என்னை
வலது கன்னத்தில் அடித்தான் அவன்
நான் என்ன செய்ய வேண்டும்?
திருப்பி அடிக்க வேண்டுமா?
இடது கன்னத்தைக் காட்ட வேண்டுமா
ஓடி விட வேண்டுமா
அவனை வசை பாட வேண்டுமா
எதுவும் புரியாமல் நிற்கிறேன் நான்
அடுத்தென்ன செய்வதென
அவனும்
எதுவும் புரியாமல் நிற்கிறான்!!