கீச்சுக்கள் நடப்புச் செய்திகளின் பிரதிவாதமாகும்; தனிமனிதக் குமுறல்களின் வடிகாலாகும்; சமூக மாற்றத்தின் விவாதப்புள்ளியாகும்; இதனை டிவிட்டரில் பயனர் கணகில்லாதவர்கள் படிப்பதென்பது எளிதனதல்லை. வலைப்பதிவுகளுக்கென தொகுத்துத் தரும் திரட்டிகள் போல டிவிட்டுகளைத் திரட்டித் தர திரட்டிகள் இருந்ததில்லை. எல்லாக் கீச்சுக்களைத் தொகுப்பதும் படிப்பதும் அயர்ச்சியான ஒருவிசயமே. ஒரு நிமிடத்திற்கு சுமார் நூறு கீச்சுக்கள் வெளிவரும் போது அதனை எல்லாம் படிப்பதும் சாத்தியமற்றது. இவற்றிற்கு ஒரு விடையாக புதிய தானியங்கிக் கணக்கு ஒன்று அறிமுகமாகியுள்ளது. அந்தந்த நேரத்திற்குப் பிரபலமான அதாவது அதிகம் ரீடிவிட் எனப்படும் மறுகீச்சுக்கள் பெற்ற கீச்சுக்களை எல்லாம் தொகுக்கிறது. தமிழில் யார் கீச்சினாலும் அதனையும் பார்த்து பிரபலக் கீச்சுக்கள் தொகுக்கப்படுகிறன

டிவிட்டரில் பயனர் அனைவரையும் பின்தொடர்ந்து கீச்சுக்களைப் படிக்கமுடியாதவர்களும், முத்தாய்ப்பாய் அன்றைய அல்லது அப்போதைய *பிரபல கீச்சுக்களை மட்டும் படிக்கவிரும்புகிறவர்களுக்கும் இத்தானியங்கிக் கணக்கு உதவும்

முகவரி
http://twitter.com/RT_tamil

மேலும் விபரமறிய இங்கு செல்லவும்