவரின் பிரிவு என் அனைத்து நலங்களையும் தொலையச் செய்ததுவே ; அவனுக்காகவே
    வாழ்ந்த என் உயிரும் கழிந்து விடும் போலும் ! என் நிலை பொறுக்காது அவனை சுடு சொற்களால் தீண்டியிருக்கிறாய் .
    உன்னை எனக்குப் புரியாமல் போய்விடுமா ! ஆனாலும் , நீ இனி அவனை இம்மாதிரியெல்லாம் கடிந்து பேசாதே !
    ஏன் தெரியுமா ... என் தலைவனின் நேசம் முன் போல் சுடர் விடவில்லை ; அப்படி உள்ளபோது , நான் எப்படி
    அவனிடம் ஊடல் கொள்வது ; உரிமையிருந்தால் அல்லவா , கோபமோ , புலவுமோ செல்லும் ; அப்படியான
    நிலைதான் இப்போதில்லையே ! இருப்பினும் அவனை நான் ஏற்றுக் கொள்கிறென் ; ஏனென்று விளங்குகிறதா
    தோழியே ...! அவன் எனக்கு கணவானாக அன்பு காட்டதபோதும் , எமக்கு அன்னை போலும் தந்தை போலும்
    அன்பு காட்டுகின்றானே ; என் அன்னையை நான் புறக்கணிக்க இயலுமா ?! ; எம் தந்தைக்குதான் நான் அடங்காது
    ஒழுக முடியுமா ?! இயலாது தானே ! அதனால் , அவனின் அன்பினை நானும் இந்தவாறு இப்போது பாராட்டுகிறேன் ;
    அவனை வரச் சொல்லடி ; அவன் இனி எமக்கு அன்னையும் அத்தனமாய் இருக்கட்டும் !"


    நன்னலம் தொலைய நலமிகச் சாஅய்
    இன்னுயிர் கழியினும் உரையல் ; அவர் நமக்கு
    அன்னையும் அத்தனும் அல்லரோ , தோழி !
    புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.


    -அள்ளூர் நன்முல்லையார். ( குறுந்தொகை 93 )



    ஆழத்திலும் ஆழ்ந்த தன் உள்ளக் குமுறல்களை எவ்வளவு நுட்பமாய் இத்தலைவி வெளியிடுகிறாள் ...
    அவளுக்கு, கழிந்த காதலின் பெருமை இனிக்காண முடியாது எனத் தோன்றினாலும் தலைவனை விட்டுக்
    கொடுக்கவும் - அதுவும் தன் உயிரனைய உற்ற தோழியிடம் கூட - அவள் மனம் ஒப்பவில்லை ...

    சரி , அன்பர்களை , செவ்வியல் இலக்கியத்தின் சீரியக் குணக்கூறுகளான அமைதியும் , செறிவும் , கட்டுக்கோப்பும்
    கொண்ட இக்குறுந்தொகைப் பாடலை நம் உள்ளம் அள்ளும் வண்ணம் நான்கே நான்கு வரிகளில் யாத்தவர்
    அள்ளூர் ( என்ன பெயர் பொருத்தம் ! ) நன்முல்லையார்!

    இப்பாடலில் எளிய சொற்களே உள ; முதல் வரியில் உள்ள இரண்டு ' நலம் ' கவனிக்கப்பட வேண்டியது !


    சாஅய் - சாய்ந்து , மங்கி , குறைந்து
    கழியினும் - நீங்கினும் , பிரியினும்
    உரையல் - சொல்லாதே , குறையாக சொல்லாதே
    புலவி - ஊடல்


    நீரும் நிழலது இனிதே ; புலவியும்
    வீழுநர் கண்ணே இனிது .


    அன்புடன்,
    சுந்தரம்

  11. #34
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    உலகளாவிய தமிழராய்ச்சிக்கு வித்திட்டவர்...


    நண்பர்களே ,
    ஒரு நவீன தமிழ் எழுத்தாளர் தமிழெழுத்தையே உருமாற்ற வேண்டும் எனப் பைத்தியக்காரத்தனமான/விஷமத்தனமான
    ஒரு 'ஆலோசனை ' யை, சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் நாளிதழில் சொல்லியுள்ளார் ;
    இது பற்றி தமிழ் ஆர்வலர்கள் எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும் .

    இப்போதோ தமிழுக்கெனவே தன் முழு வாழ்வை அர்ப்பணித்த ஒரு பேரறிவளானான பெருந்தகைப் பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது !
    இவர் ஒருவரின் பெரும் பங்களிப்பால்தான் இன்று உலகம் முழுக்கவும் தமிழ் தனக்குரிய பெருமையான இடத்தைப்
    பெற்றிருக்கிறது ! இதில் யாருக்கும் ஒரு துளியேனும் சந்தேகம் வேண்டாம் !! இவர்தான் 'உலகத் தமிழாராய்ச்சி அமைப்பு'
    நிறுவனம் தோற்றுவித்தவரும் , அந்நிறுவனம் சார்பாக உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியவரும் ஆவார் .
    இவரைப் பற்றி ஒரு ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது ; அதன் சில பகுதிகளை இங்கு தருகிறேன்.
    இதன் தமிழ் மொழிபெயர்ப்பு இடலாமா எனப் பார்த்தேன் ; ஆனால் , அதற்கான நேரம் எனக்கில்லை என்பதோடு
    ஆங்கிலத்தில் இருப்பதே சிறப்பு எனவும் பட்டது ; வேறு நினைப்போர் மன்னிக்க !







    .....................................................
    .....................................................

    Thaninayaga Adigal, a Sri Lankan Tamil Catholic priest, was born in Karampon, Jaffna, his mother’s place while his father hailed from the island of Delft.

    .....................................................
    .....................................................

    His long stay in Europe (1934-1939) provided him opportunities to become proficient in various European languages such as Latin, Italian, French, German, Spanish, Portuguese, Greek, and some Hebrew which he put to great use in spreading the glory of Tamil.

    This gave him a taste of the Sangam literature of which he became enamoured in course of time and decided to pursue his Tamil studies by enrolling himself as a student in the Master’s and then the M.Litt. courses at Annamalai University.

    When Adigal became the Head of the Department of Indian Studies in the University of Malaya in 1961, he was distressed to find poor scope for professors of Tamil in various universities around the world to assemble frequently to share their researches with their peers. This condition prompted him to propose, in one of the meetings of the Tamil Development Council of Tamil Nadu Government in 1963, that the State government undertake to organise such meetings regularly.

    IATR formation

    Adigal availed himself of the opportunity provided by the Orientalists’ Congress, held in New Delhi in January 1964, to bring together the Tamil scholars attending the Congress and organise the International Association for Tamil Research (IATR). It was symptomatic of the success of this new organisation that Jean Filliozat, a Frenchman, became the president of this association, while two other European scholars became the vice-presidents and a European Dravidologist Kamil V. Zvelebil became joint secretary along with Thaninayaga Adigal.
    It is this organisation which has conducted so far eight International Tamil Conferences in various countries. Most of the papers read in and books published during these conferences bear ample witness to the fulfilment of the original goal of the association.
    He launched a tri-monthly “Tamil Culture” and propagated the value of Tamil, thereby attracted Tamil knowing foreigners, which paved way fresh research works. He not only guided many scholars in their research work, but authored a number of research papers and books.

    Future plans
    ...................................

    All his works and research papers would be compiled together to be brought out as a single volume. Creation of a chair or research institute or production of a documentary on his multifaceted services are some of the plans to be executed by the committee, according to Amudhan Adigal, Director, Thaninayaga Adigal Tamil Research Centre, Tiruchi.


    அன்புடன்,
    சுந்தரம்

    பி.கு : கடைசியில் சொல்லப்பட்டிருக்கிற மறைத்திரு.அமுதன் அடிகள் சொற்பொழிவை சில வருடங்களுக்கு முன்னர்
    கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன் ; சுருக்கமான பேச்சுதான் ; ஆயினும் , ஒரே
    வார்த்தையில் சொல்வதெனில் ' அமுதம் '!
    Last edited by Sundaram77; 26-11-2013 at 06:29 AM.

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •