Results 1 to 2 of 2

Thread: குடிகாரர்களின் (நகைச்சுவை ) கதை

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Nov 2012
    Posts
    142
    Post Thanks / Like
    iCash Credits
    12,913
    Downloads
    2
    Uploads
    0

    குடிகாரர்களின் (நகைச்சுவை ) கதை

    பொதுவாகவே, குடிகாரர்களைப் பற்றி நிறைய கதைகளும், ஜோக்குகளும் வந்துள்ளன.

    அவற்றில் ஒன்றுதான் இது.

    அதாவது ஒரு ரயில் நிலையத்தில் மதிய வேளையில் மூன்று குடிகாரர்கள் வந்து சேர்ந்தனர். ரயில் நிலையத்துக்கு ஒரு ரயில் வந்ததும், அவர்கள் மூவரும் எழுந்து, ரயில் பெட்டியின் நுழைவாயில் அருகே வருவதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிடும்.

    இவ்வாறே ஒவ்வொரு ரயிலும் வரும் போது மூவரும் முயற்சித்து முயற்சித்து தோல்வி கண்டனர்.

    இதனை ரயில்நிலைய காப்பாளர் கவனித்துக் கொண்டே இருந்தார்.

    இரவு நேரமாகிவிட்டது. அன்றைய கடைசி ரயில், நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது, உடனடியாக ஓடிச் சென்ற ரயில் நிலைய காப்பாளர், ஒவ்வொரு நபராக ரயிலில் ஏற்ற முயற்சித்தார். இருவரை ஏற்றிவிட்டு, மூன்றாமவரை ரயிலில் ஏற்ற முயற்சிப்பதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

    இதைப் பார்த்த மூன்றாமவர் 'ஓ' வென கதறி அழுதார். உடனடியாக அவரை சமாதானப்படுத்தும் விதத்தில், மன்னிக்கவும், என்னால் உங்களை ரயிலில் ஏற்ற முடியவில்லை. உங்கள் நண்பர்களை மட்டுமே ஏற்ற முடிந்தது என்று கூறினார் ரயில் நிலைய அதிகாரி.

    அதற்கு பதிலளித்த மூன்றாமவர்... அவர்கள் என்னை வழியனுப்ப வந்தவர்கள். நான் தான் ரயிலில் பயணம் செய்ய வந்தேன் என்றாரே பார்க்கலாம்.

    ரயில் நிலைய அதிகாரிக்கு தலையை சுற்றியது.

  2. #2
    புதியவர்
    Join Date
    29 Mar 2014
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    708
    Downloads
    0
    Uploads
    0
    இதுவரை இந்த நகைச்சுவையைக் கேட்டதில்லை.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •