Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 34

Thread: நெஞ்சை நெகிழ்த்தும்/கிள்ளும்/அள்ளும் குறுந்தொகையும் பிறவும்....

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    இத்திரி நல்ல பயனுடைத்து, நற்சிந்தனை துண்டலுடைத்து, ஈதலைப்போன்றே பகிர்தலும் நன்று

    எனக்கேற்பட்ட சிந்தனை!

    "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு" என வாழ்ந்தார் பலர் எனின் கொள்வார் பப்பலர் என்றாகுமன்றோ!
    எவரும் கொளார் என்றாகும் காலம் எக்காலமோ!
    கொள்ளேன் எனும் மனப்பாடுடையோரிடையே ஈதல் எங்கனம் செயலாகும்!

    வறுமையும் வாழ்ந்தே வருகிறது ஈவார் எப்போதுமிருப்பாரெனின்!
    ஈதலால் வறுமையை ஒழித்தல் இயலுமெனில் ஈவோம் நாளும்!




    என்றென்றும் நட்புடன்!

  2. #14
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    தானே கள்வன் தானது பொய்ப்பின் . . . !!!

    நண்பர்களே,

    குறுந்தொகையில் மற்றுமொரு நயமிகு பாடலைப் பார்க்கும் முன்னர், குறுந்தொகை பற்றிய சில குறிப்புகள்:

    எட்டுத்தொகை நூல்களுள், பாடல்களின் அடி வரையறையில் மிகச் சிறிய பாடல்களைக்
    கொண்டது குறுந்தொகையே! இப்பாடல்களில் உள்ள வரிகளின் மீச்சிறு எண்ணிக்கை நான்கு ;
    மீப்பெருவன எட்டு!கடவுள் வாழ்த்து நீங்கலாக உள்ள மொத்தப் பாடல்கள் 401 ;ஆனால், 400 தான்
    இருத்தல் வேண்டும்! 307, 391 - ஆம் பாடல்கள் 9 அடிகள் கொண்டவை ; இவற்றுள் 307 ஐ நீக்கி
    400 பாடல்களாகக் கொள்ளலாம் என்பது தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய பெருமைமிகு உ.வே.சா வின்
    நிலைப்பாடு!

    குறுந்தொகைதான் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் எனக் கருதப்படுகிறது; இது மட்டுமே இதன்
    சீர்மையை எடுத்துக்காட்டப் போதுமானது ; இதனைத் தொகுத்தவர் பெருந்தேவனார் எனக் கருதப்படுகிறது!

    குறுந்தொகையின் மாண்பினையும் அதன் சிறப்பான இடத்தையும் பிறிதொன்றையும் கண்டு அறியலாம் -
    ஆம், நண்பர்களே! - தொகை நூற்களுள்ளேயே மிகப் பெரும் அளவில் உரையாசிரியர்களால் எடுத்துக்
    காட்டப்பட்டது இந்நூல்தான் ; இருபத்தொன்பது உரையாசிரியர்கள் ஆயிரம் இடங்களில் குறுந்தொகைப்
    பாடல்களை மேற்கோளாகச் சுட்டிச் சென்றுள்ளனர்!

    விரிக்கின் பெருகும் ஆதலால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்!

    பாடலைப் பார்ப்போமா...!


    இதனை ஆக்கியோன் கபிலன் எனும் பெரும் புலவன்; இவனைப் பற்றியே பெருமைப்பட பல கூறலாம்!
    நக்கீரனின் இக்கூற்றைவிட வேறென்ன வேண்டும் - 'உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்'

    இடம் கருதி எவ்வளவோ தள்ளத் துணியினும் இதைச் சொல்லாமல் இருக்க இயலவில்லை!
    தொகைநூல்களுள் மிகுதியும் இடம் பெற்ற பாடல்கள் இவனதே; மொத்தம் இருநூற்று முப்பதைந்து
    பாடல்கள்! நமது பாடல் இதோ..!!

    யாரும் இல்லைத் தானே கள்வன்
    தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
    தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
    ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
    குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.


    தன் உள்ளம் ஈர்த்த தலைவனைக் கண்டு அளவளாவி மகிழ்ந்து வருகிறாள் தலைவி!களவொழுக்கத்தில்
    திளைத்த தலைவியோ அவன் உறுதி மொழிகளை மீறிடத்துணிவனோ எனும் நம்பிக்கையில் அவனுடன்
    ஒருசேரக் கலந்தும் விடுகிறாள்!ஆனால், அத்தலைவனோ யாது காரணமாகவோ பிரிந்து சென்றவன்
    இன்னும் திரும்பிடவில்லை!துடிக்கிறாள் பேதை..!! நீதிக் கேட்களாமெனில் சாட்சியம் கேட்பார்களே ...!
    மணந்த நாளினை நினைவு கூர்கிறாள் - அக்கள்வன் தன்னுள் நிறைந்தபோது யாரும் இல்லையே! ஒரு நாரைதான் இருந்தது - திணைப்பயிரின் அடிப்பகுதி போன்று சிறியதாகவும் பசியதாகவும் ஆன கால்களைக் கொண்டிருந்ததைக் கண்டேன்!ஆனால் அது ஓடுகின்ற நீரில் ஆரல் மீன் வராதா என்றல்லவா பார்த்துக் கொண்டிருந்தது!

    எனவே, தலைவன் தன் சொல் பொய்ப்பின் என்னால் ஏதும் செய்யா இயலாதே எனத் துயர் மேலிட வாடுகின்றனள்!


    இதில் ஒரு வியக்கத்தக்க நயம் உள்ளது, நண்பர்களே! தலைவனும் தலைவியும் மணந்த நாளில் - இடத்தில் - நாரை இருப்பினும் இவர்களைக் காணாதிருந்ததனால் அது சாட்சியம் பகராதாம் - பொய் சாட்சியாய் விடுமன்றோ!!

    அன்பன்,
    சுந்தரம்

  3. Likes கீதம் liked this post
  4. #15
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    இத்திரி நல்ல பயனுடைத்து, நற்சிந்தனை துண்டலுடைத்து, ஈதலைப்போன்றே பகிர்தலும் நன்று

    எனக்கேற்பட்ட சிந்தனை!

    "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு" என வாழ்ந்தார் பலர் எனின் கொள்வார் பப்பலர் என்றாகுமன்றோ!
    எவரும் கொளார் என்றாகும் காலம் எக்காலமோ!
    கொள்ளேன் எனும் மனப்பாடுடையோரிடையே ஈதல் எங்கனம் செயலாகும்!

    வறுமையும் வாழ்ந்தே வருகிறது ஈவார் எப்போதுமிருப்பாரெனின்!
    ஈதலால் வறுமையை ஒழித்தல் இயலுமெனில் ஈவோம் நாளும்!



    திரு.பிள்ளை,
    உங்களது கருத்தை தெரிவித்ததற்கு நன்றி !

    ஈதலால் வறுமையை ஒழித்தல் இயலுமெனில் ஈவோம் நாளும்!

    இது சாத்தியமே இல்லை - அதாவது , ஈதல் வறுமைய ஒழித்து விடும் எனல் !
    அவரவர்கள் சிரமம் பாராது உழைத்தால் மட்டுமே முடியும் ...All others are just temporary measures ...
    நட்புடன்
    சுந்தரம்

  5. #16
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Sundaram77 View Post
    தங்களின் பின்னூட்டத்திற்கு முதலில் நன்றி !
    அந்தப்பாடல் , அய்யன்மீர் , அவ்வை யாத்தது ; குறுந்தொகையில் 102-ம் பாடல் ; பாலைத்திணையைச் சேர்ந்தது !
    ஒன்று இங்கு சொல்லிடல் வேண்டும் ; நான் தமிழை முறையாகப் படித்தவன் இல்லை ; என் தாய் மொழி மீது அளவிடற்கரியபற்று
    கொண்டவன் ; தமிழ் அனைவருக்கும் உரித்தானது - குறிப்பாக , இன்றைய தமிழாசிரியர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல - என்ற
    பார்வை கொண்டவன் !
    தமிழை தமிழுக்காக மட்டும் படிப்பவன் ; அதில் எனக்குப் பிடித்த , என் பார்வையில், என் மனதுக்குப் பட்டதில் - பாமர வழியில் - சிலவற்றைப்
    பகிர்ந்து கொள்கிறேன் ; அவ்வளவே !
    என் வேண்டுகோளுக்கிணங்க பாடலாசியர் பற்றிக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. நம்மில் பலரும் தாங்கள் குறிப்பிடுவது போலத்தான். இலக்கியத்தில் ஆர்வமிருக்கும் அளவுக்கு அதைப் புரிந்துகொள்ளும் திறனின்மையால் பல அரிய பொக்கிஷங்களின் அருமை தெரியாமல் தவறவிட்டுக்கொண்டிருக்கிறோமே என்று வருந்துகிறோம். அதைப் போக்கும்வண்ணம் பெருமுயற்சி எடுத்து எளிய தமிழில் சங்கப்பாடல்களின் பொருளை அறியத்தரும் தங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது. இதற்காகவே ஏங்கும் நெஞ்சங்களுக்கு மிகவும் அருமையான விருந்து. தொடரட்டும் தங்கள் சிறப்பான முயற்சி!

  6. #17
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    ஐய அற்றால் அன்பின் பாலே...



    நண்பர்களே,

    கசப்பு , இனிப்பு என்பதெல்லாம் பெரும்பாலும் மனதைப் பொறுத்ததே..!
    மிக்க விரும்பும் ஒருவர் கொடுப்பது இனிப்பே அற்றதாயினும் அது இனிக்கவே செய்யும் ; அதே வேளையில்
    வெறுக்கும் ஒருவர் கொடுக்கும் திருநெல்வேலி அல்வாவோ அல்லது இராஜபாளையம் பால்கோவா கூட
    உவர்க்க/கசக்கத்தான் செய்யும் ( அவரவர்களுக்கு தோன்றிய/பிடித்த இனிப்புகளை நினைத்துக் கொள்ளுங்களேன் ! )
    இது மனிதஇயல்பு இல்லையா..?!
    அதனால்தான், உண்மைநிலை தோன்ற , விருப்பு வெறுப்பின்றி அமைதியான சமநிலையில் விளங்க வேண்டும்
    என்பது ; அப்பொழுது ஒன்றின் உணமைப்பொருள் மாறுபாடின்றி தோன்றும் ; அதாவது கசப்பு கசப்பாகவும் ,
    இனிப்பு இனிப்பாகவும்...!

    இன்றைக்கு ஆண், பெண் சிநேகங்கள் நகரங்கள் மட்டுமல்லாது , கிராமங்கள் உட்பட சிறு நகரங்களிலும்
    பரவலாக 'மலர்'கின்றன ; இச்சிநேகங்களில் பல காதலாகவும் காய்க்கின்றன ; அவற்றுள் மிகச்சிலவே
    இல்லறத்தில் கனிகின்றன . கனியாது போவதற்கும் மனமாற்றமே முதற்காரணம் !

    இந்தச் சூழல் இன்று மட்டுமல்ல - என்றைக்கும் நடந்து வருவதுதான் என்பதனை நறுக்குத்தெறித்தாற்போல்
    உள்ள இந்த குறுந்தொகைப் பாடல் கண்முன் நிறுத்துகிறது..! நான் முன்னர் இதே போன்ற தலைப்பில்
    சொல்லியதுதான் - குறுந்தொகைப் பாடல்களில் பாசாங்கு என்பதனையேக் காண்பதரிது !

    சிலநேரங்களில் நாகரிகமாய் சற்றே மறைவாய் தொனிக்கும் ; அவ்வளவே.


    தலைவன்...ஓ..தலைவன்..! ஒரு தலைவி...தலையாயவள்..!! காதல் முகிழ்த்து களிப்பும் கொண்டிருந்தனர்.
    மனம் - அதிலும், ஆண் மனம் - குரங்கன்றோ..!?
    பழகப்பழகப் பாலும் புளிக்கும்தானே..!

    தலைவி மீது பற்றுக்குறைவினாலோ , அல்லது , போதும் என்று நினைத்தானோ - அவன் நடத்தை மாறுகிறது.
    நீணட நாட்களுக்குப்பின் தலைவியை நாடி அவன் திரும்பி வருகிறான் ; தலைவி கண்ணில் படவில்லை.
    அவன் எதிர் தோன்றியவள் அவளின் தோழி..!
    இன்றைய நட்டாற்றில் விட்டுவிடும் பல தோழிகள் போன்றவல்லள் - உற்ற உயிர்த் தோழி !
    அவளுக்கு அவனின் சிறுமை சகிக்கவில்லை ; சாடுகிறாள் அவனை..!

    அவளின் சொற்கள் வழியேக் கேட்போமே..:

    " சின்னாட்களுக்கு முன்வரை என் தோழி பசிய வேப்பங்காயைத் தந்திடினும் அது அழகான இனிப்புக்கட்டி
    என்றனீர். ஆனால் , இப்போழுதோ அவள் தை மாதத்து பாரி பறம்பின் பனிதுஞ்சும் தெள்ளிய குளிர்வான
    இனிப்பிலும் இனிப்பான சுனை நீரை கொடுத்தாலும் கூட அது , வெப்பமாய் உவர்க்கிறது என்கிறீர் !
    எம் தோழியின் தவறென்ன ? உன் 'அன்பு' உடல்பால் பட்டது போலும் - உள்ளத்தின்பால் பட்டதல்ல "

    என்று சினந்து சீறுகிறாள்.


    இதைக்கேட்டு அவன் என்ன செய்திருப்பான்...
    வெட்கித் தலை குனிந்திருப்பான்..!


    அப்பாடல் இதோ..!

    வேம்பின் பைங்காயென் தோழி தரினே
    தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
    பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
    தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
    வெய்ய உவர்க்கும் என்றனிர்
    ஐய அற்றால் அன்பின் பாலே.


    - குறுந்தொகை


    தே - இனிய ; இனி - இப்போது ; வெய்ய - வெப்பமுடையதாய் .


    பாரியின் பறம்பு மலையின் நீர்வளத்தையும் இப்பாடல் சுட்டிச் செல்கிறது..தண்ணீர் என்பதுவே குளிர்நீர் என்றே
    பொருள் படும் ; அதிலும் குறிப்பாக தை மாதத்திய தண்ணீர் இன்னும் குளிர்ச்சியுடன்..!
    கவிஞனின் உவமை நயந்தான் என்னே...!


    மிளைக் கந்தனார் என்பவர் இயற்றிய பாடல் இது.


    அன்பன்,
    சுந்தரம்

  7. #18
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மணமாகிப் பல வருடங்களுக்குப் பிறகு கணவன், மனைவியின் சமையலில் ஏதேனும் குற்றம் சொன்னால், உடனே அவள் கேட்பது 'அன்று நான் எதைச் செய்துகொடுத்தாலும் இனித்தது, இன்று கசக்கிறதோ?'

    இன்று பேசப்படும் இந்த வசனம் பலநூறு வருடங்களுக்கு முன்பே பேசப்பட்டுவிட்டது என்பதை அறிய எவ்வளவு வியப்பு! என்ன ஒரு வித்தியாசம், இதை தலைவி நேரடியாய் தலைவனிடம் கேட்கவில்லை. காதல் தடுத்துவிட்டது போலும். அவள் சார்பாக தோழி பேசவேண்டியவற்றைப் பேசிவிட்டாள்.

    குறுந்தொகைப் பாடல் விளக்கமும், அதற்கான தங்கள் விளக்கவுரையும் மனங்கவரும் வகையில் எளிமையாய் உள்ளன. பாராட்டுகள். தொடர்ந்து பகிருங்கள்.

  8. #19
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    தொல்காப்பியனின் நுட்பமான ....



    மனித இனம் என்றும் தன் சூழல் பற்றிய விவரங்களைக் கூட்டிக் கொண்டே வந்துள்ளது ;
    ஒரு கட்டத்தில் நிமிர்மாந்தன் ( Homoerctus ) எனும் நிலையை அடைந்த பின்னர் இவ்விவரங்கள் பெருகலாயிற்று !
    இந்நிலையில் இவ்விவரங்களை அவன் பாகுபடுத்தவேண்டியஅவசியத்திற்கு உள்ளாகியிருப்பான் !!
    அறிவியல் இப்படித்தான் துவக்கமாயிருக்கும் ...!!!
    இதற்கிடையில் மாந்தரினம் ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு வாழ முற்படுகையில் நாகரிங்கள் தோன்றலாயின.
    இந்நாகரிங்களில்சிறப்பிடத்தை பெற்றவை சுமேரிய , பாபிலோனிய நாகரிங்கள் ; சீனமும் , எகிப்தும்
    2500 ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு வளர்ந்த விட்ட நாகரிங்களே ...
    இன்னும் கார்த்தேஜ் , அச்டெக் , மாயா , இன்கா , ஹாரப்பா...


    இவை யாவையும்விட இன்றைய மனித அறிவின் பிரமண்டாத்திற்கு வித்திட்டது கிரேக்கமே !
    தர்க்கவியல் , வானியல் , இயற்கைவிஞ்ஞானம் , அழகியல் , இலக்கியம் , கணிதம் ...
    என்பன போன்ற பலதுறைகளிலும் அவர்களின் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது .
    எத்துனை அறிஞர்கள் , எத்துனை தத்துவங்கள் , எத்துனை அறிவுக்கூடங்கள் , எத்துனை நூல்கள் ...
    தேல்ஸ் , அனாக்சிமான்டர் , பிதகோரஸ் , அனாக்ஸகோரஸ் , யூக்ளிட் , சாக்ரடிஸ் ,
    அவர் சீடர் பிளாட்டோ , அவர் சீடர் அரிஸ்டாட்டில் , ஆர்கிமெடிஸ் , ஹிப்பார்கஸ் , டாலமி ...பட்டியல் தீராது , நண்பர்கர்ளே...!!!


    சரி , இவர்கள் இருக்கட்டும் ...நம் முன்னவர்கள் - அதாவது , முன்னோர்கள் - அறிந்திருந்தது என்ன எனப்பார்ப்போமா !?
    அந்தோ , பரிதாபம் ! நம் இலக்கியச் செல்வங்களும் , அறிவியல் ஆக்கங்களும் நம் மூடத்தனத்தினாலேயே இழக்கப்பட்டன !
    நல்ல நூற்கள் , தீக்கோ , ஆற்றுவெள்ளத்திற்கோ எதிர்நிற்கும் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட
    தமிழன் கையால் அழித்தநூற்கள் கணக்கிலடங்கா...


    தொல்காப்பியன் தன் பேராக்கத்தில் எத்துனை இடங்களில் என்ம , என்மனார் , மொழிப , படுப , என்மனார் புலவர்....
    என்றெல்லாம் சொல்கிறான். தொல்காப்பியம் இன்று முழுமையாகக் கிடைப்பது நம் பேறே ;
    அன்றியும் , அப்பெரு நூலின் உரைகள் சிலவும் முழுமையாகக்கிடைக்கின்றன .

    தொல்காப்பியம் இற்றைக்கு 2200 வருடங்களுக்கும் முற்பட்டதாகும் .
    அது ஒரு இலக்கண நூலானாலும் பல அறிவியல் உண்மைகள் அதிலும் விரவிக் கிடக்கின்றன.
    ஒலி , பேசுதல் , சொல் பற்றி எல்லாம் மிக விரிவாக , இன்றைய அறிவியல் பார்வைக்கும் ஒத்துப்போகக்கூடிய வகையில் ,
    முறைமைப்படுத்தப் பட்டிருப்பது வியப்பே ஆயினும் , அதனினும் வியப்பானதுஅறிவியல் உண்மைகள் அதில் காணக் கிடைப்பது !
    குறிப்பாக உலகில் உள்ள உயிர்களை அவற்றின் அறிவு நிலைப்படி பாகுபடுத்தியிருப்பது !!
    எதனையும் நுணுகிப்பார்க்கும் தொல்காப்பியனின் நுட்பம் உயிர்களின் பகுப்பு முறையிலும்
    தெள்ளெனத் தெரியுமாறு சிறந்து நிற்கிறது .மொழி , இலக்கியம் , உலகியல் மட்டுமின்றி
    மரபியலிலும் அவர்தம் அறிவின் ஆட்சி ஓங்கி நிற்கிறது .

    உயிர்களை அவர் இவ்வாறு பிரிக்கிறார்.


    1. ஓரறிவு உயிராவது உடம்பினால் அறிவது .
    ( எ.கா. ) புல் , மரம் , - பனை , புளி , தாமரை....
    2. ஈரறிவு உயிராவது உடம்பாலும் , வாயாலும் அறிவது.
    ( எ.கா. ) சங்கு , நத்தை , கிளிஞ்சல் ...
    3. மூவறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு இவற்றால் அறிவது.
    ( எ.கா ) எறும்பு , அட்டை ...
    4. நாலறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் இவற்றால் அறிவது.
    ( எ.கா ) நண்டு , தும்பி ....
    5. அய்ந்தறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி இவற்றால் அறிவது.
    ( எ.கா ) புலி , பாம்பு , மீன் , ....
    6. ஆறறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி , மனம் இவற்றால் அறிவது.
    ( எ.கா. ) மக்கள் ...( தேவரும் , அசுரரும் கூடத்தான் )...

    இவ்வளவு செம்மையானப் பிரிவினை மரபியலில் 27 - வது நூற்பா சுட்டுகிறது...


    ' ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே '
    ' இரண்டறிவதுவே யதனொடு நாவே '
    ' மூன்றறிவதுவே யவற்றொடு மூக்கே '
    ' நான்கறிவதுவே யவற்றொடு கண்ணே '
    'அய்ந்தறிவுதுவே யவற்றொடு செவியே '
    'ஆறறிவதுவே யவற்றொடு மன்னே ' ( தொல் - மரபு - 27 )


    உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லையுடையனவென்றும் அவற்றின் தன்மைகள் என்ன என்பதையும்
    முதன் முதலில் இனங்காட்டியவர் தொல்காப்பியரே எனலாம்.

    உயர்ந்து வளரும் தாவர இனங்களை புல் , மரம் என எளிமையாகப் பிரிக்கிறார் , தொல்காப்பியர்.
    அகத்தே வலிமையுடையதுமரம் ; புறத்தே வலிமையுடையது புல் , என்கிறார் ! சரியா..
    புறத்தே வைரமுடையன புல் எனவும் அகத்தே வைரமுடையன மரம் எனவும் தாவரவியல் அறிஞர் போன்று இனங்காண்கிறார்.


    புல்லும் மரனும் ஓர் அறிவினவே ( தொல் - மரபு - 1527 )

    புறக்காழனவே புல் என மொழிப
    அகக்காழனவே மரம் என மொழிப ( தொல் - மரபு - 1585)


    நமது இலக்கியங்களில் நிறைய இல்லாவிடினும் கிடைக்கும் சில அறிவியல் உண்மைகளை பின்னரும் காண்போம்..

    அன்புடன்,
    சுந்தரம்

  9. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தமிழ் சுவையினை மீண்டும் மீண்டும் என்னுள் சுவைக்க தூண்டும் பகிர்வு ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  10. #21
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    நம்மை பெருமை கொள்ளச் செய்யும் ஓர் தமிழச்சி...


    ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி நினைவுப் பரிசெல்லாம் வாங்காத ,

    மனிதமும் , ' ஆண்மையும் ' , நேர்மையும் நிறைந்த, உலகம் வியக்கும் தமிழச்சி...




    இவருக்கு எனது பணிவான வணக்கங்கள்...

    இவரின் தாள் பணியத் தயங்கேன்..



    தமிழ்மன்ற முகப்பில் உள்ள தலைப்பாகைக் கவிஞனும் ' ரௌத்திரம் பழகு ' என்றே சொல்லியுள்ளான் !
    இன்னும் அவனது ' பாப்பா பாட்டு ' , இளங்குழந்தைகள் மனதில் இதைத்தான் விதைக்கிறது...


    பாதகஞ் செய்வோரைக் கண்டால் - நாம்
    பயங்கொள்ள லாகாது பாப்பா !
    மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
    முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா !


    The only effective way is to show the door to ALL the petty kathai-vasana karthaas , wily , family & self - serving politicians of the present TAMILNADU....


    அன்புடன்,
    சுந்தரம்
    Last edited by Sundaram77; 15-09-2013 at 02:53 AM.

  11. #22
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    நறுமென் கூந்தல் மெல்லணை யேமே.....


    நண்பர்களே,


    பொதுவாக , குறுந்தொகைப் பாடல்களில் பெரும்பாலானவை தோழியோ , தலைவியோ களவு வாழ்க்கை மேற்கொள்ளுதல்
    எத்துனை அல்லல் நிறைந்ததாக உள்ளது என்பதனை தலைவனுக்கு நெஞ்சில் உறுத்தும்/தைக்கும் வண்ணம எடுத்துச் சொல்லி ,
    கற்பு வாழ்க்கை - அதாவது , மணமுடித்து மனநிம்மதியுடன் அறவாழ்க்கை - விரைவில் மேற்கொள்ள வற்புறுத்துவதையே
    காணமுடிகிறது ; அகநானுற்றின் ஓர் பாடலில் தோழி நறுக்கெனவே சொல்வாள் :
    " மன்றல் வேண்டினும் பெறுகுவை ... " என்று !
    இவையன்றி , தங்கள் காதலின் மேன்மை பற்றியும் , தலைவன் தன் சொல்லை காக்க மறந்தது பற்றியும் அங்கலாய்க்கும்
    பாடல்களும் நிறையவே உள்ளன.


    இதற்கெல்லாம் மாறுபட்டு அமைவதுதான் இப்பாடல் ...



    இன்றும் பொருள் தேடும் - அதுதான் , அன்பர்களே பணம் சம்பாதிக்கும் - முயற்சி அனைவருக்கும் திருப்தியாய் அமைவதில்லை ;
    சிலருக்கு விரக்தியாயும் முடிகிறது ! அப்படியெனில் , ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் , பொருள் ஈட்ட , தன் இருப்பிடம்
    பெயர்ந்து , ஒரு ஆண்மகன் செல்லுதல் அவசியமாயும் - அதனால் , வழக்கமாயும் - இருந்துள்ளது. பக்கத்துப் பேரூர் எனில்
    வேனிற்காலத்தில் சென்று கார் காலத்தில் திரும்புவதும் வழக்கமாய் இருந்திருக்க வேண்டும்.

    அப்படித் திரும்புகிற ஓர் ஆண்மகன் , தலைவன் -மன்றல் முடித்தவன் - இதயத்தில் பொங்கி , மகிழ்ச்சி சிறகடிக்கக் கூவுவதான் இந்தப்பாடல்.
    தலைவன் களி பேருவகையில் சொல்கிறான்..


    தாழிருள் துமிய மின்னித் , தண்ணென
    வீழுறை யினிய சிதறி, ஊழிற்
    கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப்
    பெய்தினி வாழியோ பெறுவான் ; யாமே ,
    செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
    இவளின் மேவின மாகிக் குவளைக்
    குறுந்தாள் நாள்மலர் நாறும்
    நறுமென் கூந்தல் மெல்லணை யேமே.


    -பாண்டியன் பன்னாடுதந்தான்.

    என்று !

    கோடைகாலத்தில் தன் இல்லக்கிழத்தியை விட்டுச் சென்ற தலைவன் , பொருளீட்டித் திரும்புகிறான். உரிய காலத்தில்
    செய்யப்படும் உரிய முயற்சி பின்பு இடர்ப்படமால் இருக்க ஏதுவாகும் இல்லையா..!அவ்வகையில் தலைவன் ஈட்டிய
    பொருள் இனி இல்லறத்தை இனிது நடந்த உதவும். தலைவிக்கும் கரைகாணா மகிழ்ச்சியாய்த்தான் இடுந்திருக்கும்...தலைவன்
    திரும்பி விட்ட காலை , சரியாக மழையும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது ; இந்நிலையில் தலைவியின் அணைப்பில்
    அடங்குவதைப் போன்ற பேரின்பம் , தலைவிக்கு ஏது !இதெல்லாம் மின்னல் கீற்றாக அவன் நெஞ்சில் விரவுவதால்
    ஏற்படும் உற்சாகத்தையே இச்சொற்களஞ்சியம் வடிக்கிறது . தலைவன் சொல்கிறான் ...


    " ஏ ...அடையமுடியாத பெருவானமே , நானோ இல்லறக்கடன் ஆற்றவேண்டி , பொருளீட்ட செம்மை முயற்சிகள்
    மேற்கொண்டு , அதில் காலத்திலேயே வெற்றியும் பெற்றதால் , நிறைவான நெஞ்சமொடு , என் இல்லத்தரசியை நோக்கி
    ஓடி வந்துள்ளேன் ; இதுகாறும் தனித்திருந்த என் தலைவியின் , குவளைப்பூ மணக்கின்ற , மிக மென்மையான இவளின்
    கூந்தலை மெல்லணைத்து இவளோடு கலந்தும் விட்டேன் ! ( இராப்பொழுதுகளும் பகற்பொழுதுகளே ஆனது போலும் )
    ஆதலால் , மாந்தரையெல்லாம் புரக்கும் பெருவானே , நீயும் இருள் கெட மின்னி , ஒரு முறைமையால் குறுந்தடியால்
    அடிக்கப்பெற்றதால் முழங்கும் சீர்மையான முரசொலிபோல் ஒலி எழுப்பி , விருப்பமான மழையினைச் சிதறச்செய்து
    பெருவாழ்வு வாழவாய்
    " என , மழைக்கே வாழ்த்துப்படிக்கிறான் ...அவன் என் செய்வான் , பாவம் ..தலைவியின்
    வெம்மையும் , குளிர்மையும் நிரம்பிய நிறைவான அணைப்பு அவனைப் பேதலிக்கச் செய்து விடிகிறது...


    இந்தப்பாடலில் உள்ள சொற்சேர்க்கையின் மென்மை எவ்வளவு இனிப்பாய் இருக்கிறது ...இடியைக் குறிப்பது தவிர ;
    அதிலும் கூட அளவிடற்கரிய மென்மைதான் தழுவிக்கிடக்கிறது !


    தாழ் - உலகில் தங்கிய
    துமி - கெட
    ஊழின் - ஒரு வழி முறையில்
    கடிப்பு - குறுந்தடி
    செம்மல் - நிறைவான
    மேவினமாகி - கலந்தனமாகி

    அன்பன்,
    சுந்தரம்


    பி.கு : ஏன் , இதற்கு முந்தைய இடுகைக்கு யாரும் எதுவும் சொல்லவில்லை ...புரியவில்லையா !? ...அப்பட்ட உண்மைகளை ஜீரணிக்க
    முடியவில்லையா...இன்றையத் தமிழ்க் குமுகாயம் - குறிப்பாக இளைய சமுதாயம் - சினிமா எனும் பித்தேறிக் கிடப்பது எனக்கு
    மிகுந்த மன வேதனை தரும் ஒரு நிகழ்வு ...இதற்கெல்லாம் வித்திட்டது ... சிந்தியுங்கள் , அன்பர்களே..!!??

  12. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    மிக அருமையான திரி
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  13. #24
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Aug 2013
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,166
    Downloads
    0
    Uploads
    0

    நல்லொழுக்கம் அருகி வரும் காலம் இஃது !




    நண்பர்களே..!

    நல்லொழுக்கம் அருகி வரும் காலம் இஃது !
    ஒருவர் மீதான நமது மரியாதை பொதுவாக அவரின் செல்வ நிலையைக்கொண்டே அமைவது கண்கூடு ;
    அடுத்து, அவரின் கல்வி அறிவு நிலை ; இவையெல்லாம் இருப்பினும் இல்லையெனினும் ,
    நம் சமூகச் சூழலில், ஒருவரைப் பற்றிய மதிப்பீடு அவரின் பாடறிந்து ஒழுகும் பண்பிலும்
    அவரின் நெறி தவறா ஒழுக்க நிலையையும் சார்ந்தே அமைகிறது ! - உள் மனதில் !!
    நம்மை விட ஒருவரின் ஒழுக்க நெறி சிறந்ததாக இருப்பின் அவர் மீது ஒரு மட்டில்லாத மரியாதை
    தோன்றுவது இயல்பு - சமயங்களில் பயம் கலந்த மரியாதை கூட .

    இதனாற்றான் ஒருவனின் காதல் தோல்வியுறுமா..!?

    ஒரு குறுந்தொகைப் பாடல் இது பற்றிப் பேசுகிறது ...மன, குண் நலன்கள் பற்றி உள ரீதியான ஒரு
    ஆய்வை இப்பாடல் சாத்தியமாக்குகிறது..!

    அதற்கான பின்புலத்தை சற்று பார்ப்போம்...

    ஒழுக்க நெறியில் சிறந்த ஒரு மருத நில மாதர் திலகம் அவள்.
    அவன் !? .. பண்பாட்டு நெறியிலும் நடத்தையிலும் குணநலன்களிலும் அவளுக்கு நிகரானவன் அல்லன்.
    காதலுக்கு - அன்றும் , இன்றும் ,என்றும் - கண்ணில்லையே..!. இருவர்க்கும் இடையே காதல் முகிழ்த்து விடுகிறது.

    சில காலம் களவில் ...
    அவ்வப்பொழுது தலைவியின் ஈடற்ற ஒழுக்க நெறி குறித்து அவள் மீது அச்சம் கலந்த மரியாதையே மேலிடுகிறது !
    அவளின் பண்பின் பேராற்றலால் நடுக்கமுறும் அவன் அவளைக் காண்பதையும் தவிர்க்கிறான்..
    இன்னும் சின்னாட்கள் இப்படியே கழிகிறது.
    ஆனாலும் தலைவியின் கவின்பெறு அழகைக் கண்ணால் பருக அவனுக்கு அவா மேலிடுகிறது ; நேரிடையாக அவளிடம்
    செல்லவும் அச்சம் / தயக்கம் ; தோழியிடம் சொல்லி... புலம்பி... தலைவியைச் சந்திக்க அனுமதி வேண்டுகிறான்.
    தோழியும் தலைவானுக்காகப் பரிந்துரைக்கிறாள் - தலைவியிடம்.
    அந்தோ...!
    என்ன வார்த்தை சொல்லி தலைவி வேதனையுறுகிறாள் - 'கழிந்ததே' எனச் சொல்லுகிறாளே..!

    அவள் கூறுவதுதான் என்ன..!?


    " என் தலைவன் இவ்வளவு காலம் எங்கிருந்தானாம் ? ம்ம் ... நம் மருத நிலத்தில் இருந்து, மீத்தொலைவில்
    அமைந்த, மலைகள் இடை இட்ட நாட்டைச் சேர்ந்தவன் அல்லனே அவன் ; அல்லாது சற்றே தொலைவில்
    மரங்களின் தலைகள் கூடத் தோன்றாத ஊரினனும் அல்லவே அவன் ; இதோ , விரைவில் அணுகி சந்திக்கக்கூடிய
    அருகமைந்த ஊர்தானே அவனது ! அப்படியிருந்தும் எம்மை அவர் நாடுவதில்லையே , இப்போதேல்லாம்.
    ஏன் தெரியுமா , தோழி ! அச்சம் !! என் நற்றொழுக்கச் சிறப்பில் அச்சம் !!! தான் எனக்கு ஈடில்லை என்ற பயம்..
    இதனால், அவன் என்னைக் காணவரும் போதெல்லாம் ,முனிவனது தவச்சாலையில் அச்சம் மேலிட்ட பணிவோடு
    நடமிடும் பலரைப்போலவே நடந்து கொள்வான் ; தன் நெஞ்சில் அன்பைத் தேக்கியவன் அல்லன் அவன் ; அன்பை
    நீக்கியவன் ! நானும் முயன்றேன் , தோழியே . அற்றை நிலையில் - பண்டொரு காலை - என் தலைவன் மீது
    பரிதலுடன்தான் இருந்தேன் ; யாது பயன் !? அவன் மரியாதைதான் எனக்குக் கிட்டிற்று - கட்டற்ற அன்பல்லவே !
    அதனால் அவன் மீதான என் பரிதலும் இப்பொழுது கழிந்ததுவே ! "


    எனக் கலங்குகிறாள் அறிவான அந்தப் பேதை..!

    அவனை ,அவள் நிராகரித்தே விட்டாளோ..!?

    எனக்கு தோன்றுவது இது . அகத்துறை சங்கப்பாடல்கள் காதலின் ஒரு குறிப்பிட்ட நேரத்திய
    எண்ண அலைகளையே வண்ணப்படுத்துகிறது ... இந்தக் காதலனும் தன் குணநலத்தை
    தலைவிக்கு ஏற்றதாய் மாற்றி சீரிய கற்பு வாழ்க்கைக்கு அடி கோலியிருப்பான் என
    நான் நம்புகிறேன் ...நீங்கள்...?

    பாடல் இதுதான் :


    மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
    மரந்தலை தோன்றா ஊரரு மல்லர்
    கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
    கடவுள் நண்ணிய பாலோர் போல
    ஒரீஇ ஒழுகும் என்னைக்குப்
    பரியலென் மன்யான் பண்டொரு காலே.


    இப்பாடலைப் படைத்தவர் : நெடும் பல்லியத்தனார்.


    நண்ணு வழி - விரைந்து வரக்கூடிய இடத்து
    கடவுள் - முனிவர்
    நண்ணிய - அணுகிய
    ஒரீஇ - நீங்கி
    என்னைக்கு - என் தலவனுக்கு
    பரியலென் - பரிதலையுடையேன்
    மன் - கழிந்தது


    நான் ஏற்கனவே என் பேராசை பற்றி சொல்லியுள்ளேன் ...இருப்பினும் மீண்டும் ...இன்னும் பிறவும்...


    My earnest wish and appeal is that Tamils should not only study our ancient treasures , such as S'angam Literature , but also make efforts so that these treasures and the literary criticism on them are available in other major languages , say in French , in Chinese , in Spanish...

    I hope this will not just remain my dream...

    இது புதிது....

    These poets are represented ( if we deduct from the total the obviously younger poems which have made their wayinto final redaction of the older cycle ) by 26350 verses composed in the ahaval metre, the first and oldest metrical pattern in Tamil prosody ; ahaval has no analogy in Sanskrit poetry and the nearest comparison is with English blank verse. The style , diction and metrical perfection of this poetry suggest that it must have been preceded by a period of development of at least three to five centuries "


    அன்பன்,
    சுந்தரம்

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •